இறைபணிக்காக இணைந்து நிற்கும் எனதருமை இஸ்லாமிய சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
'இறைமறையில் அறிவியல் அற்புதங்கள்' என்ற தொடரின் மூலம், பல ஆண்டுகள் ஆய்வு செய்து, பல நூறு அறிவியல்அறிஞர்களின் கடுமையான உழைப்பிற்கு பின் கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளை 15 நூற்றாண்டுகளுக்கு முன்பு, அறிவியல் வாடையைக்கூட அறிந்திராத மக்களுக்கு முன்பு மிக எளிமையாக இறைவன் குர்ஆனில் கூறியிருக்கும்அறிவியல் அதிசயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள முன்வந்திருக்கிறேன்.
இறைவன் கூறியிருக்கும் விதம் அறிவியல் அறியாத மக்களும், அறிவியலின் உச்சானியில் இருக்கும் மக்களும் மிக எளிமையாக புரிந்து கொள்ளும் அமைப்பில் இருப்பது அதன் அதிசயங்களில் பேரதிசயமாகும். எந்த காலத்தில் வாழ்ந்த மக்களும் அவர்கள் புரிந்து கொண்ட அறிவியல்உண்மைகளுக்கு எதிராக குர்ஆனின் வசனங்கள் ஒரு போதும் இருந்ததில்லை, இனிமேலும் அவ்வாறு இருக்கப்போவதுமில்லை.வௌ'வேறு காலங்களில் கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளை அந்தந்த காலத்தில் வாழ்ந்த அறிவியல் அறிஞர்கள் புரிந்து கொள்ளும் விதத்தில் குர்ஆன் வசனங்கள் அமைந்திருப்பது அதன் தனிச்சிறப்பாகும்.
ஒரு காலத்தில் கண்டு பிடிக்கப்பட்ட அறிவியல் உண்மைகள் தவறு என நிரூபணம் செய்யப்படும் போது, குர்ஆன் சொன்ன கருத்து தவறு என்று ஆகாது, மாறாக அவர்கள் திருகுர்ஆனை விளங்கிக் கொண்ட விதம், குர்ஆனின் வசனத்திற்கு அவர்கள் கொடுத்த பொருள்தான் தவறு என்றாகும்.
தற்போது கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் உண்மையின் படியே இறைவசனம் பொருள் தருகிறது என்று ஒவ்வொரு காலத்து மக்களையும் நம்ப வைப்பதும், எல்லா காலத்து அறிவியல் அறிஞர்கள் கூறும் கருத்துடன் நூற்றுக்கு நூறு பொருந்தி வருகிறது என்று சொல்ல வைப்பதும் அதன் அழியாத அற்புதங்களில் உள்ளதாகும். இந்த அற்புதம் குர்ஆனுக்கு மட்டுமே சொந்தமானதாகும்.
வேத நூற்களில் அறிவியல் ஆராய்ச்சி செய்ய தூண்டும் ஒரே வேதம் குர்ஆன் மட்டும் தான் என ஆணித்தரமாக என்னால் சொல்லமுடியும். மற்ற வேதங்கள் அவ்வாறு தூண்டவில்லை என்பதைவிட அறிவியல் உண்மைக்கு எதிராக நிற்கிறது, அறிவியல் பேசுபவர்களை குழப்பவாதிகள், மாபெரும் குற்றவாளிகள் என முத்திரை குத்தி மரண தண்டனை விதிக்கப்பட்ட வரலாறுகளைத்தான் நம்மால் படிக்க முடிகிறது.
மற்ற வேதங்கள் இறைவனால் அருளப்பட்ட நிலையிலிருந்து மாறி, பல மாற்றங்களுக்கு உட்படுத்தப் பட்டுவிட்டதால், பல அறிவியல் உண்மைகளுக்கு எதிராக இயற்கையாகவே அவைகள் அமைந்துவிட்டன. மத குருமார்களின் ஆதிக்கம் வலுவாக இருந்த போது, அறிவியல் பேசுவோர்கள் சமூக விரோதிகளாக, இறைக்குற்றம் செய்து விட்டவர்களாககருதப்பட்டு, சிறையிலடைத்து சித்திரவதை செய்யப்பட்டு வந்தார்கள், தங்களது கருத்துகளிலிருந்து பின் வாங்கியவர்களுக்கு உயிர்பிச்சை அளிக்கப்பட்டது, தான் கண்டுபிடித்த அறிவியல் உண்மையிலிருந்து பின்வாங்கதவர்கள் மரண தண்டனை விதிக்கப்பட்டு கொல்லப் பட்டார்கள். இந்த கொடுமை மதத்தின் பெயரால், வேதத்தின் பெயரால் அரங்கேற்றம் செய்யப்பட்டது என்பதுதான் அதிலும் கொடுமையாக இருந்தது.
இந்தக் கொடூரம் வேதங்களின் பெயரால், அரங்கேற்றம் செய்யப்பட்டு கொண்டிருந்த காரணத்தால் பல அறிவியல் விஞ்ஞானிகள், 'இறைவன் இல்லை', 'வேதம் பிற்போக்கான கருத்துடையது' என்ற முடிவுக்கு வர வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானார்கள்.
ஆனால் எந்த வேத நூலுக்கும் இல்லாத ஒரு தனி சிறப்பு இந்த குர்ஆனுக்கு இருப்பதால்தான், மேலும் அறிவியல் உலகைப் படைத்த அல்லாஹ்வால் அருளப்பட்ட வேதமாகவும் இருப்பதால்தான் இன்று அறிவியல் உலகிற்குகூட அதனால் சவால் விட்டு, நிமிர்ந்து நிற்க முடிகிறது. குர்ஆனை போல இலக்கிய சுவையும், கருத்தாழமும், அறிவியல் உண்மைகளை எளிமையாக எடுத்து வைக்கும் அதன் சிறப்பு பொருந்திய ஒரு வசனத்தையாவது இந்த உலக மக்களால் கொண்டு வர முடியுமா? என அது எடுத்து வைக்கும் சவாலை 15 நூற்றாண்டுகளாக யாராலும் எதிர்கொள்ள முடியவில்லையே, இனிமேலும் அதனை எதிர்கொள்ள முடியாது என்பது இரண்டு கருத்துக்கு இடமில்லாத உண்மையாகும்.
வானவியல், புவியியல் என எத்தனை இயல்கள் இருக்கின்றனவோ அத்தனை இயல்களையும் ஆராய்ச்சி செய்து அல்லாஹ்வின் அற்புத ஆற்றலை புரிந்து கொள்ள தூண்டுகிற ஒரே வேதம் குர்ஆன் மட்டுமே.
இந்த அறிவியல் உண்மைகளை 15 நூற்றாண்டுகளுக்கு முன்பே குர்ஆன் மூலம் இந்த உலகிற்கு மிக எளிமையான முறையில் உணர்த்தப்பட்டு விட்டது என்பதை விளக்குவதே எனது நோக்கம்.
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த காலம், ஒவ்வொரு துறை குறித்தும் தெளிவான, தீர்க்கமான தகவல்களை தந்து கொண்டிருக்கும் அறிவியல் நுட்பம் நிறைந்த காலம். மதத்தின் பெயரால் மூட நம்பிக்கைகளை வளர்ப்பது கடினம், எந்த தகவலையும் அறிவியல் தகவலோடு ஒப்பீடு செய்து பார்த்து ஏற்றுக் கொள்ளும் காலம் இது. மருத்துவ துறையில் இன்று புதிதாக கண்டு பிடிக்கப்பட்ட உண்மைகள் குர்ஆனில் எந்தந்த வசனங்களில் இடம் பெற்றுள்ளது என்று வாசகர்களுக்கு இனம் காட்டுவதே எனது முக்கிய நோக்கம். அதன் மூலம் குர்ஆன் இறைவேதம் என்பதை எளிதாக புரிந்து கொள்ள மிக வசதியாக இருக்கும்.
அல்லாஹ் எனது நல்ல நோக்கத்திற்கு வெற்றியை தருவானாக. எனக்கு இப்படி ஒரு சேவை செய்வதற்கு வாய்பளித்த இறைவனுக்கு நன்றி.
.
கருயியல்
கருயியல் என்பது மனிதன் கருவுற்று அவன் எவ்வாறு தாயின் வயிற்றில் வளர்ச்சி அடைந்து, முழு மனித வடிவம் பெற்று பிறக்கிறான் என்ற தகவலை ஆய்வு செய்யும் ஒரு துறையாகும். ஒரு பெண் கருவுற்ற நாள் முதல், அவளது வயிற்றில் குழந்தை எந்தந்த நிலையில் எவ்வாறு வளர்ச்சி அடைகிறது என்பது பற்றிய அறிவு சிறிய அளவுகூட இல்லாத காலகட்டத்தில் குர்ஆனில் மிக தெளிவாக, அதே நேரத்தில் மிக எளிமையாக கருவளர்ச்சியின் எல்லா விவரங்களையும் கூறப்பட்டிருப்பது அறிவியல் அறிஞர்களை வியப்பில் ஆழ்த்துகிறது.
பதினான்கு நூண்றாண்டுகளுக்கு முன் எல்லாம் வல்ல இறைவனால் நமது நபிக்கு ஜிப்பரயீல்(அலை) மூலமாக அருளப்பட்ட இத்தன்னிகரற்ற மாமறையில் தெரிவித்துள்ள வாழ்க்கை நெறிகளும், அறிவியல் உண்மைகளும் இறைச்சட்டங்களும் இனி எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் காலத்துக்கேற்ப பொருந்தி நிறைந்து நிற்பவை என்பது உண்மை.
இவ்வரிய திருமறை வருடம் ஒரு முறையும், நமது நபி(ஸல்) அவர்களின் இறுதியாண்டு வாழ்க்கையில் இரு முறையும் ஜிப்பரயீல்(அலை) அவர்களின் மூலம் சரிபார்க்கப்பட்டும், ஆயிரமாயிரம் சத்திய சஹாபாக்களால் மனனம் செய்யப்பட்டும், பிரதிகள் எடுக்கப்பட்டும் இன்றுவரை ஒரு எழுத்துக்கூட மாற்றம் செய்யப்படாமல் இறையருளால் பாதுகாக்கப்பட்டு, இத்திருமறை 'இறைவசனமே' என உலகிற்கு தெளிவாக்கி கொண்டிருக்கிறது.
அறிஞர்களும், விஞ்ஞானிகளும், பல்துறை வல்லுனர்களும் நம் திருமறையில் புதைந்துகிடக்கும், காலத்துக்கேற்ப பொருந்தி நிற்கும், உண்மைகளை கண்டு வியந்து நிற்கின்ற வேளையில், ஒரு சில அறிவிலிகள், 1400 ஆண்டுகள் பழமைவாய்ந்த, ஒரு படிப்பறிவில்லாத நபரின் வாக்குகள் இந்த நூற்றாண்டுக்கு ஏற்றதல்ல என வீராப்பு பேசி எதிர்த்து சேறு பூச விழைகின்றனர்.
அன்பு சகோதரர்களே!, இவ்வெதிர்ப்புக்கள் நமக்கு புதிதல்ல. இஸ்லாம் என்கின்ற வாழ்க்கைநெறி இப்பூலோகத்தில் வேரூன்றி உயர்ந்து நிற்க அது கொடுத்த விலையான தியாகங்களும், உயிர்களும் உலகில் தோன்றிய எந்த ஒரு மதத்திற்கும் ஏற்பட்டதல்ல. இந்த உலகம், நமக்கு உரியதான அடுத்த நிரந்தர உலகத்திற்கு நம்மை தயார்படுத்திக் கொள்ளும் ஒரு பயிற்சி களமே, (நபி மொழி) என்ற சிந்தனையுடன் இச்சத்திய நெறிகளை வேரூன்ற தம் இன்னுயிரையும், உடமைகளையும் நீத்த ஆயிரமாயிரம் நபித்தோழர்களையும், இஸ்லாமிய உடன் பிறப்புகளையும் மனதில் நினைத்து இறைவனிடம் அவர்கள் நிரந்தர வாழ்க்கைக்கு இறைஞ்சி நமது இறைப்பணியை இனிதே தொடர்வோம்.
இச்சிறிய முன்னுரையோடு, இதழ்கள்தோறும் இறைமறையில் புதைந்து கிடக்கும் அறிவியல் உண்மைகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். ஆலோசனைகளும் கருத்துகளும் கேள்விகளும் வரவேற்கப்படுகின்றன.
இந்த வரிசையில், மனிதன் எவ்வாறு உருவாக்கப்படுகிறான் என்பதை, இறைமறை விளக்குவதை பார்ப்போம்.
நிச்சயமாக (முதல்) மனிதனைக் களிமண்ணின் மூலச்சத்திலிருந்து படைத்தோம். பின்னர் (அதற்கென உள்ள) ஒரு பாதுகாப்பான இடத்தில் (கர்ப்பப்பையில்) நாமே அவனை இந்திரியத்துளியாக ஆக்கினோம். பின்னர் அதை அலக் என்ற நிலைக்கு மாற்றினோம். பின்னர் 'அலக்' என்பதை சதைத்துண்டாக ஆக்கினோம். சதைதுண்டை எலும்பாக ஆக்கி, எலும்புக்கு மாமிசத்தை அணிவித்தோம். பின்னர் வேறு படைப்பாக (முழு மனிதனாக) உருவாக்கினோம். ஆகவே படைப்பாளர்களில் அழகானவனான அல்லாஹ் உயர்ந்தவனாக ஆகிவிட்டான்.
(உலக பொது வேதம் அல்-குர்ஆன் 23:12-14)
சகோதரர்களே! மனித கருவளர்ச்சியியலை இவ்வளவு துல்லியமாக வௌ;வேறு நிலைகளில் அதன் உருமாற்றம், கால அளவு, குணாதிசயங்களை படைப்பாளனால் மட்டுமே தெளிவாக்க இயலும்.
நான் கருவளர்ச்சியியலில் ஆழமாக செல்லாமல் இவ்வசனத்தின் சிறப்பை மட்டும் தெளிவாக்குகிறேன். 'அந்த இந்திரியத்துளியை கர்பப்பையில் ஒரு பாதுகாப்பான நிலையில் வைத்தோம்' அதாவது, கர்பப்பையின் அமைப்பு, அதன் தசைத்தன்மை, சிறப்பு இரத்த ஓட்ட அமைப்பு அதன் திசுவுடைய குணங்கள் எல்லாம் அதற்கே (குழந்தை வளர்ச்சிக்கே) உரித்தானவை. இச்சிறப்பு அமைப்பு இது போன்ற வேறு எந்த உறுப்புகளுக்கும் இல்லை. செயற்கை முறையில் கருத்தரித்தல் செய்தாலும் அதை (கருவை) பின்னர் இக் கருப்பையில்தான் வைத்து வளர்க்க முடியும். மேலும் 'பாதுகாப்பான நிலையில்' வைத்தோம் என்கிறான். அதாவது இக்கருவை கர்ப்பபையின் 'உடம்பு' என்ற பகுதி அல்லாது வேறு எந்த பகுதியில் வைத்தாலும் (கருவை) கரு முழு வளர்ச்சி அடைவதில்லை. (யுடிழசவ) அபார்ட் ஆகிவிடும். எனவேதான் இறைவன் 'பாதுகாப்பான இடத்தில்' (உடம்பு பகுதியில்) வைத்ததாக கூறுகிறான்.
இந்த வசனங்களை உன்னிப்பாக கவனிக்கும் போது இறைவன் கர்ப்பப்பையை பொதுவாக குறிப்பிடும் போது 'ரஹ்ம்' என்று தான் இறைமறையில் பல இடங்களில் குறிப்பிடுகிறான்.
அடுத்து விந்து துளியை 'அலக்' என்ற நிலைக்கு மாற்றினோம் என்று வருகிறது.
'அலக்' என்ற அரபி வார்த்தைக்கு
1. அட்டை,
2. தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு பொருள்,
3. இரத்தக்கட்டி என்ற பொருள்கள் உண்டு.
அட்டையையும், 'கரு'வையும் ஒப்பிட்டு பார்க்கும் போது சில ஒற்றுமைகள் உண்டு.
1. இந்த இரண்டின் ஒருமித்த தோற்றம்.
2. அட்டை மற்றவர்களின் இரத்ததைத் உணவாகக் கொள்கிறது. கருவும் தாயின் இரத்ததைத்தான் உணவாக்குகிறது.
அடுத்து தொங்கிக்கொண்டிருக்கும் பொருள் என்பது தாயின் கர்ப்பப்பையில் ஒட்டிக் கொண்டிருக்கம் குழந்தை கருக்கு மிக்க பொருத்தமான பொருள்தானே!.
இரத்தக்கட்டி என்ற பொருளும் மிகச்சரியானதே. எவ்வாறு எனில் 'கரு' உருவான முதல் மூன்று வாரங்களும் இரத்தக்கட்டி போன்றுதான் இருக்கும். (இரத்த ஓட்டம் இருக்காது. சுப்ஹானல்லாஹ்! இறைவன் அந்த 'அலக்' என்ற வார்த்தையில் கருவின் இயல்புகள், குணங்கள், வளர்ச்சிநிலை போன்றவற்றை வியக்கும் படி தெரிவித்துள்ளான்.
மனிதன் மண்ணால் படைக்கப்பட்டானா?
முதல் மனிதன் எவ்வாறு படைக்கப்பட்டான் என்பது பற்றி அறிந்து கொள்வது, 'கரு'வில் குழந்தையின் வளர்ச்சியின் நிலைகள் பற்றி தெளிவாக புரிந்து கொள்வதற்கு துணையாக இருக்கும் என்பதனால் அது பற்றி குர்ஆன் என்ன சொல்கிறது, அறிவியல் உலகம் என்ன முடிவு எடுத்திருக்கிறது என்று இந்த தொடரில் பார்ப்போம்.
முதல் மனிதன் எவ்வாறு படைக்கப்பட்டான் என்பதில் மதவாதிகளுக்கும், (யூதர்கள், கிருஸ்தவர்கள்) 'இயற்கையே கடவுள்' என நம்பிக்கை கொண்டுள்ள நாத்திகவாதிகளுக்கும் இடையில் நீண்ட நாட்களாகவேகருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன.
'பாத்திரங்கள் எவ்வாறு மண்ணிலிருந்து செய்யப்படுகிறதோ, அது போல் மண்ணிலிருந்து நேரடியாக மனித உருவம் செய்யப்பட்டு உயிரூட்டப்பட்டது' என்று மதவாதிகள் நம்பி வருகிறார்கள்.
இயற்கையை இறைவனாக ஏற்றுக் கொண்டவர்கள் 'அமீபா' என்ற ஒரு செல் உயிரினத்திலிருந்து வளர்ச்சி அடைந்து இயற்கையாக பல மாற்றங்களுக்குள்ளாகி பல்வேறு உயிரினங்களாக தோன்றி, அது குரங்கு நிலைக்கு வந்து, அதன் பிறகு நிகழ்ந்த மாற்றத்தில் குரங்கிலிருந்து முதல் மனிதன் தோன்றினான் என்ற டார்வினின் (செத்து போன) தத்துவத்தை(?) நம்பி வருகிறார்கள்.
இந்த இரண்டு கருத்துமே தவறானது என்ற முடிவுக்கு வந்துள்ளது இன்றைய விஞ்ஞான உலகம். 'அமீபா'விலிருந்து இயற்கையாகவே வளர்ச்சி அடைந்து, மனிதனுடைய நிலைக்கு வந்திருப்பது உண்மை என்று நாம் நம்ப வேண்டும் எனில் அந்த வளர்ச்சி தொடர்ந்து நடைபெற்று, மனிதனிலிருந்து வேறு ஒரு உயிரினம் உருவாகி இருக்க வேண்டும். மனிதன் உருவாகி பல ஆயிரம் ஆண்டுகள் ஆகியும் அதுபோன்ற மாற்றம் நிகழ்ந்துள்ளதாக செய்திகள் இல்லை. அவ்வாறு நிகழ்வதற்கான அறிகுறிகூட இல்லை. குரங்கு மனிதனாக மாறியது உண்மை எனில் இப்போதுள்ள குரங்குகள் ஏன் மனிதனாக மாறுவதில்லை?
படைப்பாளன் இல்லாமல் ஒரு பொருள் உருவாகும் என்பதை எந்த காலத்தில் வாழ்ந்த அறிவியல் அறிஞர்களாலும் நிரூபணம் செய்ய முடியவில்லை. அவ்வாறு கற்பனை செய்துகூட பார்க்க முடியாது என்பது தான் உண்மை. எனவே டார்வினின் 'இயற்கையாக எல்லாப் பொருளும் வந்தன' என்ற தத்துவம் (?) குப்பையில் தூக்கி எறியப்பட வேண்டிய ஒன்று என்ற முடிவுக்குத்தான் வர முடிகிறது.
மண்ணிலிருந்து நேரடியாக மனித உருவம் செய்யப்பட்டு உயிரூட்டப்பட்டது என்று மதவாதிகளால் நீண்ட காலமாக நம்பப்பட்டு வரும் தகவலையும்அறிவியல் உலகம் ஏற்றுக் கொள்ளவில்லை. அவ்வாறு செய்யப்பட்டிருப்பதற்கு சாத்தியங்கள் குறைவு என்பதற்கு பல காரணங்களை முன் வைக்கிறார்கள்.
மண்ணின் 'மூல'சத்திலிருந்து படைக்கபட்டான் மனிதன்
மண்ணையும், மனிதனையும் ஆய்வு செய்த போது இரண்டின் மூலங்களும் ஒரே பண்புடையதாக இருக்கிறது, எனவே மண்ணின் மூலப் பொருள்களை எடுத்துதான் மனிதன் படைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று இன்றையஅறிவியல் அறிஞர்கள் கூறி வருகிறார்கள். அவர்கள் இந்த முடிவு எடுப்பதற்கு பல ஆண்டுகள் ஆய்வு செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
(மண்ணிற்கும் மனிதனுக்கும் பொதுவாக அமைந்திருக்கும் வேதியில் தனிமங்கள்: பிராணவாய்வு, கால்சியம், பொட்டாசியம், உப்பு, கார்பன், ஹைட்ரஜன், பாஸ்பரஸ், கந்தகம், சோடியம், நைட்ரஜன், குளோரின், மெக்கினீசியம், இரும்பு, செம்பு போன்றவைகளாகும்.)
ஆனால் அல்லாஹ்வின் அருள்மறை குர்ஆனையும் நபிமொழியினையும் படித்துப் பார்த்தால் இது புது கருத்தல்ல, 1400 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லப்பட்டுவிட்ட ஒரு தகவல் ஆகும். அந்த உண்மையை புரிந்து கொள்வதற்குதான் இத்தனை ஆண்டுகள் ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் நமக்கு ஏற்பட்டுள்ளது என்பது தெரியவரும்.
முதல் மனிதனும், குர்ஆனும்
மனிதனை மண்ணிலிருந்து படைத்தோம், களிமண்ணிலிருந்து படைத்தோம் என்று குர்ஆனில் பல இடங்களில் சொல்லப்பட்டுள்ளது. இந்த வசனங்களை மட்டும் படித்து பார்ப்பவர்கள் மண்ணிலிருந்து பாத்திரங்கள் செய்யப்படுவது போல் நேரடியாக மனித உருவம் செய்யப்பட்டு உயிரூட்டப்பட்டான் என்று தான் புரிந்து கொள்கின்றனர். உண்மை அது அல்ல. மனிதனை படைப்பதற்கு தேவைப்படும் மூலக்கூறுகள் மண்ணிலிருந்து எடுக்கப்பட்டு அதன் மூலமாகத்தான் மனிதன் படைக்கப்பட்டான் என்ற செய்திதான் குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை குர்ஆன் முமுவதையும் படித்துப் பார்க்கும் ஒருவரால் எளிதாக புரிந்து கொள்ளலாம்.
மனிதன் களிமண்ணால் படைக்கப்பட்டான் என்று ஒரு வசனத்திலும், மண்ணால் படைக்கப்பட்டான் என்று வேறொரு வசனத்திலும் கூறப்பட்டுள்ளது.
هُوَ الَّذِي خَلَقَكُمْ مِنْ طِينٍ
அவன் (அல்லாஹ்) தான் உங்களை களிமண்ணால் படைத்தான்.
(உலக பொது வேதம் அல்-குர்ஆன் 6: 2)
وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَكُمْ مِنْ تُرَابٍ
இன்னும் அவன் (அல்லாஹ்) உங்களை மண்ணிலிருந்து படைத்திருப்பது அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்.
(உலக பொது வேதம் அல்-குர்ஆன் 30: 20)
குர்ஆனில் ஆதி மனிதனை படைத்த செய்தியை கூறிவரும் போது 'தீன்' (களிமண்) என்ற வார்த்தையை 6 முறையும், 'துராப்' (சாதாரண மண்) என்ற வார்த்தையை 6 முறையும் பயன்படுத்தி அல்லாஹ் கூறியுள்ளான். இயற்கையில் களிமண்ணுடைய தன்மையும், சாதாரண மண்ணுடைய தன்மையும் ஒன்றல்ல. சில மாறுபட்ட பயன்களை தரக்கூடியது. இந்த இரண்டு வித மண்ணும் மனிதனுடைய படைப்பில் நிச்சயமாக பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அதுவும் சரிசம அளவில் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். காரணம் மனிதனை களிமண்ணிலிருந்து படைத்தோம் என்ற செய்தியையும், சாதாரண மண்ணிலிருந்து படைத்தோம் என்ற செய்தியையும் குர்ஆனில் சமமான முறையில் சொல்லப்பட்டுள்ளது.
'தீன்' என்ற வார்த்தையும், 'துராப்' என்ற வார்த்தையும் ஒரே பொருளில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று வாதிப்பது தவறான போக்காகும். காரணம் அல்லாஹ் வெறுமனே ஒரு வார்த்தையைத் தேர்ந்தெடுத்து செய்திகளை சொல்வதில்லை. அவன் பல்வேறு வார்த்தைகளைப் பயன்படுத்தி ஒரே செய்தியை சொன்னாலும், அந்த ஒவ்வொரு வார்த்தையிலும் ஒவ்வொரு அர்த்தம் நிச்சயமாக மறைந்திருக்கத்தான் செய்யும்.
மனிதனை களிமண்ணில்தான் படைத்தான் என்றால் 'தீன்' என்ற வார்த்தை மட்டும் போதுமானது. அல்லது சாதாரண மண்ணில் மனிதன் படைக்கப்பட்டிருந்தால் 'துராப்' என்ற வார்த்தை மட்டும் போதுமானது. அவ்வாறிருந்தும் இரண்டு வார்த்தைகளையும் இந்த தொடரில் பயன்படுத்தப்பட்டிருப்பது மனிதன் இந்த இருவகை மண்ணிலிருந்தும் தான் படைக்கபட்டுள்ளான் என்ற தகவலைச் சொல்வதற்காகத்தான் அல்லாஹ் அவ்வாறு பயன்படுத்தி இருக்கலாம் என்று நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
அதாவது முதலில் களிமண்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை பின்வரும் 32வது அத்தியாத்தில் 7-வது வசனத்தில் இடம் பெற்றிருக்கும் வசனத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். அந்த வசனத்தில் 'மனிதனின் படைப்பை களிமண்ணிலிருந்துதான் ஆரம்பித்தான்' என்று இடம் பெற்றுள்ளது. அதன் பிறகு அந்த களிமண்ணில் சாதாரண மண்ணையும் சேர்த்து கலவையாக ஆக்கப்பட்டு அதிலிருந்து மூலக்கூறுகளை எடுத்து மனிதன் படைக்கப்பட்டுள்ளான்.
(களிமண் கொண்டு மட்டும் எந்த பொருளையும் உருவாக்க முடியாது, களிமண் கொண்டு மட்டும் உருவாக்கப்படும் பொருள் காய்ந்துவிடும் போது விரிசல் ஏற்பட்டு, உறுதிவாய்ந்ததாக இருப்பதில்லை, பாத்திரங்கள், செங்கள் போன்ற பொருட்கள் செய்வதற்கு களிமண்ணுடன் மண்ணையும் சேர்க்கும் போதுதான் உறுதி கிடைக்கும், அதனால் தான் களிமண்ணில் பாத்திரம், செங்கள் செய்பவர்கள், வீடு கட்டுவர்கள் மண்ணையும் சேர்த்து கொள்வதைப் பார்க்கிறோம். அதுபோல் சாதாரண மண் கொண்டு எந்தப் பொருளையும் தயாரிக்க முடியாது. காரணம் ஒன்றோடு ஒன்று சேரும் பிசு பிசுப்பு தன்மை அதில் இருப்பதில்லை. ஒரு பொருளை உற்பத்தி செய்வதற்கு இரு வகை மண்ணும் அவசியப்படுகிறது என்பதை நாம் நடைமுறையில் அறிந்து வருகிறோம்.)
இந்த இரு வகை மண்ணின் கலவைதான் மனிதனின் படைப்பிற்கு அடிப்படை. இந்த இருவகை மண்ணிலிருந்து நேரடியாக மனித உருவம் செய்து, அந்த உருவத்தில் உயிரூட்டப்பட்டு மனிதன் படைக்கப்படவில்லை. மாறாக இந்த இரு வகை மண்ணின் கலவையினை பல வேதியில் மாற்றங்களுக்கு உட்படுத்தி, அந்த கலவையிலிருந்து மனிதனைப் படைப்பதற்கு தேவையான 'மூல' த்தை எடுத்து அந்த மூலத்திலிருந்துதான் முதல் மனிதன் படைக்கப்பட்டான். இதனை நாம் கற்பனையாக சொல்லவில்லை. மனிதன் படைக்கப்பட்ட செய்தியினை கூறும் பின்வரும் இறைவசனங்கள், நாம் எடுத்து வைக்கும் வாதத்தை உறுதி படுத்துகிறது. மனிதன் எவ்வாறு படைக்கப்பட்டான் என்ற தகவலைத் தரும் வசனங்களை நிதானமாக படித்துப் பார்க்கும் இந்த கருத்தினை எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது.
الَّذِيْ أَحْسَنَ كُلَّ شَيْءٍ خَلَقَهُ وَبَدَأَ خَلْقَ الْأِنْسَانِ مِنْ طِينٍ
(அவன்) எத்தகையவனென்றால் அவன் படைத்த ஒவ்வொரு பொருளையும் (அதன் வடிவமைப்பையும்) மிக்க அழகாக்கி வைத்தான். மேலும் மனிதனின் படைப்பை களி மண்ணிலிருந்து ஆரம்பித்தான்.
(உலக பொது வேதம் அல்-குர்ஆன் 32: 7)
இந்த வசனத்தில் 'மனிதனின் படைப்பை களி மண்ணிலிருந்து ஆரம்பித்தோம்' என்று கூறப்பட்டுள்ளது. இதுதான் மனித படைப்பின் ஆரம்ப நிலை.
களி மண்ணிலிருந்து நேரடியாக மனிதம் உருவம் செய்து உயிரூட்டப்பட வில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது. மனிதனின் படைப்பை களி மண்ணிருந்து ஆரம்பித்து, எந்தந்த நிலையை அடைந்து, அது எவ்வாறு முழுமை அடைந்தது என்று அடுத்தடுத்த வசனங்களின் மூலம் அல்லாஹ் கூறி வருகிறான்.
إِنَّا خَلَقْنَاهُمْ مِنْ طِينٍ لازِبٍ
நிச்சயமாக நாம் அவர்களை பிசு பிசுப்பான களிமண்ணிலிருந்து படைத்திருக்கின்றோம்.
(உலக பொது வேதம் அல்-குர்ஆன் : 37:11)
இது மனித படைப்பின் இரண்டாவது நிலை
பிசு பிசுப்பான களிமண்ணிலிருந்து மனிதன் படைக்கப்பட்டதாக இந்த வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான். களிமண் பிசுபிசுப்பான நிலைக்கு எப்போது மாறும்? களிமண்ணுடன் தண்ணீர் சேர்க்கப்படும் போது அது பிசுபிசுப்பான நிலைக்கு மாறி விடுகிறது. இந்த வசனத்தின் மூலம் மனிதனின் படைப்பில் தண்ணீரும் சேர்க்கப்பட்டுள்ளது என்ற செய்தியையும் சேர்த்து புரிந்து கொள்ள முடிகிறது. (மனிதன் உடலமைப்பில் 75 சதவீதம் தண்ணீர் இடம் பெற்றிருப்பது இங்கே கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்.) களிமண்ணில் தண்ணீர் சேர்த்து பிசு பிசுப்பான நிலைக்கு கொண்டு வரப்பட்டு சில காலம் அதே நிலையில் இருந்தது. (எவ்வளவு காலம் என்பது அல்லாஹ்விற்கு மட்டும் தெரிந்த விஷயம்.)
وَلَقَدْ خَلَقْنَا الْأِنْسَانَ مِنْ صَلْصَالٍ مِنْ حَمَأٍ مَسْنُونٍ
மாற்றமடைந்து துர்வாடை ஏற்படும் கறுப்பு மண்ணிலிருந்து மாறிய, தட்டினால் ஓசை வரும் களிமண்ணிலிருந்து நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம்.
(உலக பொது வேதம் அல்-குர்ஆன்: 15: 26)
இந்த வசனத்தில் மனித படைப்பின் மூன்றாவது மற்றும் நான்வாது நிலையினை அல்லாஹ் கூறி இருக்கிறான்.
'ஹமஉ' என்றால் கருப்பு மண் என்பது பொருளாகும். 'மஸ்னூன்' என்றால் மாற்றமடைந்து துர்வாடை ஏற்படும் மண் என்பது பொருளாகும்.
மண், களிமண், தண்ணீர் ஆகிய மூன்றும் சேர்ந்த கலவையை அதே நிலையில் சில காலம் விட்டு வைக்கப்பட்டு விட்டது நீண்ட நாட்கள் (எவ்வளவு நாள் என்பதை அல்லாஹ் அறிவான்.) இருந்த அந்த கலவை சாக்கடை மண்ணைப்போல கருப்பு நிறமாக மாறி, துர்வாடை ஏற்படும் நிலைக்கு மாறிவிட்டது. (சாக்கடையில் நீண்ட நாட்கள் கிடக்கும் மண் கருப்பு நிறமாக மாறி, துர் நாற்றம் வீச ஆரம்பிக்கும் என்பதை நாம் அறிவோம்.) இது மனிதப்படைப்பின் மூன்றாவது நிலை.
خَلَقَ الْأِنْسَانَ مِنْ صَلْصَالٍ كَالْفَخَّارِ
சுட்டெடுத்த மண்பாண்டத்தைப் போல (தட்டினால்) ஓசை வரும் களிமண்ணால் அவன் (முதல்) மனிதரைப் படைத்தான்.
(உலக பொது வேதம் அல்-குர்ஆன்: 55:14)
இது மனிதப்படைப்பின் நான்காவது நிலை
'ஸல்ஸால்' என்பது மண் கலந்து சுட்டெடுக்கப்பட்ட காய்ந்த களி மண்ணாகும். அதனை தட்டினால் 'ஸல், ஸல் என ஓசை தரும் என்பதால் அதற்கு 'ஸல்ஸால்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்த 'ஸல்ஸால்' என்ற வார்த்தையின் மூலம்தான் முதல் மனிதனின் படைப்பில் களிமண்ணுடன் சாதாரன மண்ணும் சேர்க்கப்பட்டுள்ளது என்ற உண்மையை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. நான் ஆரம்பித்தில் குறிப்பிட்ட தகவலை இது ஊர்ஜிதம் செய்கிறது.
وَلَقَدْ خَلَقْنَا الْأِنْسَانَ مِنْ سُلالَةٍ مِنْ طِينٍ
நிச்சயமாக (முதல்) மனிதனை களி மண்ணின் மூலச்சத்திலிருந்து படைத்தோம்.
(உலக பொது வேதம் அல்-குர்ஆன்: 23:12)
இது மனிதப்படைப்பின் ஐந்தாவது நிலையாகும்.
முதல் மனிதன் களிமண்ணுடைய மூலச்சத்திலிருந்துதான் படைக்கப்பட்டிருக்க முடியும் என்று இன்று கண்டு பிடிக்கப்பட்ட அறிவியல் உண்மையை 1429 மூன்று ஆண்டுகளுக்கு முன்பே அறிவியில் அறிவு அறவே இல்லாத காலத்து மக்களுக்கு முதல் மனித படைப்பு எவ்வாறு நிகழ்ந்தது என்பதை மிக எளிமையாக இந்த குர்ஆன் எடுத்து சொல்லியிருக்கிறது. அது குர்ஆனின் அதிசயங்களில் ஒன்றாகும்.
அல்லாஹ் ஒரு பொருளைப் படைப்பதற்கு எந்த காரணங்களும் அவசியமில்லை. 'குன்' என்று சொன்னால் அந்தப் பொருள் உடனடியாக உண்டாகிவிடும்.
إِنَّمَا أَمْرُهُ إِذَا أَرَادَ شَيْئاً أَنْ يَقُولَ لَهُ كُنْ فَيَكُونُ
அவன் யாதொரு பொருளை(ப் படைக்க) நாடினால், அதற்கு அவன் கட்டளையிடுவதெல்லாம் 'ஆகுக!' எனக் கூறுவதுதான் உடனே ஆகிவிடும்.
(உலக பொது வேதம் அல்-குர்ஆன்: 36: 82)
எனினும் உலகில் ஒரு நியதியை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான். வானத்தையும் பூமியையும் ஏழு நாட்களில் படைத்ததிருப்பதும் அந்த நியதிப்படிதான். (அல்லாஹ்விடத்தில் ஒரு நாள் என்பது நாம் கணக்கிடும் ஆயிரம் ஆண்டுகளுக்கு சமமானதாகும்.) எந்த பொருளையும் திடீரென படைத்து விடுவதில்லை. முதல் மனிதனை படைப்பதற்கு எந்த பொருளின் துணையும், எந்த முன்மாதிரியும் இல்லாமால் இறைவனால் படைக்க முடியும் என்றாலும் மண், களிமண், தண்ணீர் கலவையினை பல வேதியில் மாற்றங்களுக்கு உட்படுத்தி அதிலிருந்து மனிதனைப் படைப்பதற்கு தேவையான மூலப்பொருட்களை உருவாக்கி, அந்த மூலத்திலிருந்து முதல் மனிதனைப் படைத்துள்ளதும் இந்த நியதிப்படிதான்.
மனிதர்கள் எவ்வாறு படைக்கப்படுகின்றனர்?
மண் கலவையிலிருந்து எடுக்கப்பட்ட மூலத்தில் முதல் மனிதர் படைக்கப்பட்டார் என்ற உண்மையைப் புரிந்து கொண்டோம். இந்த தொடரில் அவரது சந்ததிகளான மனிதர்கள் எவ்வாறு படைக்கப்படுகின்றனர் என்ற தகவல் பற்றி குர்ஆன் என்ன கூறுகிறது என்று அறிந்து கொள்வோம்.
முதல் மனிதர் படைக்கப்பட்டது போல அவரது சந்ததிகளையும் மண்ணின் மூலத்திலிருந்து நேரடியாக படைக்கப்பட வில்லை என்பது தெளிவான உண்மை. தொடர்ந்து உற்பத்தியாகும் மரபணுக்கள் வழியாக இனப்பெருக்கம் நடை பெற்றிருக்க வேண்டும். ஏனெனில் முதல் மனிதரைப் போலவே அவரது சந்ததிகளும் மண்ணின் மூலத்திலிருந்து படைக்கப்படுகின்றனர் என்றால் ஒவ்வொரு மனிதனின் படைப்பிற்கும் ஒரு நீண்ட கால அவகாசம் தேவைப்படும். அது நடை முறைக்கு சாத்தியமற்றது.
எனவே மனிதர்களின் மரபணுக்கள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்பட்டு, மனிதர்கள் படைக்கப்பட்டிருக்க வேண்டும். அந்த மரப்பணுக்களை மனிதர்களிலிருந்தே உற்பத்தி செய்து, மனித சமுதாயத்தை படைத்திருக்க முடியும் என்பது நடைமுறையில் மட்டுமல்லாமல் அறிவியில் உலகிலும் ஒத்துக் கொள்ளப்படும் விஷயமாகும். அந்த மரப்பணுக்களால் மனித சந்ததிகள் எவ்வாறு படைக்கப்படுகின்றனர் என்பதுதான் இந்த தொடரின் மையப் பொருளாகும்.
يَا أَيُّهَا النَّاسُ إِنَّا خَلَقْنَاكُمْ مِنْ ذَكَرٍ وَأُنْثَى
மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண் மற்றும் ஒரு பெண்ணிலிருந்து படைத்தோம்.
(உலக பொது வேதம் அல்-குர்ஆன் : 49:13)
இந்த வசனத்தில் மனிதர்கள் அனைவரும் ஒரு ஆண், பெண்ணிலிருந்துதான் படைக்கப் பட்டனர் என்ற செய்தியை அறிந்து கொள்கிறோம். அதாவது மனிதர்கள் தொடர்ச்சியாக படைக்கப்படுவதற்கு தேவையான மரப்பணுக்களை ஆண் மற்றும் பெண்ணிடம் உற்பத்தி செய்து அதன் மூலம் மனித சமுதாயம் படைக்கப்படுகிறது என்ற உண்மையை புரிந்து கொள்ளலாம்.
விந்துவில் இறைவன் செய்யும் விந்தைகள்
களிமண்ணின் மூலச்சத்திலிருந்து முதல் மனிதரை படைத்த அல்லாஹ் அந்த முதல் மனிதரின் சந்ததிகளை அவரது விந்துவின் மூலத்திலிருந்து படைத்தான்.
ثُمَّ جَعَلَ نَسْلَهُ مِنْ سُلالَةٍ مِنْ مَاءٍ مَهِينٍ
பின்னர் வடிகட்டி எடுக்கப்பட்ட அற்ப நீரில் (இந்திரியத்தில்) இருந்து அவனுடைய சந்ததியை உண்டாக்கினான்.
(உலக பொது வேதம் அல்-குர்ஆன்: 32:8)
மனித சந்ததிகளை விந்துவிலிருந்து படைத்த செய்தியை அல்லாஹ் சுமார் 15 இடங்களில் கூறுகிறான். 12 இடங்களில் நுத்ஃபா என்ற வார்த்தையையும், 3 இடங்களில் மாஉ என்ற வார்த்தையையும் பயன்படுத்தி கூறியுள்ளான்.
நுத்ஃபா என்பதற்கு சுத்தமான நீர் என்பது பொருளாகும். ஆணுடைய விந்து, எந்த வித மாசுகளும் சென்றடைந்திராத பாதுகாப்பான இடத்திலிருந்து வெளியேறுவதால் அதற்கு நுத்ஃபா என்ற பெயர் பொருத்தமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆணுறுப்பிலிருந்து குதித்து வெளியாகும் வழுவழுப்பான திரவத்திற்கு விந்து எனப்படும்.
இந்த விந்துவில் இறைவன் செய்யும் விந்தைகள் இறைவனுக்கு மட்டுமே தெரிந்த வித்தையாகும். அற்பமான ஒரு துளி விந்துவில் பல அதிசயங்கள் நிகழ்த்தியிருப்பது அவனுடைய வியத்தகு அத்தாட்சிகளில் ஒன்றாகும்.
பல நூறு அறிவியல் அறிஞர்களின் கூட்டு முயற்சியால் முதன்முதலாக இயந்திர மனிதன் செய்யப்பட்ட போது, உலகமே வியப்பில் ஆழ்ந்து அது பற்றிய செய்திகள், ஊடகங்களில் பல மாதங்களாக தலைப்பு செய்திகளாக வெளி வந்து கொண்டிருந்தன. இயந்திர மனிதன் ஆற்றும் செயல்பாடுகள் குறித்து அதிசயங்களாக நாம் பேசிக் கொண்டிருந்தோம். அந்த இயந்திர மனிதனை உற்பத்தி செய்வதற்கு பல்வேறு தனிமங்களும், கனிமப் பொருட்களும், முன் மாதிரியும் தேவைப்பட்டன என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயமாகும்.
ஆனால் அந்த இயந்திர மனிதனையும் உருவாக்கும் ஆற்றல்கள் உள்ள நிஜ மனிதனை எந்த முன் மாதிரியும் இல்லாமல் ஒரு துளி இந்திரியத்தில் படைத்திருப்பது பேசித்தீராத அதிசயமாக உள்ளது. விந்துவிலிருந்துதான் மனிதர்கள் படைக்கப்படுகிறார்கள் என்ற செய்தியையும், அந்த விந்து எங்கிருந்து எவ்வாறு உற்பத்தியாகிறது, அதன் தன்மைகள் எவ்வாறு உள்ளது என்றும் 14 நூற்றாண்டுகளுக்கு முன்பு குர்ஆனில் மிகத் தெளிவாக கூறப்பட்டிருப்பது அதிலும் பேரதிசயமாக உள்ளது.
காரணம் மனிதர்கள் எவ்வாறு படைக்கப்படுகின்றனர் அதற்கான மூல விதை என்ன? என்பது பற்றிய அறிவு 18 ம் நூற்றாண்டு வரை அறிவியல் உலகில் யாரும் அறிந்திருக்கவில்லை. 18ம் நூற்றாண்டின் இறுதியிதில்தான் இந்த உண்மைஅறிவியல் அறிஞர்களால் புரிந்து கொள்ளப்பட்டு, அறிவியல் உலகிற்கு விளக்கப்பட்டுள்ளது.
குழந்தை உருவாகுவதற்கு ஆண் மற்றும் பெண்ணின் விந்து அவசியமானதாகும் என்ற அறிவையும் அதன் வௌ;வேறு நிலைகள் பற்றிய விளக்கத்தையும் 1940 ஆண்டுவாக்கில்தான் அந்த அறிவியல் அறிஞர்களால் பெற்றுக் கொள்ள முடிந்தது. ஆனால் குர்ஆன் இந்த தகவலை 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே கூறிவிட்டது. 49 வது அத்தியாத்தில் 13 வது வசனத்தில் மனிதர்களே! உங்களை ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணிலிருந்து படைத்தோம் என்று கூறும் இறைவேதமான குர்ஆன், 76 வது அத்தியாயம் 2வது வசனத்தில் (ஆண், பெண் ஆகியோரின்) கலப்பான இந்திரியத்துளியிலிருந்து நிச்சயமாக மனிதனை நாம் படைத்தோம் என்றும் கூறுகிறது. இதன் மூலம் குழந்தையின் உற்பத்திக்கு ஆண், பெண் ஆகிய இருவருக்கும் பெரும் பங்கு உள்ளது என்ற உண்மையை தெளிவு படுத்தியுள்ளது.
இந்த உண்மையை ஒரு சாதாரண மனிதனால் நிச்சயமாக சொல்லியிருக்க முடியாது. அதிலும் குறிப்பாக அறிவியல் வாடையே இல்லாத 1400 ஆண்டுகளுக்கு முன்பு இது போன்ற செய்தியை ஒரு மனிதர் சொல்லியிருக்க முடியும் என்பதை கற்பனை செய்துகூட பார்க்கமுடியாது. அனைத்தையும் அறிந்த அல்லாஹ் ஒருவனால்தான் சொல்லியிருக்க முடியும் என்பதை யாரும் மறுக்க இயலாது.
விந்து எவ்வாறு வெளிப்படுகிறது
فَلْيَنْظُرِ الْأِنْسَانُ مِمَّ خُلِقَ – خُلِقَ مِنْ مَاءٍ دَافِقٍ – يَخْرُجُ مِنْ بَيْنِ الصُّلْبِ وَالتَّرَائِبِ
ஆகவே மனிதன், (தான்) எதிலிருந்து படைக்கப்பட்டிருக்கிறான் என்பதை அவன் சிந்தித்து பார்க்க வேண்டாமா?
குதித்து வெளியாகும் (ஒரு துளி) நீரிலிருந்து அவன் படைக்கப்பட்டான். அது (ஆணின்) முதுகந் தண்டிற்கும் கடைசி நெஞ்செலும்புகளுக்கும் மத்தியிலிருந்து வெளிப்படுகிறது.
(உலக பொது வேதம் அல்-குர்ஆன்: 86:5-7)
இந்த வசனத்தின் மூலம் மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்ற தகவலை சிந்தனையோடு பார்க்க வேண்டும் என்று மனிதனை இறைவன் தூண்டுகிறான். அவ்வாறு சிந்திக்கும் போது அற்பமான ஒரு துளி விந்துவில் அல்லாஹ் நிகழ்த்திய அற்புத ஆற்றல்களை புரிந்து கொண்டு, அந்த அல்லாஹ்வை ஏற்று, அவனை அஞ்சி வாழ்வதற்கு அது பெரிதும் துணை புரியும்.
மனிதன் மமதை கொண்டு, படைத்தவனை நம்ப மறுத்து கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என தான்தோன்றித்தனமாக நடந்து, அநியாயமும், அக்கிரமங்களும் செய்து கொண்டிருந்த போதுதான் இறைத்தூதர்களை அனுப்பி வைத்து, மனிதர்கள் திருந்தி வாழ்வதற்கு தேவையான இது போன்ற தகவல்களை அவர்களுக்கு நினைவு படுத்தி, அந்த மனிதர்கள் திருந்தி வாழ்வதற்கு ஒரு சிறந்த வழியினை ஏற்படுத்தி தந்துள்ளான். இது போன்ற தகவலை ஒருவன் சிந்திக்கும் போது, தான் அற்பமானவன், தன்னை இந்த அழகிய தோற்றத்தில் வடிவமைத்து படைத்தவன் மிக சக்தி உள்ளவன் என்ற உண்மையை புரிந்துகொண்டு, தன்னைப்படைத்த அல்லாஹ்வை அஞ்சி வாழ்வான். அதுவே அல்லாஹ்வின் விருப்பமாகும்.
குதித்து வெளியாகும் நீர் என இறைவன் கூறியிருப்பது ஆணும் பெண்ணும் உறவு கொள்ளும் போது ஆணிடமிருந்து வெளியாகும் திரவப் பொருளான விந்துவைத்தான் இங்கு குறிப்பிடுகிறான். சிலர் ஆண், பெண் இருவரிடமிருந்து வெளியாகும் நீர் என்று பொருள் கொள்கிறார்கள். அது தவறாகும். காரணம் பெண்ணினிடம் உற்பத்தியாகும் விந்து, குதித்து வெளியாகும் தன்மையுள்ளதல்ல, அவளிடம் உற்பத்தியாகும் விந்து வெளிக்கு வருவதில்லை. குதித்து, உடலை விட்டும் வெளியாகும் தன்மை ஆணுடைய விந்துவிற்கு மட்டும் உள்ள பண்பாகும். எனவே இந்த வசனத்தில் குதித்து வெளியாகும் நீர் என்பதற்கு ஆணின் விந்து என்றுதான் பொருள் கொள்ள வேண்டும்.
அதிசயப்பிறவியான ஆறறிவு மனிதனைப் படைப்பதற்கு காரணமாக அமைந்துள்ள விந்தை உற்பத்தி செய்து, அதனை முறையாக வெளிப்படுத்தி, உரிய இடத்தில் (கர்பப் பையில்) சேர்த்து வைப்பதில் இறைவன் காட்டும் அதிசயங்கள் தான் எத்தனை? எத்தனை?
சிறுநீர் வெளியாகும் வழியும், விந்து வெளியாகும் வழியும் ஒன்றாக இருந்தாலும் அந்த இரண்டும் கலந்து விடாமல் இருக்க அவன் ஏற்படுத்தியுள்ள தடைகள்தான் எத்தகையது? சிறுநீர் வெளியாகும் போது விந்து வெளிப்படாத படியும், விந்து வெளியாகும் போது சிறுநீர் வெளிப்படாத படியும் ஏற்படுத்தப்பட்டுள்ள தடையின் இரகசியத்தை அதனை படைத்த இறைவனே நன்கு அறிந்தவன். காரணம் மிக நுணுக்கமாக திட்டமிடப்பட்டு, அமைக்கப்படும் பாதுகாப்பான குடிநீர் குழாய், சாக்கடையின் ஓரத்தில் இருக்கம் போது அந்த குழாயின் வழியாக கடத்தப்படும் குடிநீரில் சாக்கடை நீர் கலப்பதை மனித கச்திகளால் தடுக்க முடிவதில்லை. ஆனால் ஒரே உடலில் வௌ;வேறு இடங்களில் உற்பத்தியாகும் திரவங்கள், ஒரே வழியாக வெளிப்பட்டாலும் எந்த காலத்திலும் அந்த இரண்டு திரவங்களும் ஒன்றோடு ஒன்று கலந்து விடமுடியாத படி பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது இறை சக்தியல்லவா?.
குதித்து வெளியாகும் நீர் என்று கூறப்பட்டிருப்பது சிறுநீரிலிருந்து விந்தை வித்தியாசப்படுத்தி காட்டுவதற்காகவே தெரிவு செய்து போடப்பட்ட வார்த்தை. சிறுநீருக்கு குதித்து வெளியாகும் தன்மையில்லை. விந்து மட்டுமே குதித்து வெளியாகும் தன்மையில் உள்ளதாகும். அந்த தன்மை ஏன் விந்திற்கு மட்டும் உள்ளது என்று சிந்தித்தால் அதிலும் அல்லாஹ் செய்துள்ள அறிவியலின் அற்புத ஆற்றலை புரிந்து கொள்ள முடிகிறது.
பெண்ணிடம் உள்ள கர்பப்பை மிக ஆழத்தில் இருப்பதால் அதனை நோக்கி செலுத்தப்படும் விந்து, சாதாரணமாக வேகமின்றி ஆண் உறுப்பிலிருந்து வெளியாகுமானால் அது கர்ப்பப் பையை சென்றடைவது சாத்தியக்கூறு குறைவு. குதித்த நிலையில் அழுத்தத்துடனும் வீரியத்துடனும் விரைவாக வெளியாகும் போதுதான் அந்த விந்து கர்ப்பப் பையில் சரியான இடத்தை நோக்கி சென்றடைவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.
மேலும், இந்த விந்தில் பல கோடி உயிரணுக்கள் உள்ளன. அவைகள் சுயமாக நகர்ந்து முன்னேறும் தன்மை உள்ளவை. எனினும் நகர்ந்து செல்லும் அதன் வேகம் மிகக் குறைவானதே. மேலும் சுமார் 15 நிமிடம் மட்டுமே உயிர் வாழும் தன்மையுடைது. மேலும் உற்பத்தியாகும் உயிரணுக்களில் 20-30 வீத உயிரணுக்கள் மட்டும்தான் முழு வளர்ச்சியடைந்ததாகவும், நகர்ந்து செல்லும் வீரியமும் உடையதாகும். இந்த குறுகிய கால அவகாசத்திற்குள் கர்பப்பை குழாயை (குயடடழியைn வுரடிந) சென்றடைய வில்லையானால் அந்த உயிரணுக்கள் செத்துப் போய்விடும். விந்து குதித்து வெளியாகுவதால் அது சுமந்து வரும் பெரிய அமானிதமான மனித உயிரணுக்களை விரைவாக உள்ளே தள்ளி, அந்த உயிரணுக்கள் செல்ல வேண்டிய இலக்கான கர்ப்பப்பை குழாயை (குயடடழியைn வுரடிந) விரைவில் சென்றடைவதற்கு பெரிதும் உறுதுணையாக இருக்கிறது. வீரியமின்றி, சாதாரணமாக விந்து வெளியாகுமேயானால் உயிரணுக்கள் சேர வேண்டிய இலக்கை சென்றடையும் வாய்ப்புகள் குறைந்து, செல்லும் வழியிலேயே செத்து மடிந்து விடும்.
மேலும் ஓரு மனித உடலின் சராசரி வெட்ப நிலையில் 37 டிகிரியாகும். ஆணுறுப்பிற்கு கீழே இருக்கும் இனவிருத்தி உயிரணுக்களை உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கும் விதையின் வெட்ப நிலை, உடலின் வெட்ப நிலையை விட சுமார் 3-4 டிகிரி குறைவாகவே இருக்கும். காரணம் விந்தில் இருக்கும் பல கோடி உயிரணுக்கள் (இது குறித்து பின்னர் விவரிக்கப்படும்.) 34 டிகிரி வெட்ப நிலையில் தான் உயிர் வாழ முடியும். வெட்ப நிலை அந்த அளவைவிட சற்று அதிகரிக்கும் போது அந்த உயிரணுக்களால் உயிர் வாழ முடியாமல் செத்துவிடும்.
விந்து சிறுநீரைப் போல சாதாரணமாக வெளிப்படுமேயானால் ஆணுறுப்பில் உள்ள கூடுதல் வெப்ப நிலையாலும், சிறுநீரின் வேதிய பொருட்களாலும் அந்த விந்தில் உள்ள உயிரணுக்கள் வரும் வழியிலேயே செத்துபோய்விடும். அதனை கருத்தில் கொண்டுதான் பல கோடி உயிரணுக்களை சுமந்து வரும் விந்தை குதித்து விரைவாக வீரியத்துடன் தனித்து வெளியேறும் தன்மையில் படைத்துள்ளான் இறைவன்.
فَلْيَنْظُرِ الْأِنْسَانُ مِمَّ خُلِقَ – خُلِقَ مِنْ مَاءٍ دَافِقٍ – يَخْرُجُ مِنْ بَيْنِ الصُّلْبِ وَالتَّرَائِبِ
ஆகவே மனிதன், (தான்) எதிலிருந்து படைக்கப்பட்டிருக்கிறான் என்பதை அவன் சிந்தித்து பார்க்க வேண்டாமா?
குதித்து வெளியாகும் (ஒரு துளி) நீரிலிருந்து அவன் படைக்கப்பட்டான்.
அது (ஆணின்) முதுகந் தண்டிற்கும் கடைசி நெஞ்செலும்புகளுக்கும் மத்தியிலிருந்து வெளிப்படுகிறது.
(உலக பொது வேதம் அல்-குர்ஆன்: 5,6,7)
மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்ற இரகசியத்தை இந்த வசனத்தில் குறிப்பிடும் இறைவன் அதனை சாதாரணமான செய்தியாக சொல்லாமல், அந்த செய்தியை சொல்வதற்கு முன்பே மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்று சிந்தித்துப் பார்க்கட்டும் என்று கூறி, நமது சிந்தனையைத் தூண்டிவிட்டு, அதற்குப்பிறகுதான் 'குதித்து வரும் நீரிலிருந்து மனிதன் படைக்கப்பட்டான்' என்ற தகவலைக் கூறுகிறான்.
'குதித்து வரும் நீரிலிருந்து' எவ்வாறு மனிதன் படைக்கப்பட்டிருக்க முடியும், அதன் தன்மைகள் யாது? என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்பது இறைவனின் விருப்பம் போலும். காரணம் அவ்வாறு ஒரு மனிதன் சிந்தித்து தான் எதிலிருந்து படைக்கப் பட்டிருக்கிறோம் என்பதின் உண்மை நிலையை தெரிந்து கொண்டால், தன்னைப்படைத்த இறைவன் ஒருவன் உண்டு என்பதை நம்பி, அந்த இறைவனின் அற்புத ஆற்றலை அறிந்து கொள்வான் அப்போது தன்னைப்படைத்த ஆற்றல் மிக்க அல்லாஹ்வை அஞ்சி நடக்க வேண்டும் என்ற உணர்வு அவனில் ஏற்படும். எனவே 'குதித்து வரும் நீர்' எத்தகைய தன்மை வாய்ந்தது என்று இன்னும் சற்று ஆழமாக சிந்தித்துப் பார்ப்போம்.
விந்துவின் சேர்மங்கள்:
إِنَّا خَلَقْنَا الْأِنْسَانَ مِنْ نُطْفَةٍ أَمْشَاجٍ نَبْتَلِيهِ فَجَعَلْنَاهُ سَمِيعاً بَصِيراً
நிச்சயமாக நாம் மனிதனை கலப்பான ஓர் இந்திரியத்துளியிலிருந்து நாம் சோதிப்ப(தற்கு நாடிய)வர்களாக அவனைப் படைத்தோம் எனவே செவியுறுபவனாக, பார்ப்பவனாக அவனை நாம் ஆக்கினோம்.
(உலக பொது வேதம் அல்-குர்ஆன்: 76: 2)
இந்த வசனத்தில் இந்திரியத்திற்கு 'கலப்பான' என்ற ஒரு தன்மையை சேர்த்துக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு பல விரிவுரையாளர்களும் 'பெண்ணின் கரு முட்டையுடன் கலந்த இந்திரியம்' என்று பொருள் கொள்கிறார்கள்.
ஆனால் வேறு சில விரிவுரையாளர்கள் 'அந்த இந்திரியத்தில் மரபணுக்கள், உயிரணுக்கள், வேதியியல் பொருட்கள், மேலும் பல தனிமங்கள் சேர்ந்திருப்பதால் அதனை கலப்பான இந்திரியம் என்று இறைவன் கூறியுள்ளான் எனக் கருதுகிறார்கள். இந்த வசனத்தில் இடம் பெற்றுள்ள 'கலப்பான' என்ற வார்த்தைக்கு இவ்வாறு இருவகையான பொருள் கொள்வதற்கும் எந்த தடையும் இருப்பதாக நமக்குத் தெரியவில்லை. காரணம் இந்த வசனத்தில் 'கலப்பான இந்திரியம்' என்று பொதுவாகத்தான் இறைவன் குறிப்பிட்டுள்ளான், எதனுடன் கலந்தது என்று குறிப்பிட்டு சொல்லவில்லை, எனவே இரண்டு விதமாகவும் இந்த வசனத்திற்கு பொருள் கொள்வதற்கு சாத்தியம் உண்டு.
மேலும் மனிதன் படைக்கப்பட்ட செய்திகளைக்கூறும் அனைத்து வசனங்களை ஆழமாக ஆய்வு செய்து பார்த்தால் இரண்டாவது பொருள்தான் மிகப்பொருத்தமாக இருக்கிறது.
இறைவன் பயன்படுத்தியுள்ள 'நுத்ஃபத்' என்ற வார்த்தைக்கு விந்துஎன்றுதான் இதுவரை பல மொழிபெயர்ப்பாளர்களும், விரிவுரையாளர்களும் அர்த்தம் சொல்லிவந்துள்ளார்கள். 'நுத்ஃபத்' என்ற வார்த்தைக்கு வேறு ஒரு அர்த்தம் இருப்பதை பலரும் கவனத்தில் கொள்ளவில்லை. அந்த அர்த்தத்தை பார்ப்பதற்கு முன்பு விந்துவின் சேர்மங்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
1. ஊவைசi யுஉனை (சிட்டிரிக் அமிலம்)
2. ஊhழடநளவநசழட (கொலஸ்டிரால்)
3. ணுinஉ Phழளிhயவநள (ஜின்க் பாஸ்ஃபேட்)
4. யுஉனை Phழளிhயவநள (ஆசிட் பாஸ்ஃபேட்)
5. டீiஉழசடிழயெவநள (பைகார்பனேட்)
6. ர்லயடழசரniஉ யுஉனை (ஹைலோரினிக் அமிலம்)
இந்த வகைத் திரவம் சுமார் 20மூ வீதம் வரை இருக்கும்.
1. யுனெசழபநn (ஆன்ரோஜன்)
2. நுளவசழபநn (ஈஸ்ட்ரோஜன்)
3. புடரவயஅiஉ யுஉனை (குளுட்டாமிக் ஆசிட்)
4. ஐழெளவைழட (இனோசிட்டால்)
5. ஐnhiடிin(இன்ஹிபின்)
6. Pசழவநin (புரதம்)
இந்த வகைத் திரவங்கள் உயிரணுக்கள் உயிர் வாழ்வதற்கும் பாதுகாப்பாக கற்பறைக்கு செல்வதற்கும் துணை புரிகிறது. இந்த உயிரணுக்கள், திரவங்கள் சேர்ந்த மொத்தத்திற்கு பெயர்தான் விந்து அல்லது இந்திரியம் என்று கூறுகிறோம். இதனை இறைவன் குர்ஆனில் 'மாஉ' என்றும், 'மனிய்' என்றும் குறிப்பிட்டிருப்பதை பின்வரும் வசனங்களின் மூலம் அறிந்து கொள்கிறோம்.
ثُمَّ جَعَلَ نَسْلَهُ مِنْ سُلالَةٍ مِنْ مَاءٍ مَهِينٍ
அற்ப நீரிலிருந்து வடிகட்டி எடுக்கப்பட்ட மூலத்திலிருந்து மனிதனின் சந்ததிகளை உண்டாக்கினான்.
(உலக பொது வேதம் அல்-குர்ஆன் 32: 8)
أَلَمْ نَخْلُقْكُمْ مِنْ مَاءٍ مَهِينٍ
அற்பமான நீரிலிருந்து உங்களை நாம் படைக்க வில்லையா?
(உலக பொது வேதம் அல்-குர்ஆன் 77: 20)
خُلِقَ مِنْ مَاءٍ دَافِقٍ
குதித்து வெளிவரும் நீரிலிருந்து மனிதன் படைக்கபட்டான்.
(உலக பொது வேதம் அல்-குர்ஆன் 86: 6)
أَلَمْ يَكُ نُطْفَةً مِنْ مَنِيٍّ يُمْنَى
(கற்பத்தில்) செலுத்தப்படும் விந்துவில் உள்ள ஒரு நுத்ஃபாவாக அவன் இருக்கவில்லையா?
(உலக பொது வேதம் அல்-குர்ஆன் 75:37)
மேற்கூறப்பட்ட முதல் மூன்று வசனத்தில் விந்துவின் மொத்தத்திற்கு 'மாஉ' என்ற வார்த்தையையும், நான்காவது வசனத்தில் 'மனிய்' என்ற வார்த்தையையும் பயன்படுத்தப் பட்டிருக்கிறது.
ஆனால் 'நுத்ஃபத் என்ற வார்த்தைக்கு விந்து என்று பொருள் கொள்வது அவ்வளவு பொருத்தமானதல்ல. அந்த வார்த்தைக்கு விந்துவில் உள்ள 'உயிரணு' என்று அர்த்தம் கொள்வது குர்ஆனுடைய வசனங்களுடன் மிகப்பொருத்தமாக உள்ளது. இந்த அர்த்ததை அந்த வார்த்ததைக்கு கொடுத்து பொருள் விளங்கும் போது அல்லாஹ் எவ்வளவு ஆழமாக இந்த விஞ்ஞான செய்தியை சொல்லியிருக்கிறான் என்பதும் நமக்குத் தெரியவரும்.
அது சம்மந்தமான வசனங்கள் வின்வருமாறு,
ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَكِينٍ
(المؤمنون:13)
أَلَمْ نَخْلُقْكُمْ مِنْ مَاءٍ مَهِينٍ
(المرسلات:20)
خُلِقَ مِنْ مَاءٍ دَافِقٍ
(الطارق:6)
ثُمَّ جَعَلَ نَسْلَهُ مِنْ سُلالَةٍ مِنْ مَاءٍ مَهِينٍ
(السجدة:8)
خَلَقَ الْأِنْسَانَ مِنْ نُطْفَةٍ فَإِذَا هُوَ خَصِيمٌ مُبِينٌ
(النحل:4)
يَا أَيُّهَا النَّاسُ إِنْ كُنْتُمْ فِي رَيْبٍ مِنَ الْبَعْثِ فَإِنَّا خَلَقْنَاكُمْ مِنْ تُرَابٍ ثُمَّ مِنْ نُطْفَةٍ ثُمَّ مِنْ عَلَقَةٍ ثُمَّ مِنْ مُضْغَةٍ مُخَلَّقَةٍ وَغَيْرِ مُخَلَّقَةٍ لِنُبَيِّنَ لَكُمْ وَنُقِرُّ فِي الْأَرْحَامِ مَا نَشَاءُ إِلَى أَجَلٍ مُسَمّىً ثُمَّ نُخْرِجُكُمْ طِفْلاً ثُمَّ لِتَبْلُغُوا أَشُدَّكُمْ وَمِنْكُمْ مَنْ يُتَوَفَّى وَمِنْكُمْ مَنْ يُرَدُّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ لِكَيْلا يَعْلَمَ مَنْ بَعْدِ عِلْمٍ شَيْئاً وَتَرَى الْأَرْضَ هَامِدَةً فَإِذَا أَنْزَلْنَا عَلَيْهَا الْمَاءَ اهْتَزَّتْ وَرَبَتْ وَأَنْبَتَتْ مِنْ كُلِّ زَوْجٍ بَهِيجٍ
(الحج:5)
مِنْ نُطْفَةٍ إِذَا تُمْنَى
(لنجم:46)
أَلَمْ يَكُ نُطْفَةً مِنْ مَنِيٍّ يُمْنَى)
(القيامة:37)
إِنَّا خَلَقْنَا الْأِنْسَانَ مِنْ نُطْفَةٍ أَمْشَاجٍ نَبْتَلِيهِ فَجَعَلْنَاهُ سَمِيعاً بَصِيراً
(الانسان:2)
مِنْ نُطْفَةٍ خَلَقَهُ فَقَدَّرَهُ
(عبس:19)
ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظَاماً فَكَسَوْنَا الْعِظَامَ لَحْماً ثُمَّ أَنْشَأْنَاهُ خَلْقاً آخَرَ فَتَبَارَكَ اللَّهُ أَحْسَنُ الْخَالِقِينَ
(المؤمنون:14)
ஓரு ஆணுக்கு ஒரு தடவை விந்து வெளியாகும் போது அதனுடைய அளவு சுமார் 2.5அட முதல் 3.5அட இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதில் ஒரு துளியில் சுமார் 40 கோடி உயிரணுக்கள் இருக்கும். அவற்றில் 70மூ சதவீதம் மட்டும்தான் வீரியம் உள்ளதாக இருக்கும். அந்த உயிரணுக்கள் தலைப்பகுதி, வால்பகுதி என இரு பகுதியைக் கொண்டிருக்கும். தலைப்பகுதி சற்று நீள உருண்டை வடிவத்திலும், வால்பகுதி சற்று நீண்ட நிலையிலும் இருக்கும். தலை 5 மைக்ரோன் அளவும், வால் 55 மைக்ரோன் அளவும் கொண்டதாகும். தலைப்பகுதியில் ஒரு வகை திரவும் சுரந்து கொண்டிருக்கும். அந்த திரவம் பெண்ணின் கருவரைக்குள் இருக்கும்கருமுட்டையை மூடியிருக்கும் மெல்லி திரையை தகர்த்து, கருமுட்டையை சென்று அடைவதற்கு துணை புரிகிறது. இந்த உயிரணுக்கள் கருவறையை நோக்கி நீந்தி செல்லும் தன்மை வாய்ந்தது. அவ்வாறு நீந்திச் செல்வதற்கு வாலை துடுப்பாக பயன்படுத்தி ஒரு நிமிடத்திற்கு 3அஅ வேகம் என்ற விகிதத்தில் முன்னேறிச் செல்கிறது.
இந்த உயிரணு கர்பப்பைய அடைந்து, பெண்ணின் கரு முட்டையுடன் சேர்ந்ததும் வால் பகுதி முறிந்து வெளியில் தங்கி விடும். அந்த கருமுட்டை உயிரணுவுடன் சேர்ந்ததும், வேறொரு உயிரணு வந்து தன்னுடன் சேர்ந்துவிடாமல் இருக்க மெல்லிய தடையை ஏற்படுத்தி விடும். சில வேளைகளில் இறைவனின் நாட்டத்தால் வேறொரு உயிரணுவும் அந்த தடையை தகர்த்துவிட்டு உள்ளே சென்றுவிடும். அப்போது அந்த கருமுட்டை இரண்டு உயிரணுவுடன் சேர்ந்து இரட்டை குழந்தை உருவாகுகிறது. இது போல்தான் அபூர்வமாக பல உயிரணுக்கள் பெண்கருமுட்டையுடன் சேர்ந்துவிடும் போது 3,4,5 குழந்தைகள் பிறக்கும் அதிசயமும் நடைபெறுகிறது. அல்லாஹ் அவ்வப்பொழுது இது போன்ற அதிசயங்களை நிகழ்த்தி, குழந்தை உருவாக்கல் தனது கட்டுப்பாட்டில் மட்டும்தான் இருக்கிறது என்ற உண்மையை மனித சமுதாயத்திற்கு உணர்த்திக் கொண்டிருக்கிறான்.
இந்த உயிரணுக்களை பாதுகாப்பாக சுமந்து வருவதற்கு சில திரவங்களும் உற்பத்தியாகும். மீன்கள் உயிர் வாழ்வதற்கு நீர் எவ்வாறு அவசியமோ அது போல இந்த உயிரணுக்கள் உயிர்வாழ்வதற்கும் சில திரவங்கள் அவசியமாகும். அவைகளை பின் வருமாறு மருத்துவ அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.
1. குசரஉவழளந (ஃபிரக்டோஸ்)
2. Pலசழ Phயளிhயவநள (பைரோ பாஸ்ஃபேட்)
3. யுளஉழசடிiஉ யுஉனை (அஸ்கார்பிக் அமிலம்)
4. Pசழளவய படயனெiளெ (புரோஸ்டோ கிளான்டின்ஸ்)
இந்தவகைத்திரவங்கள் சுமார் 60மூ வரை இருக்கும்.
1. ஊவைசiஉ யுஉனை (சிட்டிரிக் அமிலம்)
2. ஊhழடநளவநசழட (கொலஸ்டிரால்)
3. ணுinஉ Phழளிhயவநள (ஜின்க் பாஸ்ஃபேட்)
4. யுஉனை Phழளிhயவநள (ஆசிட் பாஸ்ஃபேட்)
5. டீiஉயசடிழயெவநள (பைகார்பனேட்)
6. ர்லயடழசரniஉ யுஉனை (ஹைலோரினிக் அமிலம்)
இந்த வகைத் திரவஙகள் சுமார் 20மூ வரை இருக்கும்.
1. யுனெசழபநn (ஆன்ரோஜன்)
2. நுளவசழபநn (ஈஸ்ட்ரோஜன்)
3. புடரவயஅiஉ யுஉனை (குளுட்டாமிக் ஆசிட்)
4. ஐழெளவைழட (இனோசிட்டால்)
5. ஐnhiடிin (இன்ஹிபின்)
6. Pசழவநin (புரதம்)
இந்த திரவங்களும், உயிரணுக்களும் சேர்ந்து 20மூ இருக்கும்.
இந்த அனைத்து வகைத் திரவங்களும் உயிணுக்கள் உயிர் வாழ்வதற்கும், பாதுகாப்பாக கர்பறைக்கு செல்வதற்கும் துணை புரிகிறது.
இந்த உயிரணுக்கள், திரவங்கள் சேர்ந்த மொத்தத்திற்கு பெயர்தான் விந்துஅல்லது இந்திரியம் என்று கூறுகிறோம். இதனை இறைவன் குர்ஆனில் மாஉ என்றும், மஹீன் என்றும் குறிப்பிட்டிருப்பதை பின்வரும் வசனங்களின் மூலம் அறிந்து கொள்கிறோம்.
ثُمَّ جَعَلَ نَسْلَهُ مِنْ سُلالَةٍ مِنْ مَاءٍ مَهِينٍ
அற்ப நீரிலிருந்து வடிகட்டி எடுக்கப்பட்ட மூலத்தில் (நுத்ஃபா) மனிதனின் சந்ததிகளை உண்டாக்கினான்.
(உலகப் பொதுமறை அல்-குர்ஆன் : 32:8)
أَلَمْ نَخْلُقْكُمْ مِنْ مَاءٍ مَهِينٍ
அற்பமான நீரிலிருந்து உங்களை நாம் படைக்க வில்லையா?
(உலகப் பொதுமறை அல்-குர்ஆன்: 77:20)
خُلِقَ مِنْ مَاءٍ دَافِقٍ
குதித்து வெளிவரும் நீரிலிருந்து மனிதன் படைக்கபட்டான்.
(உலகப் பொதுமறை அல்-குர்ஆன் 86:6)
أَلَمْ يَكُ نُطْفَةً مِنْ مَنِيٍّ يُمْنَى
(கர்பத்தில்) செலுத்தப்படும் விந்துவில் (மனியில்) உள்ள ஒரு நுத்ஃபாவாக அவன் இருக்கவில்லையா?
(உலகப் பொதுமறை அல்-குர்ஆன்:75:37).
மேற்கூறப்பட்ட முதல் மூன்று வசனத்தில் விந்துவின் மொத்தத்திற்கு மாஉ என்ற வார்த்தையையும், நான்காவது வசனத்தில் மஹீன் என்ற வார்த்தையையும் பயன்படுத்தப் பட்டிருக்கிறது.
ஆனால் நுத்ஃபத் என்ற வார்த்தைக்கு விந்து என்று பொருள் கொள்வதை விட, விந்துவில் உள்ள உயிரணு என்று அர்த்தம் கொள்வது குர்ஆனுடைய வசனங்களுடன் மிகவும் பொருந்தி வருகிறது. இந்த அர்த்ததைக் அந்த வார்த்தைக்கு கொடுத்து பொருள் விளங்கும் போது அல்லாஹ் எவ்வளவு ஆழமாக இந்த விஞ்ஞான செய்தியை சொல்லியிருக்கிறான் என்பதும் நமக்குத் தெரியவரும்.
நுத்ஃபா என்பதற்கு உயிரணு என்று பொருள் கொள்ள வேண்டும் என்பற்கு பின் வரும் வசனங்கள் சான்றாக உள்ளன.
அந்த வசனங்களை ஆய்வு செய்யும் முன்பு இன்றைய மருத்துவ அறிவியலில் இந்த உயிரணு குறித்து என்ன முடிவுக்கு வந்துள்ளது என்ற செய்தியைத் தெரிந்துக் கொள்வோம். கர்பப்பையை நோக்கிச் செலுத்தப்படும் இந்திரியம் அனைத்தும் கர்ப்பையை சென்று அடைவதில்லை. மாறாக ஒரே ஒரு உயிரணு மட்டும்தான் பெண் கருமுட்டையுடன் சேர்ந்து, பல மாற்ற நிலைகளுக்கு உள்ளாகி மனித உருவம் பெற்று குழந்தையாக பிறக்கிறது.
இந்த விஷயத்தை நன்றாக புரிந்து கொண்டு பின் வரும் இறைவசனங்களை ஆய்வு செய்து பார்ப்போம்.
أَلَمْ يَكُ نُطْفَةً مِنْ مَنِيٍّ يُمْنَى
(கர்பத்தில்) செலுத்தப்படும் விந்துவில் உள்ள ஒரு நுத்ஃபாவாக அவன் இருக்கவில்லையா?
(உலகப் பொதுமறை அல்-குர்ஆன்:75:37.)
இந்த வசனத்தில் கர்ப்பப்பையில் செலுத்தப்படும் இந்திரியத்தில் உள்ள நுத்ஃபா வாக ஆகியருக்க வில்லையா? என்று இறைவன் வினவுகிறான்.
இந்த வசனத்தில் இடம் பெற்றுள்ள நுத்ஃபா என்ற வார்த்தைக்கு இந்திரியத் துளி என்ற பொருள் கொடுப்பதைவிட உயிரணு என்ற பொருள் கொடுப்பது இந்த தொடருக்கு மிகப் பொருத்தமாக இருக்கிறது.
அதாவது இந்திரியத்தின் ஒரு துளியாக அவன் இருக்க வில்லையா? என்று பொருள் கொடுப்பதைவிட, இந்திரியத்தில் அவன் ஒரு உயிரணுவாக இருக்க வில்லையா? என்ற பொருள் கொடுத்து இந்த வசனத்தை வாசிக்கும் போது மிகப் பொருத்தமாக உள்ளது.
ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَكِينٍ
பின்னர், (அதற்கென உள்ள) ஒரு பாதுகாப்பான இடத்தில் (கர்ப்பபையில்) அவனை நுத்ஃபா ஆக்கினோம்.
(உலகப் பொதுமறை அல்-குர்ஆன்: 23:13.)
இதற்கு முந்திய வசனத்தில் முதல் மனிதரை களி மண்ணின் மூலச்சத்திலிருந்து படைத்தோம் என்ற செய்தியைக் கூறி விட்டு அதற்குப்பிறகு இந்த வசனத்தைக் கூறியுள்ளான் இறைவன்.
முதல் மனிதர் எவ்வாறு களி மண்ணின் மூலச்சத்திலிருந்து படைக்கப்பட்டாரோ அது போல அவரது சந்ததிகளை அற்பமான நீரின் மூலப்பொருளிலிருந்துதான் படைத்தேன் என்று உணர்த்துவதற்காக இவ்வாறு குறிப்பிட்டிருக்கலாம். இதையே 32வது அத்தியாயம் 8வது வசனத்தில் குறிப்பிடுகிறான்.
அற்ப நீரிலிருந்து வடிகட்டி எடுக்கப்பட்ட மூலத்திலிருந்து மனிதனின் சந்ததிகளை உண்டாக்கினான்.
(உலகப் பொதுமறை அல்-குர்ஆன்: 32:8)
அந்த மூலம்தான் உயிரணு.
அதனை சுலாலத் என்று 32வது அத்தியாயம் 8வசனத்திலும், நுத்ஃபா என்று மேற்குறிப்பிட்ட வசனத்திலும் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ள நுத்ஃபத் என்ற வார்த்தைக்கு உயிரணு என்று பொருள் கொள்ள வேண்டும் என்று நாம் சொல்வதற்கு காரணம் நுத்ஃபாவை பாதுகாப்பான கர்ப்பப்பையில் ஆக்கியதாக இறைவன் கூறுகிறான். கர்ப்பப்பையில் ஆக்கப்படுவது ஒரு துளி இந்திரியம் அல்ல, அதில் உள்ள ஒரு உயிரணுதான் என்பது அறிவியல் உலகில் ஐயத்திற்கு இடமின்றி தெளிவாக நிரூபணம் செய்யப்பட்ட விஷயமாகும். அறிவியலுக்கு எதிரான கருத்தை குர்ஆன் ஒரு போதும் முன் வைக்காது. எனவே இந்த வசனத்தில் இடம் பெற்றுள்ள நுத்ஃபா என்ற வார்த்தைக்கு உயிரணு என்று பொருள் கொள்வதே சரியானதாகும்.
அதன்படி இந்த வசனத்தின் பொருள் பின்வருமாறு இருக்கும்.
பின்னர் (அதற்கென உள்ள) ஒரு பாதுகாப்பான இடத்தில் (கர்ப்பப்பையில்) அவனை (பெண் முட்டையுடன் சேரும்) ஒரு உயிரணுவாக ஆக்கினோம்.
ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً
பின்பு நுத்ஃபாவை அலகத்தாக படைத்தோம்.
(உலகப் பொதுமறை அல்-குர்ஆன்: 23:14)
இந்த வசனத்தில் நுத்ஃபாவை அலகத்தாக படைத்தோம் என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான். அலகத் என்ற நிலைக்கு மாறுவது கர்ப்பப்பைக்குள் சென்ற ஒரு உயிரணு மட்டும்தான். ஒரு துளி இந்திரியம் அல்ல என்பது இங்கே கவனிக்கத் தக்கதாகும்.
மேற்கூறப்பட்ட மூன்ற வசனங்களிலும் நுத்ஃபா என்ற வார்த்தையை உயிரணு என்ற அர்த்தத்தில் உபயோகப்படுத்தப்படடிருப்பதை காணலாம். இதன்படி நுத்ஃபா என்பதற்கு உயிரணு என்று பொருள் கொள்ள வேண்டும் என்பதை நாம் புரிந்து கொள்கிறோம்.
إِنَّا خَلَقْنَا الْأِنْسَانَ مِنْ نُطْفَةٍ أَمْشَاجٍ
நிச்சயமாக நாம் மனிதனை கலப்பான விந்தணுவிலிருந்து படைத்தோம்.
(உலகப் பொதுமறை அல்-குர்ஆன்: 76:2)
நுத்ஃபா என்பதற்கு விந்தணு என பொருள் கொள்ள வேண்டும் என்று சொல்லப்பட்டதின் அடிப்படையில் மேலே கூறப்பட்ட 76 வது அத்தியாயம் 2 வது வசனத்தில் இடம் பெற்றுள்ள நுத்ஃபா என்ற வார்த்தைக்கு விந்தணு என்று பொருள் கொள்ளும் போது அம்ஷாஜ் (கலப்பான) என்ற வார்த்தைக்கு இந்த விந்தணுவை பாதுகாப்பாக சுமந்து வருவதற்கு பயன்படும் வேதியல் திரவங்கள் என்று பொருள் கொள்ளவேண்டும். காரணம் அந்த திரவங்கள் இன்றி விந்தணுக்கள் மட்டும் இருக்க முடியாது.
அதன்படி வேதியல் திரவங்களுடன் கலந்த ஒரு விந்தணுவிலிருந்து மனிதனை நாம் படைத்தோம் என்று இந்த வசனத்திற்கு பொருள் கொள்ள வேண்டும். அவ்வாறு பொருள் கொள்ளும் போது இந்த விந்தணுவை பாதுகாப்பதற்கு பல திரவங்கள் இருக்கிறது என்ற ஒரு பெரிய அறிவியல்உண்மையை 1423 ஆண்டுகளுக்கு முன்பே இந்த வசனத்தில் இறைவன் கூறியருப்பதை புரிந்து கொள்ளலாம். அந்த விந்தணுவோடு கலந்த பல்வேறு வேதியியல் திரவங்கள் உண்டு என்றும், அது என்ன என்ன என்பதையும் இப்போதுதான் மருத்துவ அறிவியல் உலகம் கண்டு பிடித்துள்ளது.
விந்து உற்பத்தி
விந்து எங்கிருந்து உற்பத்தியாகி வெளியேறுகிறது என்பதை இந்த மாதத் தொடரில் பார்ப்போம். விந்துபைவிரையில் (வுநளவளை) உற்பத்தியாகிறது. விரை சதாவும் விந்துவினை உற்பத்தி செய்து கொண்டே இருக்கும். அங்கு உற்பத்தியாகும் விந்து அதன் குழாய்வழியாக கடத்தப்பட்டு விந்துப்பபையில் சேமிக்கப்படுகிறது. தேவை ஏற்படும் போது அந்த விந்துப்பையிலிருந்து வெளியேறுகிறது. இது இன்றைய மருத்துவ உலகம் கண்டுபிடித்த அறிவியல் தகவலாகும். இந்த விரை உடலைவிட்டும் பிரிந்து தனியாக இருக்கிறது என்பதும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு விஷயமாகும்.
விந்து எங்கு உற்பத்தியாகி, வெளியேறுகிறது என்பது குறித்து இறை வேதம் குர்ஆன் என்ன கூறுகிறது என்று சற்று கவனிப்போம்.
خُلِقَ مِنْ مَاءٍ دَافِقٍ يَخْرُجُ مِنْ بَيْنِ الصُّلْبِ وَالتَّرَائِبِ
குதித்து வெளியாகும் (ஒரு துளி) நீரிலிருந்து அவன் (மனிதன்) படைக்கப்பட்டான்.
அது (ஆணின்) முதுகந் தண்டிற்கும் கடைசி நெஞ்செலும்புக்கும் மத்தியிலிருந்து வெளிப்படுகிறது.
(உலகப் பொதுமறை அல்-குர்ஆன்: 86: 6,7.)
இந்த வசனத்தில் விந்து எங்கிருந்து வெளிப்படுகிறது என்ற செய்தி சொல்லப்பட்டுள்ளது. மேலோட்டமாக இந்த வசனத்தின் பொருளைப் படித்துப் பார்ப்பவர்களுக்கு குர்ஆனில் தவறான செய்தி சொல்லப்பட்டிருப்பது போன்று தோன்றலாம். காரணம் விந்து உற்பத்தியாகி சேமிப்பாகும் இடம் குர்ஆனில் கூறப்பட்டிருக்கும் அந்த குறிப்பிட்ட இடத்தில் இல்லை. மாறாக உடலைவிட்டும் தனியாக பிரிந்து இருக்கும்விரையில் உற்பத்தியாகி, விந்துப்பையில் சேமிப்பாகுகிறது. குர்ஆனில் சொல்லப்பட்ட செய்தி அறிவியல் கண்டுபிடிப்புக்கு மாற்றமாக இருக்கிறதே என்று சிந்திக்கலாம்.
உண்மையில் இந்த வசனத்தின் அர்த்தத்தை ஆழமாக சிந்தித்துப்பார்த்தால் பல விஞ்ஞான கரு இயல் உண்மைகள் சொல்லப்பட்டிருப்பதை அறியலாம்.
குழந்தை கருவறையில் வளரும் போது அதனுடைய 'ஆரம்ப நிலையில்' இனவிருத்தி செய்யும் உறுப்பான விரை (வுநளவளை) தற்போது சிறுநீரகம் இருக்கும் இடத்தையெடுத்து அதாவது முதுகந்தண்டிற்கும், கடைசி நெஞ்செலும்புக்கும் இடையில்தான் இருக்கும். சிறுநீரகம் விரைப்பைக்கு மேலே அடிவயிற்றில் இரு புறத்திலும் இருக்கும். கருவில் குழந்தை வளர, வளர சிறுநீரகம் மேல் நோக்கியும், விரை கீழ் நோக்கியும் இடம் மாறி நகர்ந்து செல்லும். இறுதியில் விரை தற்போது இருக்கும் அமைப்பில் ஆணுறுப்பின் இரு பக்கங்களில் வந்து தங்கிவிடும். இவ்வாறு இறுதி நிலையில் உடலைவிட்டு பிரிந்து தனித்து இருந்தாலும் இனவிருத்தி செய்யும் இந்த விரைக்குத் தேவையான இரத்தம், அது தொடர்புடைய நரம்பு, நணநீர் போன்றவைகள் அனைத்தும் விரை இருந்த பழைய இடமான முதுகந்தண்டிற்கும் கடைசி நெஞ்செலும்புக்கும் இடையிலிருந்துதான் கிடைக்கிறது. இவ்வாறு விரை இருக்க வேண்டிய இடமும், விரைக்குத் தேவையான அனைத்தும் முதுகந்தண்டிற்கும், கடைசி நெஞ்சலும்புக்கும் இடையில்தான் இருக்கிறது என்பதால் இறைவன் 'முதுகந்தண்டிற்கும் கடைசி நெஞ்சலும்புக்கும் இடையிலிருந்து வெளிப்படும் நீரிலிருந்து' என்று கூறியுள்ளான். இதன் மூலம் அந்த விரை இருந்த ஆரம்ப நிலையையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்பது இறைவனின் நோக்கமாக இருக்கலாம்.
'விரை' உடலைவிட்டும் பிரிந்திருப்பது ஏன்?
விந்துவினை உற்பத்தி செய்யும் 'விரை' உடலின் உட்பகுதியில் இருப்பதுதான் அதனால் உற்பத்தி செய்யப்படும் உயிரணுக்களுக்கு தகுந்த பாதுகாப்பானது என்றிருந்தும் அது இருந்த அந்த பழைய இடத்தைவிட்டு நகர்ந்து ஏன் உடலைவிட்டும் பிரிந்து தனியாக நிற்கிறது? என்பதையும் இந்த வசனத்தின் மூலம் சிந்திக்கத் தூண்டுகிறான் ரப்புல் ஆலமீன் அல்லாஹ். ஏனெனில் இந்த வசனத்தின் ஆரம்பமே 'மனிதன் தான் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்று சிந்தித்துப் பார்க்கட்டும்' என்றுதான் உள்ளது.? எனவே ஏன் இந்த இடம் மாற்றம் நிகழ்ந்தது? என்பதையும் நாம் சிந்திக்க தூண்டப்படுகிறோம்.
ஒரு மனித உடலின் சராசரி வெட்ப நிலை 37 டிகிரியாகும். பொதுவாக உடலில் உள்ள இரத்த ஓட்டத்தை அடிப்படையாகக் கொண்டுதான் உடலின் வெட்ப நிலை சீராக இருந்து வருகிறது.
இனவிருத்திக்கு காரணமாக இருக்கும் உயிரணுக்கள் சுமார் 33 டிகிரி வெட்ப நிலையில்தான் உயிர் வாழ முடியும். அந்த அளவை விட கூடும் போது அதனால் உயிர் வாழ முடியாமல் செத்துவிடும். 37 டிகிரி வெட்பநிலையில் உள்ள உடலின் உட்பகுதியில் 'விரை' இருந்தால் அந்த விரையிலும் 37 டிகிரி வெட்ப நிலைதான் இருக்கும். அதில் உயிரணுக்களால் நிச்சயமாக உயிர் வாழ முடியாது. இந்த உயிரணுக்கள் உயிர் வாழ வேண்டும் என்பதற்காக உடலின் வெட்பநிலையை குறைக்க முனைந்தால் உடலில் வேறுபல பாதிப்புகள் ஏற்படும். எனவே அந்த விரையை உடலிலிருந்து தனியாக பிரித்து, அதனுடைய வெட்பநிலையை சரி செய்வதுதான் முறையாகும் என்று கருதிய அல்லாஹ் அதனை உடலைவிட்டும் தனியாக பிரிந்து இருக்கும் அமைப்பில் படைத்து, அதன் வெட்ப நிலை சராசரியாக 33-34 டிகிரி இருக்கும் நிலையில் ஆக்கியுள்ளான். இந்த இடம் மாற்றம் கருவளர்ச்சியின் சிறிது காலத்திற்கு பிறகு ஆரம்பித்து குழந்தை பிறப்பதற்குள் பூர்த்தி அடைந்துவிடுகிறது. ஒரு குழந்தைக்குகருவில் இருக்கும் போதே விரையின் இடம் மாற்றம் ஏற்படவில்லையெனில் அவருக்கு ஆண்மை இருக்காது, விரைக் கேன்ஸர் (புற்று நோய்) ஏற்படுவற்கும் அதிக வாய்ப்புகளும் உள்ளன. மேலும் விரை மாற்றம் நடைபெறாத குழந்தைகள் இறந்தே பிறப்பது, அல்லது பிறந்த ஒரு சில மாதங்களிலேயே இறந்துவிடுவதுதான் அதிகம் அதிகம் என்பது இங்கே கவனிக்கத்தக்கதாகும். பெட்டிச் செய்தி பார்க்கவும்.
'விரை' செயல்படும் அதிசயம்
விரைப்பகுதி இரத்த ஓட்டம் அதிகமாக உள்ள பகுதியாக இருந்தும், அதன் வெட்பநிலையை 33-34 டிகிரிக்கு மேல் அதிகரிக்கவிடாமல் வைத்திருப்பதில் அல்லாஹ் காட்டிய அற்புதம் வியக்கத்தக்கதாகும்.
எவ்வாறெனில் அங்கு இரத்த ஓட்டம் ஊழரவெநச ஊரசசநவெ நுஒஉhயபெந என்ற விஞ்ஞான அடிப்படையிலும், ஏநழெரள Pடநஒரள, என்ற பிரத்யோக இரத்தக் குழாய் அமைப்பினாலும், மற்றும் நிணநீர் நாளங்கள் (டுலஅphயவiஉ Pடநஒரள) என்ற அமைப்பினாலும் செயல் பட்டுக் கொண்டிருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
ஊழரவெநச ஊரசசநவெ நுஒஉhயபெந என்பது ஒரு திசையில் (விரையை நோக்கி) இரத்தம் வந்து கொண்டும் அதன் எதிர் திசையில் இரத்தம் கடத்தப்பட்டுக் கொண்டுமிருக்கும் போது ஏற்படும் இயற்பியல் மாற்றமாகும். அந்த இயற்பியல் மாற்றம் அங்கு தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதால் விரையின் வெட்ப நிலை ஒரே சீரான கட்டுப்பாட்டில் நிரந்தரமாக இருந்து கொண்டிருக்கிறது.
'ஏநழெரள Pடநஒரள' முறை என்றால் என்ன என்பது பற்றி தெரிந்து கொள்ளும் முன்பு விரை படைக்கப்பட்டிருக்கும் அமைப்பினை சற்று நினைவுக்குக் கொண்டுவருவோம். விரை பல மீட்டர் நீளமுள்ள இரத்தக் குழாய்களால் சூழப்பட்டுள்ளது. அந்த இரத்தக் குழாய்கள் இடியப்பச் சிக்கல் போன்று ஒன்றோடு ஒன்று பின்னி, வளைந்து, மடிந்து, சுருண்டு சிறிய பை வடிவம் பெற்று விரையை தாங்கிப்பிடித்துக் கொண்டிருக்கின்றன. இருதயத்திலிருந்து விரையை நோக்கி வரும் சுத்திகரிக்கப்பட்ட இரத்தம், அதற்கென உள்ள விரையைச் சுற்றியுள்ள குழாய்களின் வழியாக விரையை கடந்து, மாசடைந்து மீண்டும் இருதயத்தை நோக்கிச் செல்லும். அவ்வாறு விரையைக் கடந்து செல்லுவதற்கு சற்று நேரம் எடுத்துக் கொள்ளும். அதனால் அந்த குழாய்களில் எப்போதும் இரத்தம் தேங்கியிருக்கும் நிலை ஏற்படுகிறது. விரையை நோக்கி ஒரு திசையிலிருந்து எந்தளவு இரத்தம் வருகிறதோ அதே அளவு இரத்தம் எதிர் திசையில் அந்த விரையிலிருந்து வெளியேறிவிடுகிறது. அவ்வாறு வெளியேறும் இரத்தம் ஏற்கனவே இந்த இரத்தக்குழாயில் தேங்கி இருந்த இரத்தம் என்பது இங்கே கவனிக்கத் தக்கதாகும். இவ்வாறு விரையை சுற்றியுள்ள இரத்தக்குழாய்களின் வழியாக இரத்தம் கடந்து செல்தவதற்கு சற்று நேரம் எடுத்துக் கொள்வதால் ஏற்படும் இரத்தத் தேக்கத்தினை 'ஏநழெரள Pடநஒரள' என்று மருத்துவ துறையில் அழைக்கப்படுகிறது. விரையைச் சுற்றியுள்ள இரத்தக்குழாயில் ஏற்படும் இந்த இரத்தத் தேக்கத்தால் விரையில் 'வெட்ப நிலை கட்டுபாட்டுத்தன்மை' ஏற்பட்டு அதன் வெட்ப நிலை ஒரே சீராக இருப்பதற்கு பெரிதும் உறுதுணையாக இருக்கிறது. இந்த விரையைச் சுற்றி நிணநீர் நாளங்கள் (டுலஅphயவiஉ Pடநஒரள) பின்னிப் பிணைந்து இருப்பதாலும் விரையின் வெட்ப நிலை சீராக இருப்பதற்கு உறுதுணை புரிகிறது. மிகப்பெரும் அமானிதத்தைச் சுமந்து கொண்டிருக்கும் உயிரணுக்களை இந்த விரை பாதுகாப்பாக உற்பத்தி செய்யவேண்டும் என்பதற்கு அல்லாஹ் ஏற்படுத்திய ஒரு அற்புத அமைப்பாகும் இது.
இந்த இடத்தில் இறைவன் செய்துள்ள இன்னொரு அற்புதத்தையும் நம்மால் நினைத்துப் பார்க்கமால் இருக்க முடியவில்லை. விரையில் உள்ள இரத்தக்குழாய்களும், விந்து உற்பத்தியாகும் இடமும் அடுத்தடுத்த நெருக்கமாக இருந்தாலும் விந்து, இரத்தத்தில் கலந்து விடமுடியாதபடி மிகப் பெரிய தடுப்பை இறைவன் ஏற்படுத்தி, விந்துக்கென உள்ள அதனுடைய பிரத்யேக குழாயை சென்றடையும் விதத்தில் பாதுகாப்பாக ஆக்கி இருப்பது பிரமிக்கத்தக்க ஒன்றாகும். காரணம் தடுப்பு மட்டும் இல்லையெனில், விந்து இரத்தத்துடன் கலந்து மிகப் பெரும் ஆபத்துகளை சந்தித்து, அழிவிற்குள்ளாகி விடும். அதாவது விந்து இரத்தத்துடன் கலந்து விடும்போது, பாக்டீரியாக்கள் (நோய்கிருமிகள்) தன்னுள் புகுந்துவிட்டதாககருதி இரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்கள் எதிர்ப்பு சக்தியை தோற்றுவித்து, விந்துவில் உள்ள எல்லா உயிரணுக்களையும் ஒன்றுவிடாமல் அழித்துவிடும். அது மட்டுமல்லாது இந்த எதிர்ப்பு சக்தி இரத்தத்தில் நிரந்தரமாகவே தங்கி, உயிரணுக்கள் உற்பத்தியாகும் போதல்லாம் அதனை அழித்துக் கொண்டே இருக்கும். அப்போது அந்த மனிதனுக்கு குழந்தை பெறும் வாய்ப்பு அறவே இல்லாமல் போய்விடும்.
தான் படைக்க விரும்பிய மனிதப்பிரதிநிதிகள் இந்த உலகில் வந்து சேர்வதற்கு அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள பாதுகாப்புகள்தான் எத்தனை? எத்தனை? சுப்ஹானல்லாஹ்!
விலா எலும்பில்லாமல் பிறந்த குழந்தை
சவுதி அரபியாவில் புனித மக்காவில் உள்ள அலவி தூனிசி என்ற தனியார் மருத்துவ மனையில் வினோதமான முறையில் விலா எலும்பில்லாத ஆண் குழந்தை பிறந்துள்ளது. மேலும், விரை அதற்குரிய பையை நோக்கி இறங்காமலும், சிறுநீர் வழி அடைபட்ட நிலையிலும் குறையுடன் பிறந்த இந்த குழந்தையை ஆய்வு செய்த குழந்தை சிறப்பு மருத்துவ நிபுணர், முஹம்மது அப்துல் கரீம் அவர்கள், 40 ஆயிரம் குழந்தையில் ஒரு குழந்தை இவ்வாறு பிறக்கிறது, பெண் குழந்தையை விட ஆண் குழந்தைக்குத்தான் அதிகமாக இது ஏற்படுகிறது. இது எதனால் ஏற்படுகிறது என்பது இதுவரைக்கும் மருத்துவ துறையில் கண்டுபிடிக்கப்படவில்லை. சிறுநீர் வழி அடைக்கப்படுவதால் இது போன்ற பிறவிக்குறைகள் ஏற்பட வாய்ப்பிருக்குமோ என அணுமானிக்கப்படுகிறது என்று கூறுகிறார். இது போன்ற குறையுடைய குழந்தைகள் இறந்தே பிறக்கிறது அல்லது பிறந்த சில மாதங்களில் இறந்து விடுகிறது என்று அவர் மேலும் கூறினார்.
நன்றி: அல்பிலாத் அரபி நாழிதள், ஜித்தா பதிப்பு, 23-10-02.
குறிப்பு: கர்ப்பப்பையில் குழந்தை உருவாகும் ஆரம்ப நிலையில் விரை முதுகந்தண்டிற்கும், விலா எலும்களுக்குமிடையில் இருக்கும். குழந்தை முழு வளர்ச்சி அடைந்து பிறப்பதற்குள் விரை அதற்குரிய பையில் வந்து தங்கிவிடும். தற்போது இருப்பது போல. இவ்வாறு விரை இறக்கம் நடைபெற வில்லையானால் குழந்தையின் மரணத்திற்கே அது காரணமாக ஆகிவிடுகிறது என்பது இங்கே கவனிக்கத் தக்கதாகும்.
முன் தொடர்களில் விந்துவின் தன்மைகள் குறித்தும், அது எங்கு, எவ்வாறு, உற்பத்தியாகி எவ்வாறு வெளிப்படுகிறது என்பது குறித்தும் பார்த்தோம். இந்த விந்து சம்பந்தப்பட்ட இன்னொரு மிக முக்கியமான தகவலையும் இந்த இடத்தில் பார்த்துக் கொள்வது மிகப்பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். அதாவது பாலை (ளுநஒ) தீர்மானிப்பதற்கும் விந்துவில் உள்ள உயிரணுதான் காரணமாக இருக்கிறது என்று இன்றைய மருத்துவ அறிஞர்கள் ஆதாரத்துடன் நிருபித்துள்ளார்கள். இந்த தகவலை குர்ஆன் 1430 ஆண்டுகளுக்கு முன்பே கூறி இருப்பதுடன், இந்த பாலை தீர்மானிப்பதற்கு பெண்ணை எந்த விதத்திலும் காரணமாக ஆக்க முடியாது என்ற தகவலையும் சேர்த்துச் சொல்வது குர்ஆனின் அற்புதமாக உள்ளது. அறிவியல் தகவலையும், குர்ஆன் கூறும் உண்மைகளையும் பார்ப்பதற்கு முன்பு ஆண், பெண் குழந்தை உருவாகுவது குறித்து அன்றும் இன்றும் என்ன கருத்து இந்த சமுதாய மக்களிடையே நிலவிவருகிறது என்று சற்று அலசுவோம்.
பெண்ணுக்கு உயிருடன் சமாதி கட்டிய அநியாயம்
குழந்தை ஆணாக அல்லது பெண்ணாக பிறப்பதற்கு பெண்தான் காரணம் என்ற கருத்து அன்று முதல் இன்றுவரை பாமர மக்களிடையே நம்பப்பட்டு வருகிறது. படித்த மருத்துவ அறிஞர்களிடமும் இந்த மூட நம்பிக்கை ஆழமாக வேரூன்றிருப்பது வேடிக்கையாகும். அதனால் அன்றும் இன்றும் ஆண் குழந்தை பெற்றுத்தராத மனைவிகளை கடும் சித்தரவதை செய்து வருகிறார்கள் இந்த ஆண்வர்க்கம். பெண் சிசுவைப் பெற்ற பெண்ணை வேதனைப்படுத்துவதில் தானும் ஒரு பெண் என்ற நினைவில்லாத மாமியாரும் சேர்ந்திருப்பது இன்றைய நவீன காலத்தின் சாதனையாகும். பெண் குழந்தை பெற்றதால் ஒரு தாய் வார்த்தையில் எழுதமுடியாத அளவிற்கு அன்றும் இன்றும் பல சங்கடத்திற்கு உள்ளாகிறாள்.
அன்று பெண்குழந்தையின் நிலை:
ஒருவனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்ற சந்தோஷமான சுப செய்தி சொல்லப்படும் போது, தன்மீது இடிவிழுந்து தனது வாழ்க்கையே நாசமாகி விட்டது போன்ற பிரமை ஏற்பட்டு, பெண்ணைப் பெற்றுத்தந்த தனது மனைவியின் மீதுள்ள கோபத்தை விழுங்கிய நிலையில் செய்வதறியாது முகம் கருத்துப் போய்விடுகிறான். யாருக்கும் தெரியாமல் அந்த பெண் சிசுவை மண்ணுக்குள் புதைத்து விடுவதா? அல்லது காலம் முழுவதும் இழிவை சுமந்த நிலையில் அந்த குழந்தையை வளர்ப்பதா? என்ற வேதனையான யோசனையில் ஆழ்ந்து, தனக்கு நிவர்த்தி செய்யமுடியாத பேரிழப்பு ஏற்பட்டுவிட்டதாக நினைத்து கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகி மக்களின் பார்வையிலிருந்து மறைந்து வாழ்கிறான். அந்தளவு பெண் குழந்தை பிறப்பதை வெறுத்து வந்தார்கள் அன்றைய ஆண்வர்க்கத்தினர். இந்த தகவலை குர்ஆன் பின் வருமாறு எடுத்துரைக்கிறது.
وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنْثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدّاً وَهُوَ كَظِيمٌ يَتَوَارَى مِنَ الْقَوْمِ مِنْ سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَى هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلا سَاءَ مَا يَحْكُمُونَ
இன்னும் அவர்களில் ஒருவனுக்கு பெண் குழந்தை (பிறந்திருப்பது) கொண்டு நன்மாராயங் கூறப்பட்டால், கோபத்தை அடக்கி விழுங்கியவனாக அவன் இருக்க அவனுடைய முகம் (துக்கத்தால்) கருத்ததாக ஆகிவிடுகிறது. எதனைக் கொண்டு நன்மாராயங் கூறப்பட்டானோ அதன் தீமையினால் இழிவுடன் அதை வைத்துக் கொள்வதா? அல்லது அதை மண்ணில் புதைத்து விடுவதா? என்று (கவலைப்பட்டு, மக்கள் முன் வராமல்) சமூகத்தாரை விட்டும் மறைந்து கொள்கிறான். அவர்கள் செய்யும் தீர்மானம் மிகக் கெட்டது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
(உலகப் பொதுமறை அல்-குர்ஆன்: 16: 58,59)
பெண் குழந்தை பிறந்த இழிவைத்தாங்கிக் கொள்ள முடியாத அவர்கள், எந்தப் பாவமும், யாருக்கு எந்தத் தீமையும் செய்யாத அந்த குழந்தையை உயிருடன் மண்ணுக்குள் புதைத்துவந்தார்கள். உயிருக்குப் போராடும், கல் மனதையும் கரைய வைக்கும் தனது குழந்தையின் மரண ஓலத்தை கேட்டுக் கொண்டே இந்தக் கொடூரச் செயலை எவ்வாறு அவர்களால் செய்ய முடிந்தது.?
பெண்ணுரிமை பேசப்படும் இன்று பெண்குழந்தையின் அவலம்:
அன்றைய அறியாமை காலத்தில் பெண்ணுரிமைச் சங்கம் இல்லை பெண் விடுதலை இயக்கம் நடத்தப்படவில்லை. அதனால் பெண்கள் உயிர் வாழும் உரிமை பறிக்கப்பட்டு, உயிருடன் புதைக்கப்பட்டனர். அவர்களுக்கு ஆன்மா என்பது ஒன்று இருக்கிறதா? என்றெல்லாம் பேசப்பட்டுவந்த அறியாமைக்காலம் அது. ஆனால் பெண்ணுரிமைச் சங்கம், பெண்விடுதலை இயக்கம் எல்லாம் தோன்றி, பெண்ணுரிமைகளுக்காக? பல மாநாடுகளும், போராட்டங்களும் நடத்தி பெண்ணுரிமை, பெண் விடுதலை? என மூச்சுக்கு மூச்சு பேசப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த நவீன யுகத்தில் பெண்ணுரிமைகள் பாதுகாக்கப் படுகின்றனவா? அவர்களின் உயிருக்கும், உடமைக்கும், கற்புக்கும் பாதுகாப்பு உள்ளதா? அல்லது இந்த பெண்சிசுக் கொலைதான் இல்லாமல் ஆக்கப்பட்டிருக்கிறதா?. பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பதற்காகவே உருவாக்கப்பட்ட இந்த சங்கங்களின் காதுகளுக்கு இந்த செய்தி எட்டவில்லையா? பெண் சிசுக் கொலையை தடுத்து நிறுத்தி பெண்களுக்கு உயிர் வாழும் உரிமையை வாங்கித்தர ஏன் இந்த இயக்கங்கள் பாடுபட வில்லை. தஸ்லீமாவைப் போல் வேலிதாண்டியவர்களுக்கு வக்காலத்து வாங்கி களத்தில் இறங்கிய இயக்கங்கள் இந்தசிசுக் கொலை கொடுமையை கண்டிக்க முன்வரவில்லையே! ஏன்? இந்தக் கொடுமை தாங்கள் சார்ந்திருக்கும் இந்து மதமக்கள் மட்டும் செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற காரணத்தினாலேயா? அறியாமை காலத்தில் நடந்த முறையை விட மிகக் கொடூரமான முறையை பின்பற்றியல்லவா இன்று பெண் சிசுக்கள் கொல்லப்படுகிறது. அன்று ஆண்கள் தான் இந்த மன்னிக்கமுடியாத குற்றத்தை செய்தார்கள் என்றால் இன்றோ தனது மாமியார், கணவனின் தொல்லைகளுக்கு பயந்து, பாலூட்டி தாலாட்டி வளர்க்க வேண்டிய அன்புள்ள அன்னையே தனது கருணையான உள்ளத்தை கல்லாக்கி, துடிதுடித்து உயிரை விடப்போகும் தனது அன்புக் குழந்தையைக் காண தைரியம் இல்லாமல் தனது இருக்கண்களையும் இறுக மூடிக் கொண்டு, அரவணைக்க வேண்டிய அன்புக் கரங்களாலேயே கள்ளிப்பாலை ஊற்றி சாகடிக்கும் கொடுமையான நிகழ்வுகள் அல்லவா அன்றாட செய்தியாக மாறிவிட்டது. தனது அன்புத் தாய் தனது பசியை போக்க தனக்கு அமுதூட்டுகிறாள் என்று கருதி நாக்கை வளைத்து, சுழித்து சப்பைக் கொட்டி, சுவைத்து கள்ளிப்பாலை அருந்தும் அந்த குழந்தைக்கு இது கள்ளிப்பால், நீ துடிதுடிக்க உனது உயிரைக் குடிக்கப்போகும் பால், உனது பசியை நீக்க அல்ல, அழுகிய இருதயம் பெற்ற மனிதர்கள் வாழும் இந்த உலகத்திலிருந்தே உன்னை நீக்கப்போகும் பால் என்பதை எடுத்துச் சொல்தவற்குக்கூட அப்போது யாருமில்லையே.
பெரியவர்களே உண்பதற்கு முடியாத உம்மியுடன் கூடிய நெல்லை அந்த சிசுவின் சிறிய வாயில் திணித்து கொல்லப்படும் கொடூரமான முறையையும் தமிழகத்தின் சில பகுதிகளில் கடைபிடித்து வருவதை எழுதுவதற்கே வெட்கமாக இருக்கிறது. வேதனையால் பேனா முணை எழுத மறுக்கிறது. இந்தளவிற்கு கொடூரமான வழிமுறையை பின்பற்றி கொல்லப்படும் அளவிற்கு அந்த சிசு என்ன மன்னிக்கமுடியாத பாவம் செய்தது?. பெண்ணாக பிறந்தது அந்த சிசுவின் குற்றமா? அல்லது அதனைப் பெண்ணாகப் பெற்ற தாய் குற்றத்திற்காக அந்த சிசு தண்டிக்கப்படுகிறதா? பெண்ணாக பிறப்பதற்கு யார் காரணம்? ஆண் மகன் நீ அல்லவா? யோசனை செய்து பார்.
இந்த கொடூரத்தை நிறுத்துவதற்கு உருப்படியான திட்டத்தை வகுத்து அதனை செயல்படுத்தி, இந்த ஈனச்செயலை நிறுத்த முடிந்ததா இந்த பெண்ணுரிமை இயக்கங்களால்?. தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட தொட்டில் குழந்தை திட்டம் அந்த பெண் குழந்தைகளின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக ஆக்கி இருப்பதுடன், அந்தப் பெண் வளர்ந்து புரிந்து கொள்ளும் பருவம் அடைந்தப்பின் தாய், தந்தை அறியாத தனக்கு ஏற்பட்டுள்ள இந்த அவமான நிலையை நினைத்து மனமுடைந்து தற்கொலை செய்து கொள்வதற்கல்லவா இந்தத் திட்டம் வழிவகுத்துள்ளது. இதனால்சிசுக் கொலை குறைந்துள்ளதா? இல்லையே! கற்பனைக்கெட்டாத அளவிற்கு பல சமுதாயப்பிரச்சனைகள் தோன்றுவதற்கு இந்த திட்டம் காரணமாக ஆகிவிட்டது.
என்ன குற்றத்திற்காக இந்த சிசு கொடூரமாக கொல்லப்பட்டது என மறுமை நாளில் இந்த குழந்தை பற்றி விசாரிக்கப்படும் என்பது உணர்த்தப்படாத வரை, வேறு எந்த வழிமுறையினாலும் இந்த குற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது. மறுமை நாள் விசாரணையில் மாட்டிக் கொள்வோம் என்று இந்த சமுதாய மக்கள் புரிய ஆரம்பித்துவிட்டால் அவர்களிடையே இந்த குற்றம் அறவே இல்லாமல் ஆகிவிடும். அன்று குர்ஆன் உருவாக்கிய மிகப்பெரிய இஸ்லாமிய சமுதாயம் அதற்கு மிகச் சரியானதொரு எடுத்துக்காட்டாக இன்றும் திகழ்கிறது.
وَإِذَا الْمَوْؤُودَةُ سُئِلَتْ بِأَيِّ ذَنْبٍ قُتِلَتْ
என்ன குற்றத்திற்காக அவள் கொல்லப்பட்டாள் என்று உயிருடன் புதைக்கப்பட்ட பெண்பிள்ளை வினவப்படும் போது
(உலகப் பொதுமறை அல்-குர்ஆன்: 81: 8,9.)
இந்த இறைவசனம் இறக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை முஸ்லிம் சமூகம் எவ்வளவு பெரிய வறுமைக் கோட்டுக்குக்கீழ் வாழ்ந்து கொண்டிருந்தாலும், இந்த கொடூரத்தைச் செய்வதற்கு முன்வர மாட்டார்கள். உதாரணத்திற்குக் கூட முஸ்லிம் சமூகத்திடம் ஒரு நிகழ்வினை காண முடியாது. அறியாமையால் ஒரு காலத்தில் அந்தக் குற்றத்தைச் செய்து வந்த மக்களும் இந்த வசனத்தை அருளிய அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட பின் முற்றிலுமாக மாறி, தான் செய்த அந்த குற்றத்திற்காக அவனிடம் மன்றாடி மன்னிப்பு கேட்டுக் கொண்டார்கள்.
பெண் சிசுவதைக்கு முற்றுப்புள்ளி
கடந்த தொடரில் பெண் சிசு எவ்வளவு பெரிய கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு வந்தன என்பதைப் பார்த்தோம். இந்த கொடுமைகளுக்கு, ஈவு இரக்கமற்ற ஈனச்செயலுக்கு முற்றுபுள்ளி வைக்க மார்க்கமே இல்லையா? நிச்சயம் இருக்க வேண்டும். இந்த கொடூரத்திற்கு சமுதாயத்திலிருந்து இறுதி விடை கொடுத்துவிட வேண்டும்.
என்ன குற்றத்திற்காக இந்த சிசு கொடூரமாக கொல்லப்பட்டது என மறுமை நாளில் இந்த குழந்தை பற்றி விசாரிக்கப்படும் என்பது உணர்த்தப்படாத வரை, வேறு எந்த வழிமுறையினாலும் இந்த குற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது. மறுமை நாள் விசாரணையில் மாட்டிக் கொள்வோம் என்று இந்த சமுதாய மக்கள் புரிய ஆரம்பித்துவிட்டால் அவர்களிடையே இந்த குற்றம் அறவே இல்லாமல் ஆகிவிடும். அன்று குர்ஆன் உருவாக்கிய மிகப்பெரிய இஸ்லாமிய சமுதாயம் அதற்கு மிகச் சரியானதொரு சிறந்த எடுத்துக்காட்டாக இன்றும் திகழ்கிறது.
உயிருடன் புதைக்கப்பட்ட பெண் குழந்தையானவளும் என்ன குற்றத்திற்காக அவள் கொல்லப்பட்டாள் என்று வினவப்படும் போது.
(உலகப் பொதுமறை அல்-குர்ஆன்: 82: 8,9)
இந்த இறைவசனம் இறக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை அந்த இஸ்லாமியச் சமூகமக்கள் எவ்வளவு பெரிய வறுமைக் கோட்டிற்கீழ் வாழ்ந்து கொண்டிருந்தாலும், இந்த கொடூரமான கொலை பாதகச் செயலைச் செய்வதற்கு முன்வர மாட்டார்கள்.
அறியாமையால் ஒரு காலத்தில் அந்தக் குற்றத்தைச் செய்து வந்த மக்களும் இந்த வசனத்தை அருளிய அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட பின் முற்றிலுமாக மாறி, தான் செய்த அந்த குற்றத்திற்காக அவனிடம் மன்றாடி கால முழுவதும் மன்னிப்பு கேட்டுக் கொண்டே இருந்தார்கள்.
பெண்ணுரிமை போற்றிய பெருமானார்(ஸல்) அவர்கள்
பெண் குலத்திற்கு பெருமைச் சேர்த்த இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் இந்த சமுதாய மக்கள் ஒவ்வொருவரும் தனக்கு பெண் குழந்தை பிறக்காதா? என்று எதிர்பார்த்து வாழும் நிலைக்கு பெண்களின் புகழை பன்மடங்கு உயர்த்தி விட்டார்கள். அரபு மொழி பேசும் இஸ்லாமிய நாடுகளில் பெண்குழந்தையை பெருமைபடுத்தும் காட்சிகளை, தனக்கு பெண் குழந்தை பிறப்பதை பெருமையாக கருதும் நிலையை அங்கு பணிபுரியும் இந்தியர்கள் இன்றும் கண்கூடாக கண்டுகொண்டிருக்கிறார்கள். இந்த உயர் நிலை அவர்களிடையே எவ்வாறு ஏற்பட்டது? பெண் குழந்தை பிறப்பது தனக்கு பெருத்த அவமானம் என்றுகருதிக் கொண்டிருந்த அந்த அரபு மக்கள், பெண்களை போகப்பொருளாக, குழந்தை பெற்றுத் தரும் இயந்திரமாக கருதிக் கொண்டிருந்த அந்த அறியாமைக் காலத்து மக்களிடையே, பெண்களுக்கு உயிர், உரிமை உள்ளதா என்று விவாதம் புரிந்து கொண்டிருந்த காட்டு மிராண்டி குணம் படைத்த அந்த மக்களிடையே பெண்மைக்கு உயிருள்ளது, ஆண் மகனுக்கு இருப்பது போன்ற உணர்ச்சிகள் பெண்ணுக்கும் உண்டு, வாழ்க்கையில் ஆண் ஒரு பக்கம் எனில், பெண் இன்னொரு பக்கம், பெண்மை இல்லாமல் மனித வாழ்க்கை இல்லை என்று உணர்ந்து, பெண்ணினத்தை மதிக்க அந்த மக்களுக்கு கற்றுத்தந்தது எது? அந்த அறியாமைக் காலத்து மக்கள் மிகக்குறைந்த நாட்களில் மனம் மாற்றம் அடைவதற்கு எது காரணமாக அமைந்தது? அதற்கெல்லாம் பின் வரும் நபி மொழி பதிலாக அமைகிறது.
நபி(ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா(ரலி) அவர்கள் கூறியதாவது: என்னிடம் ஏதேனும் (தரும்படி) கேட்டு ஒரு பெண்மணி வந்தார். அவருடன் இரு பெண் குழந்தைகள் இருந்தனர். அப்போது ஒரே ஒரு பேரீச்சம் பழத்தைத் தவிர வேறெதுவும் அவருக்கு கொடுக்க என்னிடம் கிடைக்கவில்லை. ஆகவே அதை அவருக்குக் கொடுத்தேன். உடனே, அதனை இரண்டாக பங்கிட்டு தனது குழந்தைகள் இருவருக்கும் கொடுத்தார். பிறகு அப்பெண்மணி எழுந்து சென்று விட்டார். பின்னர் நபி(ஸல்) அவர்கள் வந்தார்கள். அவர்களிடம் இது பற்றி நான் சொன்னேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், யார் இந்தப் பெண் குழந்தைகளில் ஒன்றுக்குப் பொறுப்பேற்று நன்மை புரிவாரோ அவருக்கு அந்தக் குழந்தைகள் நரகத்திலிருந்து தடுக்கும் திரையாக இருப்பார்கள் என்று கூறினார்கள்.
நூல்: புஹாரி
இந்த நபிமொழியைக் கேட்ட ஒவ்வொருவரும் தனக்கு பெண் குழந்தை பிறக்காதா? அதனை மனம் நோகாமல் சீராட்டி, சிறப்பாக வளர்க்க வேண்டும், அதற்கு பரிசாக இறைவனிடத்தில் சுவர்க்கத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று இரவு பகலாக கனவு காண ஆரம்பித்து விட்டார்கள். பெண் குலத்தின் பெருமைக்கும், சிறப்புக்கும் மகுடம் வைத்தாற் போல் அமைந்துள்ள பின் வரும் இன்னொரு நபி மொழியைப் பாருங்கள்.
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் தனது குடும்பத்திற்கு (மனைவிக்கு) சிறந்தவனாக விளங்குகிறாரோ அவரே சிறந்தவராவார். எனது குடும்பத்திற்கு நான் சிறந்தவனாக விளங்குகிறேன். அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள்,
நூல் திர்மிதி, இப்னு ஹிப்பான்.
இந்த நபிமொழியில் ஒரு ஆண்மகன் சிறந்தவனாக கருதப்படுவதற்கு அளவுகோலாக தனது மனைவியிடத்தில் நல்ல நடைமுறை கடைபிடித்து, அவளின் மதிப்பிற்குரிய சிறப்பான கணவனாக திகழவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது என்றால் பெண்குலத்தின் மரியாதைக்கு எவ்வளவு பெரிய மணிமகுடம் சூட்டியிருக்கிறார்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள். இந்த நிலையில் தனது மனைவிக்கு ஆறாத மனவேதனை தரும் சிசுவதை செய்வதற்கு அல்லாஹ்வை விசுவாசம் கொண்ட எந்த ஆண் மகன் துணிவான்? சிந்தித்துப் பாருங்கள். நபிகள் நாயகத்தின் இந்த மந்திர வார்த்தைகள்தான் பெண்சிசுக் கொலையில் இன்பம் கண்டுவந்த அந்த அரபிகளை முற்றிலுமாக மாற்றியமைத்தது. அந்த இறைத்தூதரின் வார்த்தைகளை தங்களின் உயிரினும் மேலாக மதித்து வந்தார்கள் என்றால் அது மிகையாகாது. உலக அழிவுவரைக்கும் அவர்களிடையே இந்த சிசுக் கொலை நடைபெற முடியாத அளவிற்கு இந்த சமுதாயத்தை உருவாக்கிய பெருமை மனிதப்புனிதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்குத்தான் உண்டு. பெண்ணினத்திற்கு உயிர் வாழும் உரிமம் பெற்றுத்தந்த நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தான் என்பது இரண்டு கருத்துக்கு இடமில்லாத ஒன்றாகும்.
எனினும் இன்று வாழும் சாமான்ய இஸ்லாமியர்களில் சிலர் தங்களுக்கு பெண்குழந்தை பிறப்பதை வெறுத்து வருகிறார்கள். (அந்த வெறுப்பு பெற்ற குழந்தையை கொலை செய்யும் அளவிற்கு மாறவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும்) காரணம் தூய இஸ்லாமிய நெறியிலிருந்து சற்று விலகி வாழும் சில நாடுகளில் உள்ள முஸ்லிம் சமுதாயத்தில் எப்படியோ வரதட்சிணைப் பேய் புகுந்து, அவர்களது இறைவிசுவாசத்தில் சிறிய சிராய்ப்பை ஏற்படுத்தி விட்டது. அதனை சரிசெய்வது விவரம் அறிந்த ஒவ்வொரு இஸ்லாமியர்கள் மீதும் சுமத்தப்பட்டுள்ள கட்டாயக் கடமை என்றுணர்ந்து அதற்காக இந்த அறிவியல் தொடரில் சில வரிகளை எழுத வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறேன்.
பெண்மையில்லாத உலகம்
பெண் குழந்தை பிறப்பதை வெறுத்து, தங்களுக்கு ஆண் குழந்தைதான் வேண்டும் என்று ஒவ்வொருவரும் ஆசைப்படுகிறார்கள். இவர்களது ஆசைப்படி ஆண்குழந்தையே அனைவருக்கும் பிறந்தால் என்ன பின் விளைவுகள், நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படும் என்பதை சிந்தித்துப்பார்க்கவே பயமாக இருக்கிறது. பெண்மை இல்லாத ஓர் உலகத்தை எவ்வாறு கற்பனை செய்ய முடியும். அது சாத்தியமா? ஓவ்வொரு தாயும் ஆண்குழந்தைகளை மட்டுமே பெற்றெடுத்தால் மனித இனம் விரைவில் அழிந்து போய்விடுமே! இது இறைவிதிக்கு முற்றிலும் மாற்றமானது. ஏனெனில் இறைவன் உலகில் எல்லாப் பொருளையும் ஆண், பெண் என ஜோடிகளாகத்தான் படைத்திருக்கிறான். அது பல்கிப் பெருக வேண்டும் என்பது அவனது திட்டம். இது அல்லாஹ் ஏற்படுத்திய எல்லாப்படைப்புகளுக்கும் உள்ள பொதுவான மாற்றி எழுதமுடியாத நியதி.
ஓவ்வொரு கனிவர்க்கத்திலிருந்தும் (ஆண், பெண் என இருவகை கொண்ட) ஜோடிகள் இரண்டை அதில் உண்டாக்கினான்.
(உலகப் பொதுமறை அல்-குர்ஆன்: 13: 3)
நீங்கள் நல்லுணர்ச்சி பெறுவதற்காக ஒவ்வொரு பொருளிலிருந்தும் (ஆண் பெண் கொண்ட) இருவகையை நாம் படைத்திருக்கிறோம்.
(உலகப் பொதுமறை அல்-குர்ஆன்: 51: 49)
ஆண், பெண் என பாகுபடுத்தி பார்க்க முடியாத கனிவர்க்கங்களிலும், மரம் செடி முதல் எல்லாப் பொருளிலும் ஆண் பெண் என இரு இனம் இருக்கும் போது மனித குலம் மட்டும் இதற்கு விதிவிலக்காக இருக்க முடியுமா? எனவே, பெண்ணினம் இல்லாத ஓர் உலகை கற்பனை செய்து கூட பார்க்கமுடியாது. பெண்மை இல்லாத இனம் விரைவில் அழிந்து போய்விடும்.
அல்லாஹ்வின் அருளே!
எனவே, எந்த குழந்தை பிறந்தாலும் அல்லாஹ் தனக்கு செய்த அருள் என்றுகருதி அவனுக்கு நன்றிசெய்யும் பண்பாட்டை கற்றுக் கொள்ள வேண்டும். பெண் குழந்தை கொடுத்தவன் இறைவனே! அதனை பாதுகாப்பாக வளர்ப்பவனும் அவனே! என்ற ஆழமான இறை நம்பிக்கை நம்மில் வளர்ந்து மிளிர வேண்டும். தாம் விரும்பும் குழந்தையை பெற்றுக் கொள்ளும் அதிகாரம் உலகில் யாருக்கும் வழங்கப்பட வில்லை. அது சாத்தியமும் அன்று. யாருக்கு என்ன குழந்தையை தர வேண்டும் என்று தீர்மானிப்பதில் இறைவனைத்தவிர வேறு யாருடைய தலையீடும், அந்த தீர்மானத்தை மாற்றி எழுதும் வல்லமை பெற்ற யாரும் இந்த உலகில் இல்லை. இதனை பின்வரும் இறைவசனம் நமக்கு மிகத் தெளிவாக எடுத்துச் சொல்கிறது.
பெண்ணினத்தை வெறுப்பவன் இறைவனை வெறுப்பவனாகும்
வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியதாகும் அவன் நாடியவற்றை அவன் படைக்கிறான் (ஆகவே) அவன் நாடியவர்களுக்குப் பெண்மக்களை அன்பளிப்பு செய்கிறான் அவன் நாடியவர்களுக்கு ஆண்மக்களை அன்பளிப்புச் செய்கிறான். அல்லது, ஆண்மக்களையும், பெண்மக்களையும் கலந்தே கொடுக்கிறான் அன்றியும் அவன் நாடியவர்களை மலடாகவும் ஆக்கி விடுகிறான். நிச்சயமாக அவன் (யாவற்றையும்) நன்கறிந்தவன் (தான் விரும்பியதைச் செய்ய) மிக்க ஆற்றலுடையவன்.
(உலகப் பொதுமறை அல்-குர்ஆன்: 42: 49, 50)
யாருக்கு என்ன குழந்தையைக் கொடுக்க வேண்டும், யாரை குழந்தைப் பாக்கியமற்றவர்களாக ஆக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் அல்லாஹ்விற்கு மட்டுமே உள்ளது என்று இந்த வசனம் உரக்கப் பேசுவதைக் கவனியுங்கள்.
எனவே, பெண்குழந்தை பிறப்பதை வெறுக்கும் ஒருவன் இறைவன் செய்த தீர்மானத்தை வெறுத்தவனாக கருதப்பட்டு இஸ்லாத்தின் வட்டத்திலிருந்தே வெளியேறியவன் என்று முத்திரை குத்தப்படும். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும். இறைவனுடைய தீர்மானம், அது எதுவாக இருந்தாலும் அதனை ஏற்றுக் கொள்வது இறைவிசுவாசியின் கடமைகளில் ஒன்றாகும். அதனை ஏற்றுக் கொள்ளாத போது அவன் ஒரு முஸ்லிமாக அறவே இருக்கமுடியாது. எனவே ஒருவனுக்கு பெண் குழந்தை பிறப்பதும், ஆண் குழந்தை பிறப்பதும் அல்லாஹ்வின் தீர்மானமாகும்.
இறைவன் மட்டும் அறிந்த இரகசியம்
ஆணின் உயிரணுவை மனித வடிவமாக மாற்றி, கண், காது மற்றும் பல உடலுறுப்புகளையும் உருவாக்க வேண்டும் எனும் கட்டளைகள் வழங்கப்பட்ட வானவருக்கு, உரிய நேரம் வரும்வரை ஆணாக அல்லது பெண்ணாக அதனை ஆக்க வேண்டுமா? என்பது அறிவித்துக் கொடுக்கப்பட வில்லை. அதனால் அதனை ஆணாக அல்லது பெண்ணாக ஆக்க வேண்டுமா? என்பதற்கான அல்லாஹ்வின் கட்டளையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். என்னவாக ஆக்க வேண்டும் என்று இறைவனிடத்தில் கேட்டும் விடுகிறார்.
உண்மையில் உயிரணு கருவறைக்குள் செல்லும் போதே அது ஆணா அல்லது பெண்ணா என்பது தீர்மானமாகிவிடும். (இது குறித்து பின்பு உரிய இடத்தில் விளக்கப்படும்.) எனினும் பாலுறுப்புகளை வெளிப்படுத்த வேண்டிய நேரம் வரும் வரை அல்லாஹ் மட்டுமே அறிந்த இரகசியமாக அது பாதுகாக்கப்பட்டு வருகிறது. உரிய நேரம் வந்ததும், தான் எதுவாகப்படைக்க வேண்டும் என்று தீர்மானித்து வைத்திருந்தானோ அதற்குரிய பாலுறுப்பை வெளிப்படுத்த வானவருக்கு உத்தரவிடுகிறான். அந்த இறை உத்தரவைப் பெற்ற பிறகுதான் அந்த வானவர் அதனைச் செயல் படுத்துகிறார். அதற்கு முன்புவரை அந்த வானவராலும் அறிய முடியாது. அது மட்டுமா? வேறு எவ்வளவு பெரிய அதிநுட்பமான நவீன கருவியின் மூலமும் ஆணா? பெண்ணா? என்பதை அறவே அறிந்து கொள்ள முடியாது. வானவர் பாலுறுப்பை வெளிப்படுத்தியப்பின்புதான் அதனை நவீன கருவிகளைப் பயன் படுத்தி அதன் மூலம் மனிதர்களால் அறிந்து கொள்ள முடிகிறது. இவ்வாறு பாலுறுப்பு வெளிப்படுத்தப்பட்டப்பின்பு நவீன கருவிகள் மூலம் பார்த்து ஆணா? பெண்ணா? என அறிந்து கொள்வதில் நமக்கு என்ன பெருமை இருக்க முடியும்?. சிறு குழந்தை கூட இந்த நவீன கருவிகளின் துணை கொண்டு கருவறையை உற்று நோக்கி அதனுள் இருப்பது ஆணா அல்லது பெண்ணா என்பதைக் கண்டுபிடித்துத் தௌ;ளத் தெளிவாக சொல்லி விடுமே. அதனைத் தெரிந்து கொள்வதற்கு பெரிய ஆய்வுகள் ஒன்றும் தேவையில்லையே! வெளிப்படுத்தப் பட்டுவிட்ட ஒரு பொருளை கருவிகளின் துணை கொண்டு அறிந்து கொள்வதில் என்ன பெருமை இருக்க முடியும்?. பாலுறுப்புகள் வெளிப்படுத்தப்படும் முன்பு அந்த கரு ஆணா? பெண்ணா? என்பதை ஒருவரால் சொல்ல முடியும் என்றால் அது பெரிய சாதனைதான். அந்த அளவிற்கு விஞ்ஞானம் முன்னேற்றம் அடைந்துள்ளதா? என்றால் அதுதான் இல்லை. இனி ஒரு போதும் அது சாத்தியமும் இல்லை.
ஹார்மோன்களை ஆய்வு செய்து ஆணா? பெண்ணா? என்பதைக் கண்டறியும் முறையும் இருப்பதாக இன்றைய விஞ்ஞானம் உலகம் கூறிக் கொண்டிருக்கிறது. ஆன்ட்ரோஜன் (யுனெசழபநn) என்ற ஆண்களுக்கான ஹார்மோன் கருவில் அதிமாக இருக்கும் போது அது ஆண் குழந்தை எனவும், ஈஸ்டோரஜன் (ழுநளவழசபநn) என்ற பெண்களுக்கான ஹார்மோன் அதிமாக இருக்கும் போது அந்தக் கரு பெண் குழந்தை எனவும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இந்த செயல் முறைச் சோதனை எப்போது சாத்தியமாகும் எனில் பாலுறுப்பு உண்டாகும் போதுதான். பாலுறுப்புகள் வெளியே தெரிய ஆரம்பிக்கும் முன்பு இந்த ஹார்மோன் சோதனையின் மூலம் தெரிந்து கொள்ள முடியாது என்பதை தயக்கமின்றி ஏற்றுக் கொள்கிறார்கள் மருத்துவ மேதைகள். காரணம் பாலுறுப்பு வெளிப்படும் முன்பு கருக் குழந்தையிடம் உள்ள ஹார்மோன்கள், ஆணுக்குரியது, பெண்ணுக்குரியது என வித்தியாசப்படுத்தியோ, வேறுபடுத்தியோ பார்க்க முடியாத விகிதத்தில்தான் இருக்கும். அப்போது இந்த ஆய்வு, கருவில் உள்ளது ஆணா? பெண்ணா? என்பதை அறிந்து கொள்வதற்கு எந்த விதத்திலும் பயனளிக்காது என்று மருத்துவ மேதைகள் பேசிக் கொள்வது நமது காதுகளில் விழுகிறது.
சுப்ஹானல்லாஹ். அல்லாஹ் மட்டுமே அறிந்த இந்த இரகசியம், உரிய நேரம் வரும் வரை யாரும் எந்த விதத்திலும் அறிந்து கொள்ள முடியாத படி எந்த அளவிற்குப் பாதுகாக்கப்படுகிறது என்பதைப் பார்த்தீர்களா?
கருவறைகளில் உள்ளவைகளை அவன் அறிகிறான்.
(உலகப் பொதுமறை அல்-குர்ஆன் 31:34)
பாலுறுப்புகள் வெளிப்படுத்தப்படும் முன்பு எந்த நவீன கருவிகளின் மூலமும் இந்த தகவலை அறிந்து கொள்ள முடியாது என்பது நிதர்சனமான சத்தியமாகும். அதனை அறிந்திருப்பது அல்லாஹ் மட்டும்தான் அவனைத்தவிர இந்த உண்மையை அறிந்தவர்கள் யாரும் இல்லை.
நெருக்கமான வானவர்களாக இருந்தாலும் சரி, மிகப் பெரிய அந்தஸ்து பெற்ற நபிமார்களாக இருந்தாலும் சரி, எவராலும் அறிந்து கொள்ள முடியாது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
அதாவது கருவறையில் உள்ள குழந்தை பாலுறுப்பு வெளிப்படும் முன்பு அது ஆணா? பெண்ணா? என்பதை அல்லாஹ் மட்டுமே அறிந்திருக்கிறான் என்று பொருள் கொள்ளவதுதான் சரியாக இருக்கும்.
மேலும், கரு உயிரூட்டப்படும் வரை அது அஃறிணைப் பொருளாகவே இருக்கிறது என்பதை குர்ஆனின் பின் வரும் வசனத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
பின்னர் அந்த உயிரணுவை அலக்காக படைத்தோம் பின்னர், அந்த அலக்கை மாமிசத் துண்டாகப் படைத்தோம் பின்னர் அந்த மாமிசத்துண்டை எலும்புகளாகப் படைத்தோம் பின்னர், அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம் பின்னர் நாம் அதனை வேறு படைப்பாக (முழு மனிதனாக) உருவாக்கினோம். படைக்கிறவர்களில் மிக அழகானவனான அல்லாஹ் மிக உயர்வானவன்.
(உலகப் பொதுமறை அல்-குர்ஆன் 23:14)
இந்த வசனத்தில் கருவின் ஆரம்ப நிலையிலிருந்து இறுதிக்கட்டம் வரை உள்ள அதன் பல நிலைகள் சொல்லப்பட்டிருக்கிறது. கருவின் ஆரம்ப நிலையான உயிரணு முதல் எலும்புகளுக்கு மாமிசம் அணிவிக்கப்படும் நிலை வரை அந்தக் கரு அஃறிணையாகவே இருக்கும். மாமிசம் அணிவிக்கப் பட்டப் பிறகுதான் அந்தக் கருவினை ஆணாக அல்லது பெண்ணாகப் படைக்க வேண்டுமா? என்பதை வானவர் இறைவனிடத்தில் கேட்டு செயல் படுத்துகிறார். அதற்குப்பிறகு வேறு ஒரு படைப்பாக (முழு மனித வடிவமாக) மாறுகிறது. அப்போது அது உயர்திணை நிலையை அதாவது மனித நிலையை அடைகிறது. பாலுறுப்பு வெளிப்படும் முன்புவரை கருவின் நிலை அஃறிணையாக இருப்பதால்தான் அந்த நிலையைக் குறிக்க, மேற்கூறிய இறை வசனத்தில் அஃறிணைக்கு பயன்படுத்தப்படும்ما (மா) என்ற எழுத்து உபயோகிக்கப் பட்டுள்ளது. மாறாக கருவறையைக் குறிப்பதற்கல்ல என்று புரிந்து கொள்ள வேண்டும். அப்போது, அஃறிணைக்குரிய எழுத்தான மா என்பது பயன்படுத்துப்பட்ட நோக்கமும் தெளிவாகிவிடும் இந்த வசனத்திற்கு நாம் கொடுத்த விளக்கம் எவ்வளவு யதார்த்தமாக உள்ளது என்பதும் தெரியவரும். (அல்லாஹ்வே மிக நன்கு அறிந்தவன்)
காரணம் இல்லையேல் காரியம் இல்லை
எனவே கருவறையில் உருவாகும் சிசுவினை ஆணாக பெண்ணாக படைப்பது அல்லாஹ்வின் நாட்டத்தில் உள்ளதாகும். எதுவாக படைக்க விரும்புகிறானோ அதுவாகவே படைக்கும் ஆற்றலுடையவன். எனினும் காரண காரிய மிகுந்த இந்த உலகில் எந்த காரியம் நடைபெற வேண்டும் என்றாலும் அதற்கு சில காரணங்களை அமைத்து வைத்துள்ளான் ரப்புல் ஆலமீனான அல்லாஹ். (அவன் காரணம் இல்லாமலேயே காரியத்தை உண்டாக்குவதற்கு ஆற்றல் பெற்றவன் என்பது யாரும் சந்தேகம் கொள்ள முடியாத விஷயமாகும். ஆண் துணையின்றி மரியம் (அலை) அவர்கள் மூலம் ஈஸா நபியை பிறக்கச் செய்தது அவனது ஆற்றலுக்கு ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகும்.) காரணம் இருக்கும் போது காரியம் நடைபெறும். (நடைபெறாமலும் போய்விடலாம் என்பது வேறு விஷயம்.) இது அல்லாஹ் ஏற்படுத்திய ஒரு நியதியாகும். உதாரணமாக மழை பொழிவதற்கு கருமேகம் கூடுவதை காரணமாக ஆக்கியிருக்கிறான். விளை நிலம் விதைகளை முளைக்க வைப்பதற்கு நீரை காரணமாக ஆக்கி இருக்கிறான். இந்த காரணங்கள் இல்லாத போது இந்த காரியங்கள் நடப்பது அரிதாகும்.
யார் காரணம்?
அது போல் குழந்தை ஆணாக அல்லது பெண்ணாக பிறப்பதற்கும் அல்லாஹ் சில காரணங்களை ஏற்படுத்தி வைத்திருக்கிறான். அறிவியல் முதிர்ச்சி அடைந்த இந்த நவீன காலத்தில் பல ஆய்வுகளுக்குப் பிறகு குழந்தை ஆணாக அல்லது பெண்ணாக பிறப்பதற்கு யார் காரணம் என்பதை சமீபத்தில்தான் கண்டுபிடித்துள்ளார்கள். அந்த கண்டுபிடிப்பு, பெண்கள் தான் அதற்கு காரணம் என்று இது நாள் வரை பாமரனாலும், படித்தவர்களாலும் நம்பப்பட்டு வந்த கருத்தோட்டத்திற்கு முற்றிலும் மாறுபட்டிருக்கிறது. அறிவியல் ஆய்வுகளின் படி ஆண்கள் தான் அதற்கு முழுக் காரணம், ஆண்களின் விந்துவில் உள்ள உயிரணுக்கள்தான் ஆணா? பெண்ணா? என்பதைத் தீர்மானிக்க காரணமாக இருக்கிறது என்று மருத்துவ அறிஞர்கள் ஆதாரத்துடன் கூறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த தகவலை 1400 ஆண்டுகளுக்கு முன்பே குர்ஆன் மிகத் தெளிவாக கூறிவிட்டது. அத்துடன் பெண்களை காரணமாக ஆக்கக்கூடாது என்ற செய்தியையும் அதில் தெளிவாக சொல்லப்பட்டிருப்பது வியக்கத்தக்க ஒரு தகவலாகும்.
பெண்கள் விளை நிலங்களே!
பெண் சிசுக்கள் பிறப்பதற்கு பெண்களே காரணம் என்று கருதி தாயும், சேயும் எவ்வாறெல்லாம் கொடுமைகளுக்கு உள்ளாக்கப் படுகிறார்கள் என்பது குறித்துப்பார்த்தோம். பெண் சிசு பிறப்பதற்கு பெண்கள் காரணம் இல்லை என்பதைத் தெரிந்து கொள்வோம்.
نِسَاؤُكُمْ حَرْثٌ لَكُمْ فَأْتُوا حَرْثَكُمْ أَنَّى شِئْتُمْ ...
உங்களது மனைவிகள் உங்களுக்குரிய விளை நிலங்களாகும். ஆகவே, உங்கள் விளைநிலங்களுக்கு நீங்கள் விரும்பியவாறு வாருங்கள்.
(உலகப் பொதுமறை அல்-குர்ஆன்: 2:223)
இந்த வசனத்தில் பெண்களை ஆண்களின் விளை நிலங்கள் என்று குறிப்பிடுகிறான். இதனை பார்க்கும் சிலர், பெண் உரிமையின் கழுத்து நெறிக்கப்படுகிறதே| என ஓநாய் கண்ணீர் வடிக்கிறார்கள். பெண்களை வெறும் விளைநிலங்களுக்கு ஒப்பிட்டு அவர்களின் சுயமரியாதை சாகடிக்கப்படுகிறதே இஸ்லாத்தில் என்று கூச்சலிடுகின்றன இந்த ஓநாய் கூட்டங்கள். இவர்களது மயக்கு வார்த்தையில் மதியிழந்த, புதுமைப் பெண்ணுலகம் படைக்கப்போவதாக வாய்சவடால் அடிக்கும் சில அபலைப் பெண்கள் கர்பப்பை சுதந்திரம் வேண்டும் என்று கோஷமிடுகிறார்கள். அதனுடைய பின்விளைவுகளின் பரிணாமத்தை புரிந்து கொள்ளாமலேயே வெற்றுக் கோஷம் எழுப்பும் இவர்கள், இந்த இறைவசனத்தின் அர்த்தத்தை சரியான முறையில் சிந்தித்து புரிந்து கொண்டால், சில வார்த்தைகள் கொண்ட இந்த வரியில் இவ்வளவு ஆழமான அர்த்தம் மறைந்திருக்கிறதா? என வியந்து போய்விடுவார்கள். தான் ஏமாற்றப்பட்டு, சுரண்டப்படுவதையும் புரிந்து கொள்வார்கள்.
புதுமைப் பெண்ணே! உன்னைத் திரும்பிப்பார்!
குழந்தை ஆணாக அல்லது பெண்ணாக பிறப்பதற்கு, புதுமைப்பெண்ணே! நீதான் காரணம் என்று எத்தனை கொடுமைகளுக்கு உள்ளாக்கபட்டாய்! உன் கண் எதிரேயே நீ பெற்ற உன்னைச்சார்ந்த இனம் உயிரோடு மண்ணுக்குள் புதைக்கப்பட்டதே! பெண்ணுரிமை பேசப்படும் இந்த நவீன கம்யூட்டர் யுகத்தில், பெண்ணுக்கு ஆண் சமமாக நடத்தப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த காலத்தில்தான் உன் நிலை உயர்ந்திருக்கிறதா? நீ பெற்ற பெண் சிசுவை உன் கரத்தாலேயே கொலை செய்யப்படும் அளவிற்கல்லவா நீ துன்புறுத்தப்படுகிறாய்! ஏன்? பெண்குழந்தை பிறப்பதற்கு நீதான் காரணம் என்று இந்த ஆண்வர்க்கம்கருதிக் கொண்டிருப்பதால் தான். உண்மையில் அவர்கள்தான் காரணம் என்பதை அடியோடு மறைத்தே விட்டார்களே! குழந்தை பிறக்காவிட்டாலும் உனது பெண்மையில் தான் முதலில் இந்த ஆண் வர்க்கத்திற்கு சந்தேகம் ஏற்படுகிறது, மருத்துவப் பரிசோதனைக்கு உன்னைத்தான் உட்படுத்துகிறது. இறுதியில் பிள்ளைப்பேறு இல்லாத மலடி என்று முத்திரை குத்தப்பட்டு காலமுழுவதும் தண்டனைக்கு உள்ளாவது நீதானே! இவைகள் அனைத்திற்கும் ஆண்மகன் காரணமாக இருந்தாலும் தன்னை இந்த பரிசோதனைக்கு உட்படுத்துவதில்லை, தன்னில் உள்ள குறைகள் வெளியேறிவிடாமல் இருப்பதில் மிக கவனமாக இருக்கிறது இந்த ஆணாதிக்கம் படைத்தவவர்கள்.
இந்நிலையில் பாலைத் தீர்மானிப்பதற்கு பெண்கள் காரணமல்ல, ஆண்கள்தான் காரணம் என்ற உண்மையை இந்த வசனம் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து, திணறிக் கொண்டிருந்த பெண்ணினத்தை, அவர்கள் அனுபவித்து வந்த வன்கொடுமைகளிலிருந்து விடுதலைப் பெறச் செய்து, சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கச் செய்துள்ளது.
குழந்தை பிறப்பதற்கு பெண் காரணம் அல்ல. அவள் ஒரு விளை நிலம். விதை விதைப்பவன் ஆண்மகன். அவன் எதை விதைக்கிறானோ அதனை அறுவடை செய்துக் கொள்வான். பெண் விதை விதைத்தால், பெண்ணையும், ஆண் விதை விதைத்தால் ஆணையும் அறுவடை செய்து கொள்வான், தன்னில் எந்த விதை விதைக்கப்படுகிறோ அதனை சரியாக பாதுகாப்பாக விளைவிப்பது மட்டும்தான் ஒரு பெண்ணின் பங்காக இருக்கமுடியும் என்ற உண்மையை இந்த இறைவசனம் தெளிவு படுத்துகிறது.
வினையை விதைத்தவன் வினையை அறுவடை செய்வான், எதை விதைக்கிறானோ அதைத்தான் அறுவடை செய்ய முடியும்.
புல்லை விதைத்த ஒரு விவசாயி நெல்லை அறுவடை செய்ய வேண்டும் என ஆசைப்படுவது எவ்வளவு பெரிய அபத்தம் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நெல்லை அறுவடை செய்ய முடியவில்லையே, வீணாப்போன இந்த நிலம் நெல்லை விளைவிக்க வில்லையே என்று அவன் புலம்பிக் கொண்டிருந்தால் அவனை பைத்தியக்காரன் என்று நாம் ஏசமாட்டமோ?
பெண் ஒரு விளைநிலம். நீ எதை விதைக்கிறாயோ அதனையே பெற்றுக் கொள்ள முடியும், அதற்கு மாற்றமாக எதையும் பெற்றுக்கொள்ளமுடியாது என்ற இந்த உண்மையை முதன் முதலில் உலகிற்கு சொன்னது இறைவேதம் குர்ஆன் அல்லவா? இதன் மூலம் எத்தனை கோடிப்பெண்களுக்கு உயிர் வாழும் உரிமை வழங்கப்பட்டுள்ளது என்று புதுமைப் பெண்ணே! சிந்தித்துப்பார்!.
மூட நம்பிக்கைக்கு முற்றுப் புள்ளி வைத்த வசனம்
சில வார்த்தைகளைக் கொண்ட இந்த சிறிய வசனம் பல்வேறு சமூகப்பிரச்சனைகளுக்கும், தீர்வு காண முடியாமல், நீதி மன்றங்களில் நிலுவையில் தேங்கிக் கிடக்கும் பல வழக்குகளுக்கும், மூட நம்பிக்கைகளுக்கும் சரியான தீர்வு சொல்லிக் கொண்டிருக்கிறது.
பெண்கள் பல ஆண்களை மணக்கலாமா?
ஒரு பெண் ஒரே நேரத்தில் பல ஆண்களை மணக்க முடியாது என்று இஸ்லாம் கூறிவருகிற சட்டத்திற்கு சரியான காரணத்தை இந்த வசனம் எடுத்துரைக்கிறது. உலக நடை முறையில் ஒரு விளை நிலத்தில் ஒரே நேரத்தில் ஒருவர் மட்டுமே பயிரிட முடியும். பலர் சேர்ந்து சாகுபடி செய்தால் எந்த பயிர் யாருக்குச் சொந்தம் என்பதைத் தீர்மானிக்க முடியாமல் பல பிரச்சனைகளும், சண்டை சச்ரவுகளும் உருவாகிவிடும். விதைவிதைத்த ஒவ்வொருவரும் உரிமை கேட்டுப் போராடுவார்கள். சமூகத்தில் வேண்டாத பிரச்சனைகள் தோன்றுவதற்கு அது காரணமாக ஆகிவிடும்.
அது போல விளைநிலமாக இருக்கும் ஒரு பெண் ஒரே நேரத்தில் ஒரு ஆண்மகனைத்தான் மணம் முடிக்க முடியும். அவ்வாறில்லாமல் ஒரே நேரத்தில் ஒரு பெண் பல ஆண்களை மணமுடித்துக் கொள்ள நேர்ந்தால், அந்த பல கணவன்களும் அவளுடன் ஒரே நேரத்தில் இல்வாழ்க்கையில் ஈடுபடுவார்கள். அப்போது அவளுக்கும் பிறக்கும் குழந்தை எந்தக் கணவனுக்குச் சொந்தம் என்பதை முடிவு செய்வதற்குள் அமர்களமான போர்களமே உருவாகிவிடும். நல்ல குழந்தையாக இருந்தால் ஒவ்வொருவரும் உரிமை கொண்டாடுவார்கள். குறையுள்ளதாக பிறந்திருந்தால் எல்லோரும் பின்வாங்கிவிடுவார்கள். அப்போது தந்தை விலாசம் இல்லாத குழந்தைகள் உருவாகி, சமுதாயத்தின் தலைவலிகளாக வளர்வார்கள். அது போன்ற பிரச்சனைகளுக்கான தீர்வினைத்தான் இந்த வசனம் கூறுகிறது.
இன்னொரு சட்டத்தையும் புரிந்து கொள்வதற்கு இந்த வசனம் வழிவகுக்கிறது. அதாவது வசதி வாய்ப்புகள் உள்ள ஒருவன் பல விளைநிலங்களுக்கு சொந்தக்காரனாகவும், அதில் பயிரிடுவதற்கும் உரிமையுள்ளவனாகவும் இருப்பதைப் போல ஒரு ஆண் பல பெண்களை திருமணம் முடித்துக் கொள்வதற்கும் வாய்ப்புகள் உண்டு என்பதையும் இந்த வசனத்தின் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது. பல திருமணம் செய்து கொள்வதற்கு அனுமதி என்பதற்கு எத்தனை பெண்களை வேண்டுமானாலும் மணமுடித்துக் கொள்ளலாம் என்று சிலர் தவறாக புரிந்து கொள்ளலாம் என்பதால் அதற்கான உச்ச வரம்பு நான்கிற்குள்தான் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடும் இஸ்லாத்தில் விதிக்கப்பட்டிருக்கிறது. பல திருமணம் செய்வது அனுமதிதானே தவிர, கட்டாயமில்லை என்பதையும் இந்த இடத்தில் சேர்த்து புரிந்து கொள்ள வேண்டும்.
விதவைகள் விறகு கட்டைகளா?
கணவனை இழந்த பெண் விதவைகள் வாழ தகுதியில்லாதவர்கள் எனக்கருதி, கணவனுடன் சேர்ந்து உடன் கட்டை ஏற்றப்பட்டு, உயிருடன் எரித்துக் கொள்ளும் கொடுமை கடவுளின் பெயரால், மதத்தின் பெயரால் நமது நாடு இந்தியாவில் அரங்கேற்றப்படுகிறது. விதவைகள் கணவனை எரிக்கும் விறகு கட்டைகளா என்ன? இந்த கொடுமையை எதிர்த்து குரல் கொடுத்த முதல் மதம் இஸ்லாம்தான். கணவனை இழந்த ஒரு பெண், உயிர் வாழும் உரிமை இழந்தவள் என ஓதுக்கப் பட வேண்டியவளல்ல. மறுமணம் முடித்து பயனுள்ள ஒரு விளை நிலமாக இன்னொருவன் விரும்பினால் அமைத்துக் கொள்ளலாம் என்பதை இந்த வசனம் நமக்கு போதிக்கிறது. ஒருவனுக்குச் சொந்தமான நிலம் அவன் தனக்குத் தேவையில்லை என விட்டுவிடும் போது, அந்த நிலத்தை வேறொருவன் வாங்கி பயன்படுத்திக் கொள்வது எவ்வாறு இயல்பானதோ, மேலும் அந்த நிலத்தை பயன்படுத்தாமல் விட்டுவிடுவது எவ்வளவு பெரிய அறியாமையோ அது போல கணவனால் வேண்டாமென கைவிடப்பட்ட, அல்லது கணவனை இழந்த ஒரு பெண்ணை விரும்பும் மற்றொருவன் மணந்து, அவளுக்கு வாழ்க்கை கொடுப்பது இயல்பானதும், சமூகச் சீரமைப்பிற்கு அவசியமானதுமாகும் மனைவி கணவனின் விளைநிலம் என்பதால் அந்த நிலத்தை பயன்படுத்தாமல் விட்டுவிடுவது சமூகக் குற்றமுமாகும் என்பதை இந்த வசனத்தின் மூலம் புரிந்து கொள்கிறோம்.
ஆலமரத்தை சுருட்டி விதையில் வைத்தவன் யார்?
மனைவிகள் உங்களின் விளைநிலம் எனச்சொல்லப்பட்டதில் நாம் புரிந்து கொண்ட அர்த்தங்கள்தான் இத்தனை என்றால், இன்னும் நாம் அறியாத அர்த்தங்கள்தான் எத்தனையோ? ஆலமரத்தைச் சுருட்டி விதையில் வைத்தவன் யாரோ அவன் இறக்கி வைத்த அருள் வாக்குதான் இந்த வசனம் என்பதை நம்மையும் அறியாமல் நமது நாவு உறக்கக் கூறிக் கொண்டிருப்பது நமது செவிகளில் விழுகிறது. இந்த குர்ஆன் முஹம்மது நபி (ஸல்) என்ற ஒரு மனிதரால் சொல்லப்பட்டிருக்க முடியாது, எல்லாம் அறிந்த இறைவனிடமிருந்து அருளப்பட்டது என்பதற்கு இந்த ஒரு சிறிய வசனமே போதுமான ஆதாரமாகும். இதனைச் சிந்தித்துப் பார்ப்பவர்களுக்கு அத்தாட்சிகள் பல உண்டு.
அறிவியல் கண்டுபிடித்தது என்ன?
மேற் கூறப்பட்ட வசனத்தின் மூலம் குழந்தையின் பாலைத்தீர்மானிப்பதில் பெண்ணுக்கு எவ்வித பங்குமில்லை என்பதை விரிவாகப்பார்த்தோம். ஆண்கள்தான் முழுக்க முழுக்க காரணமாக ஆக்கப்பட்டுள்ளார்கள் என்பதை இன்றைய அறிவியல் ஆய்வு எவ்வாறு தீர்மானித்துள்ளது என்பதை புரிந்து கொண்டு, வாழ்க்கை நெறிகளைப் போதிக்கும் இஸ்லாமிய வேத நூலான (உலகப் பொதுமறை அல்-குர்ஆன்) நாம் (பொருள் அறிந்து) படித்துவிட்டு, பிறருக்கும் படிக்க ஆர்வம் ஊட்டுவோமாக
அல்லா உதவி செய்வானாக
வஸ்ஸலாம்
No comments:
Post a Comment