Thursday 29 December 2011

கிறிஸ்துவர்களின் புத்தாண்டும்: முஸ்லிம்கள் பெறவேண்டிய எச்சரிக்கை செய்தியும்


 


கிறிஸ்துவ புத்தாண்டு ஆண்டுதோறும் ஜனவரி 1ம் தேதி கொண்டாடப்படுவது நாம் அறிந்த ஒன்றே. (இயேசு) ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிறப்பை அடிப்படையாக கொண்டு தான் வருட கணக்கீடு (காலண்டர்) செய்யப்படுவதாக கிறிஸ்துவர்கள் கூறி கொள்கிறார்கள். அதாவது தற்போதய புத்தாண்டு 2012 என்றால் இயேசு அவர்கள் பிறந்து 2012 ஆண்டுகள் ஆகின்றன என்று பொருள். அப்படியென்றால் அவர்கள் நம்பிக்கை படி பார்த்தால் இயேசு (டிசம்பர் 25ம் தேதி) பிறந்து ஆறு நாட்களுக்குப் பின் அவர்கள் புத்தாண்டு ஏன் கொண்டாட வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். அதற்கு யாரிடமும் பதில் இல்லை, விட்டு தள்ளுங்கள்.

புத்தாண்டு கொண்டாட்டம் முழுக்க முழுக்க கிறிஸ்துவ மூட நம்பிக்கை அடிப்படையிலானது என்பது மறுக்க முடியாத செய்தி. எனவே ஒரே இறைவனுக்கு கட்டுப்பட்டு வாழும் மக்களான முஸ்லிம்களுக்கு அதில் கொண்டாட்டத்துக்கு இடமேதுமில்லை. இறைத்தூதர் (இயேசு) ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை நாம் நேசிக்கிறோம். ஆனால் அவர்களின் (போலி) பிறந்த நாள் பெயரிலான புத்தாண்டு கொண்டாட்டத்தை நாங்கள் முற்றிலும் மறுக்கிறோம்.

புத்தாண்டு கொண்டாடுவோர்; அதை கொண்டாடும் விதத்தை பார்த்தீர்களா?! மது குடித்து கும்மாளம் அடிப்பது, வாழ்த்து என்ற பெயரில் வம்பிழுப்பது, ( சாராயம் குடித்த வாய், பிறருக்கு வாழ்த்து சொல்லும் விசித்திரத்தைப் பாருங்கள்!)  பெண்களும் ஆண்களுமாக சேர்ந்து கொண்டு நடனம், சிற்றின்பம் அதை தொடர்ந்து விபச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுவது. இவ்வளவையும் செய்து கொண்டு இறைவனின் தூதர் (இயேசு) ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நினைவாக இதை செய்வதாக பொய்யுரைக்கிறார்கள்.

இறுதி இறைவேதம் குர்ஆனின் திருவசனம் இந்த பொய்யர்களின் முகமூடியை பின்வரும் வார்த்தைகளில் கிழித்தெறிகிறது.

''அவர்கள் ஒரு மானக்கேடான காரியத்தைச் செய்யும் போது, ''எங்கள் மூதாதையர்களை இச்செயலின் மீதே கண்டோம். இன்னும் இறைவன் எங்களை இவ்வாறே ஏவினான்' என்று சொல்கிறார்கள். ''(அப்படியல்ல!) நிச்சயமாக இறைவன் மானக்கேடான செயல்களைச் செய்யக் கட்டளையிடுவதில்லை. - நீங்கள் அறியாத ஒன்றை இறைவன் மீது பொய்யாக இட்டுக்கட்டி கூறுகிறீர்களா?' என்று (இறுதி தூதரே!) நீர் கேட்பீராக.'
(இறுதிவேதம் குர்ஆன் 7:28)


புத்தாண்டு கொண்டாட்டங்கள் மானக்கேடான, அருவெறுப்பான தீமைகளின் மொத்த வடிவம் என்பதில் சந்தேகமில்லை. இத்தகைய கேடு கெட்ட காரியத்தில் இறைத்தூதர் (இயேசு) ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பெயரை பயன்படுத்துவது கண்டனத்துக்கு உரியதாகும்.

அறியாமை என்ற போர்வையை போர்த்தி கொண்டு சில முஸ்லிம் பெயர்தாங்கிகள் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்கிறார்கள். அவர்களின் மடமைக்கு பரிசுத்த இஸ்லாம் மார்க்கம் பொறுப்பல்ல.

 இஸ்லாம் மார்க்கத்தில் சில விஷயங்களில் இஸ்லாமிய கட்டளைகளை பின்பற்றுவது, சில காரியங்களில் பிற மதத்தாரை பின்பற்றுவது என்ற அவர்களின் இரட்டை நிலைப்பாட்டுக்கு இஸ்லாம் மார்க்கத்தில் எந்த அனுமதியும் இல்லை.

ஏக இறைவனின் இறுதி தூதர் நபீ(ஸல்) அவர்கள் கூறினார்கள்

 ''எவர் (இறைநம்பிக்கை கொண்ட) நம்மை தவிர பிற மக்களின் வழிமுறையை ஒத்து நடக்கிறாரோ, அவர் நம்மை சேர்ந்தவர் அல்லர். நீங்கள் யூதர்கள் மற்றும் கிறிஸ்துவர்களை போன்று நடந்து கொள்ளாதீர்கள்...!'
( ஆதார பதிவு நூல் - திர்மிதீ :2619)

Friday 23 December 2011

கிறிஸ்துவர்களின் பண்டிகை: முஸ்லிம்கள் பெறவேண்டிய எச்சரிக்கை செய்தி


கிறிஸ்துவர்களின் கிறிஸ்மஸ் பண்டிகை உண்மையின் மீது நிறுவப்பட்டதல்ல. (இயேசு) ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மீதுள்ள அன்பின் அடிப்படையில் அவருடைய பிறந்த நாளை கிறிஸ்மஸ் தினமாக கொண்டாடுவதாக கிறிஸ்துவர்கள் நியாயம் பேசுகிறார்கள்.

சற்று ஒரு முரண்பாட்டை பாருங்கள். கிறிஸ்துவர்கள் (இயேசு) ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை இறைவனாக கருதி கொள்கிறார்கள். அதே நேரத்தில் 'இறைவனுக்கு' பிறந்த நாளும் அனுசரிக்கிறார்கள். மனிதர்களை படைத்த இறைவனுக்கு பிறந்த நாளா?! எத்தகைய விசித்திரமான முரண்பாடு!

உறுதியான, உண்மை என்னவென்றால் (இயேசு) ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறைவனும் இல்லை. இறைவன், மனிதனாக அவதரிக்கவும் இல்லை. அவர் ஓர் இறைத்தூதர் மட்டுமே. இந்த கிறிஸ்துவர்கள,; உண்மையில் சிலை வழிபாடு மக்களின் அவதார கொள்கையை காப்பியடித்து வைத்திருக்கிறார்கள். 

இறுதி வேதம் குர்ஆன் , கிறிஸ்துவர்களின் நிலையை பின்வருமாறு கூறுகிறது.
''இவர்களுக்கு முன்னிருந்த நிராகரிப்போரின் கூற்றுக்கு ஒப்பானதையே இ(ந்த கிறிஸ்து)வர்களும் கூறுகிறார்கள்.'
(இறுதி வேதம் குர்ஆன் 5:30)

கிறிஸ்துவர்கள் 'நேசத்தின்' அடிப்படையில் (இயேசு) ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு வேத ஆதாரமற்ற பிறந்த நாள் கொண்டாடும் முறையே, கிறிஸ்துவர்கள் யார் என்பதை உலகுக்கு பறைசாற்றுகிறது.

உலகம் முழுவதும் கிறிஸ்மஸ் தினம் பெரும் உற்சாகத்தோடு அவர்களின் வேத நூலிலும் தடை செய்யப்பட்ட பொருட்களான மதுபானங்களுடனும் (ஏசாயா 5:11) பன்றி இறைச்சியுடனும் (லேவிய ராகமம் 11:7,8) கொண்டாடப்படுகிறது. இது மட்டுமின்றி ஒழுக்க கேட்டை ஊக்குவிக்கும் வகையில் ஆபாச ஆடல், பாடல்கள் என்று கிறிஸ்மஸ் களைகட்டுகிறது. (விபச்சார தடை - யாத்திராகமம் 21:14). இதுதான் (இயேசு) ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடும் முறையா?

முஸ்லிம்களாகிய நாம், கிறிஸ்மஸ் எனும் (இயேசு) ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பெயரிலான போலி பிறந்த தினத்தன்று மேற்படி செய்தியை உலகறிய செய்வதுடன் சில எச்சரிக்கை விஷயங்களையும் மேற்கொண்டாக வேண்டும்.

.பொய்யை அடைப்படையாக கொண்ட, இந்த கிறிஸ்மஸ் சார்ந்த எந்த நிகழ்ச்சியிலும் போலி மத நல்லிணக்கம் என்ற அடிப்படையிலும் கூட நாம் கலந்து கொள்ள கூடாது.

.அன்றைய நாளில் கிறிஸ்துவர்களின் உணவு பண்டங்கள் விஷயத்தில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

* கிறிஸ்மஸ் கேக் வகைகள் 'உயர் ரக' மது கலந்து செய்யப்படுகின்றன என்று அவர்களே கூறுகிறார்கள். கேக் போன்றே பிற உணவு வகைகளும் சந்தேகத்துக்கு இடமானவையே. கிறிஸ்துவர்களால் உருவாக்கப்படும் அனைத்து வகை உணவுகளிலும் பன்றி கொழுப்பு 'சுவைக்காக' சேர்க்கப்படுவதாக அவர்களே வாக்குமூலம் அளிக்கிறார்கள். ஆசிய நாடுகளில் அவ்வாறில்லை என்றெல்லாம் கருதி கொள்ளாதீர்கள். தென் கொரியாவிலுள்ள கிறிஸ்துவர்களின் உணவு வகைகளில் ஏறத்தாழ அனைத்திலும் பன்றி கொழுப்பு சேர்க்கப்படுகிறது. இந்தியா போன்ற நாடுகளில் அவ்வாறில்லை என்று சொல்லி விட முடியாது.

* கிறிஸ்மஸ் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் நீங்களோ, உங்களுடைய குழந்தைகளோ பங்கேற்காதீர்கள். அதை வேடிக்கையும் பார்க்காதீர்கள். ஏனெனில் கிறிஸ்மஸ் எனும் அவர்களின் குற்றசெயலுக்காக இறைதண்டனை அவர்கள் மீது இறங்கும் போது நீங்களும் அதில் சிக்கி கொள்வீர்கள். 

கிறிஸ்துவர்கள் நேர்வழி பெற்று இஸ்லாம் மார்க்கத்தை ஏற்க அல்லாவிடம் துஆ செய்யுங்கள்.

Friday 16 December 2011

கிறிஸ்துவர்களின் பண்டிகை: முஸ்லிம்களாகிய நாம் செய்ய வேண்டியது என்ன?



கிறிஸ்துவர்கள் வருடந்தோறும் டிசம்பர் மாத இறுதியில் கிறிஸ்மஸ் எனும் பண்டிகையை கொண்டாடுகின்றனர். அந்த காலகட்டத்தில் அந்த பண்டிகையை முன்வைத்து பெரும் ஒரு பிரச்சாரத்தையும் மேற்கொள்கின்றனர்;. கிறிஸ்மஸ் தாத்தா என்ற பெயரில் சில மனிதர்களுக்கு ஒட்டு தலைமுடி, தாடி வைத்து கேக் உள்ளிட்ட இனிப்பு பண்டங்கள் பறிமாறி தம்முடைய பிரச்சாரம், பிறரை எளிதில் எட்டுமாறு செய்கின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகை இறைத்தூதர் (இயேசு) ஈஸா  அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு கொண்டாடப்படுவதாக கிறிஸ்துவர்கள் கூறி கொள்கிறார்கள்.

இஸ்லாம் மார்க்கத்தைப்பற்றி ஓரளவே தெரிந்த முஸ்லிம்களில் சிலர், விஷயத்தின் விபரீதம் புரியாமல் கிறிஸ்மஸ் வாழ்த்து கூறுவது, கிறிஸ்துமஸ் தாத்தா எனும் வேடமிட்டு வலம் வரும் மனிதனை பார்த்து, சிரித்து மகிழ்வது என்று சில காரியங்களை செய்து வருகிறார்கள்.

இப்போது முஸ்லிம்களாகிய நாம் செய்யவேண்டியது தான் என்ன என்பதை பார்ப்போம்.

இறைத்தூதர் (இயேசு) ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் விஷயத்தில் உரிமை கோர கிறிஸ்துவர்களுக்கு எந்த தகுதியும் கிடையாது.

* (இயேசு) ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஒரே இறைவனை மட்டுமே வணங்கினார். கிறிஸ்துவர்கள் மூன்று கடவுள்களை வணங்குகிறார்கள்.

* (இயேசு) ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தன்னை தானே வணங்கி கொள்ளவில்லை. தன்னுடைய தாயாராகிய (மேரி)மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை ஒரு போதும் வணங்கவில்லை. 

* (இயேசு) ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பரலோகத்தில் உள்ள ஒரே இறைவனை மட்டுமே வணங்கினார். அந்த ஒரே இறைவனையே வணங்குமாறு பிறருக்கு உத்தரவிட்டார்.

'மஸீஹ் (இயேசு)கூறினார்: 'இஸ்ராயீலின் சந்ததியினரே! என்னுடைய இறைவனும் , உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்'.      
(உலக பொது வேதம் அல்-குர்ஆன் 5:72) 

கிறிஸ்துவர்கள் தம்முடைய சுய கற்பனை படி (இயேசு) ஈஸா அலைஹிஸ்ஸலாம், (மேரி) மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களையும் வணங்குகிறார்கள்.


தொன்று தொட்ட இறைத்தூதர்கள் (நோவா) நூஹ் அலைஹிஸ்ஸலாம், (ஆப்ரஹாம்) இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம், (மோஸே) மூஸா  அலைஹிஸ்ஸலாம் - அவர்கள் அனைவரும் ஒரே இறைவனையே வணங்கினார்கள். எனவே கிறிஸ்துவர்களின் முக்கடவுள் (திரித்துவ )வழிபாடு மாபெரும் இறைதுரோக செயலாகும். அதிலும் ஒரே இறைவன் என்பதை போதிக்க வந்த (இயேசு) ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களையே பின்னர் வணங்க ஆரம்பித்து விட்டார்கள். அந்த இறைதுரோக வழிபாட்டை பிரபலப்படுத்த் கிறிஸ்துவர்கள் கையாளும் வேத ஆதாரமற்ற உத்தி தான் இந்த கிறிஸ்மஸ் வழிபாடு.

முஸ்லிம்களாகிய நாம், இறுதி தூதர் நபீ (ஸல்), அவர்களை நேசிப்பது போலவே (இயேசு)  ஈஸா அலைஹிஸ்ஸலாம அவர்களையும் நேசிக்கிறோம். ஏனென்றால் (இயேசு) ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள்,  ஒரே இறைவன் என்ற கொள்கையை தான் போதித்தார்கள், கடைப்பிடித்தார்கள். இறுதித்தூதர் நபீ (ஸல்); அவர்களும் அந்த ஒரே இறைவன் என்ற கொள்கையை தான் போதித்தார்கள், கடைப்பிடித்தார்கள். முஸ்லிம்களாகிய நாமும் ஒரே இறைவன் என்ற கொள்கையை தான் கடைப்பிடித்து வாழ்கிறோம். இப்போது சொல்லுங்கள்... (இயேசு) ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வழிமுறையை பின்பற்றுவோர் முஸ்லிம்களா? பிதா, மகன், பரிசுத்த ஆவி என்று மூன்று கடவுளர்கள் கொள்கை கொண்ட வழிகேடர்களான கிறிஸ்துவர்களா?


எனவே, கிறிஸ்மஸ் கொண்டாட்டம் (இயேசு) ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் நேசத்திற்கான வழியல்ல என பிரகடனப்படுத்துவது முஸ்லிம்களாகிய நம்முடைய கடமையாகும்.

உறவுகளைப் பேணுவோம்


இஸ்லாம் வலியுறுத்தும் சமூக உறவுடன் சம்பந்தப்பட்ட அமல்களில் குடும்ப உறவைப் பேணுவது மிக முக்கியமானதாகும். சமூக உருவாக்கம் எனும் இஸ்லாமிய இலட்சியத்தை அடைய குடும்ப உறவு சீர்படுதல் இன்றியமையாததாகும். இவ் வகையில் நல்ல சமூக மாற்றத்தை ஏற்படுத்த நல்ல குடும்ப உறவுகளை ஏற்படுத்த வேண்டும்.

 ஆனால் மார்க்க ஈடுபாடு உள்ள பலரிடம் கூட இரத்த உறவை விட நட்பையும், இடையில் ஒட்டிக்கொண்ட உறவையும் முக்கியத்துப் படுத்தும் நிலை இன்று தோன்றியுள்ளது. நட்புக்காகவும், இன்னும் பல தொடர்புகளுக்காகவும் நேரத்தையும், பணத்தையும் செலவிடத் தயாராகவுள்ள பலர,; குடும்ப உறவுக்காக சில நிமிடங்களைக் கூட செலவிடத் தயாராக இல்லை.

நட்பு நாமாகத் தேர்வு செய்பவையாகும். இரத்த உறவு அல்லாஹ் தேர்வு செய்தவையாகும். இவர்கள் உன் அப்பா, அம்மா இவர்கள் உன் சித்தப்பா, பெரியப்பா, மாமா, அண்ணன், தம்பி என்பது அல்லாஹ் தேர்வு செய்தவையாகும். இந்த உறவுக்கு முக்கியத்துவம் கொடுப்பது தான் மார்க்கக் கடமையாகும்.

நபீ(ஸல்) அவர்கள் கூறினார்கள், ' உறவு (ரஹம்) என்பது, அளவிலா அருளாளன் (ரஹ்மான்) இடமிருந்து வந்த (அருட்கொடை) கிளையாகும். அல்லாஹ் இரத்த உறவைப் பார்த்து 'உன்னோடு ஒட்டி வாழ்பவனுடன் நானும் உறவு பாராட்டுவேன். உன்னை முறித்துக் கொள்பவனை நானும் முறித்துக்கொள்வேன்' என்று கூறுகிறான்.   
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) ஆதாரம் : புஹாரீ : 5988

இந்த ஹதீஸின் மூலம் குடும்ப உறவைப் பேணுவது எனபது அல்லாஹ்வுடனான உறவைப் பேணுவதற்குச் சமமானது என்பதை நாம் அறியலாம்.

ஒரு மனிதர், நபீ(ஸல்)அவர்களிடம் வந்து, '' அல்லாஹ்வின் தூதரே! என்னைச் சுவனத்தில் நுழைவித்து நரகத்தை விட்டும் தூரமாக்கக் கூடிய ஒர் அமலை எனக்குச் சொல்லித் தாருங்கள் என்றார். அதற்கு நபீ(ஸல்)அவர்கள், நீ அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும். அவனுக்கு எதையும் இணைவைத்து விடாதே! தொழுகையை நிலை நிறுத்து, ஸகாத்தும் கொடுத்து வா, குடும்ப உறவைப் பேணிக்கொள்' என்றார்கள். 
(அறிவிப்பவர் : ஹாலித் இப்னு ஸைத் அல் அன்ஸாரி(ரலி) ஆதாரம் : புஹாரீ, முஸ்லிம

நபீ(ஸல்) அவர்கள் கூறினார்கள் 'உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழையமாட்டான்'. 
அறிவிப்பவர்: ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி) ஆதாரம் : புஹாரீ: 5984

நபீ(ஸல்) அவர்கள் கூறினார்கள் 'தம் வாழ்வாதாரம் (ரிஸ்க்) விசாலமாக்கப்படுவதும,; வாழ்நாள் நீட்டிக்கப்படுவதும், யாருக்கு மகிழ்ச்சி அளிக்குமோ அவர் தமதுஉறவைப் பேணி வாழட்டும். 
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி). ஆதாரம் : புஹாரீ :5985

'யார் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் ஈமான் கொள்கின்றாரோ அவர் குடும்ப உறவைச் பேணி நடக்கட்டும் ' என நபீ(ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) ஆதாரம் : புஹாரீ, முஸ்லிம்

அல்லாஹ்வின் மீதும் மறுமையின் மீதும் ஒரு முஸ்லிம் கொண்டுள்ள ஈமானின் வெளிப்பாடுகளில் ஒன்றாகக் குடும்ப உறவைப் பேணி நடத்தலும் உள்ளது. 

குடும்ப உறவைத் துண்டித்தவன் சுவனம் நுழைய மாட்டான் என்ற அண்ணலாரின் எச்சரிக்கைக்கு பயந்து குடும்ப உறவைப் பேணி நடந்து அல்லாஹ்வின் அருளையும், அன்பையும் பெறுவோமாக! 

Friday 2 December 2011

பெற்றோரைப் பேணுவோம்


 

ஒரு மனிதர் நபீ(ஸல்)அவர்களிடம் வந்து 'அல்லாஹ்வின் தூதரே! நான் நல்ல விதமாக நடந்து கொள்ள அனைவரை விடவும் உரிமை பெற்றவர் யார்? எனக்கேட்டார். அதற்கு நபி அவர்கள் உம்முடைய தாய் என்று கூறினார்கள். அதற்கடுத்து யார்? என அம்மனிதர் கேட்டபோது இறைதூதர் அவர்கள் இரண்டாவது முறையும் 'உம்முடைய தாய்' என்று கூறினார்கள். அம்மனிதர் மூன்றாவது முறையாக அதற்கடுத்து யார்? என கேட்ட போது இறைதூதர் அவர்கள் 'உம்முடைய தாய்' என்றே பதிலளித்தார்கள். நான்காவது முறை அம்மனிதர் அதற்கடுத்து யார்? எனக் கேட்ட போது 'உம்முடைய தந்தை' என்று பதிலளித்தார்கள்
அறிவிப்பாளர் : அபூஹீரைரா (ரலி) நூற்கள் : புஹாரீ, முஸ்லிம்

'நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்;. அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்;. இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன ஆகவே 'நீ எனக்கும் உன் பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.' 
(உலக பொது வேதம் அல்-குர்ஆன் 31:14)

பெற்றோரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால் அவர்களை 'உஃப்' (சீ!) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம்;;அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் ; இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக! 
(உலக பொது வேதம் அல்-குர்ஆன் 17:23)

இன்னும் இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக. மேலும், 'என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!' என்று கூறிப் பிரார்த்திப்பீராக! 
(உலக பொது வேதம் அல்-குர்ஆன் 17:24)

பெற்றோரின் திருப்தி

பெற்றோரில் ஒருவர் கோபமடைந்தாலும் அவர்கள் திருப்தி அடையும்வரை அல்லாஹ் திருப்தியடைய மாட்டான் என்று நபீ(ஸல்) கூறிய போது அந்தப் பெற்றோர் அநீதம் செய்தாலுமா? என்று கேட்கப்பட்டது.  அதற்கு , ஆம்! அவர்கள் அநீதம் செய்தாலும்தான் என்று நபீ(ஸல்)பதிலளித்தார்கள். 
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), புஹாரீ

பெற்றோரை கொடுமைப்படுத்துவோர் இவ்வுலகிலேயே தண்டனையை அடைவர்!

பெற்றோரைக் கொடுமைபடுத்தியதற்காகத் தரப்படும் தண்டனை, மரணத்திற்கு முன் இவ்வுலகிலேயே துரிதமாகத் தரப்பட்டுவிடும் என நபீ(ஸல்)அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி) நூல்: பைஹகீ


'அவன் இழிவடையட்டும்! அவன் இழிவடையட்டும்! அவன் இழிவடையட்டும்! என்று நபீ (ஸல); கூறியபோது மக்கள் அல்லாஹ்வின் தூதரே! (இழிவடையட்டும் என்றீர்களே) யார்'? என்று வினவினார்கள், 'முதுமை பருவத்தில் தன் தாய் தந்தையரில் ஒருவரையோ அல்லது இருவரையுமோ அடைந்திருந்தும் (அவர்களுக்குப் பணிவிடை புரிந்து) சுவனம் புகாதவன்' என்று பதிலளித்தார்கள். 
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) முஸ்லிம்.

   அல்லாஹ்வின் தூதர் நபீ(ஸல்) அவர்கள் நமக்கு கூறிச்சென்ற இந்த அறிவுரைகளை மனதில் நிறுத்தி அல்லாஹ்வின் பொருத்தத்தை பெறுவோமாக!

பெரும்பாவங்கள்


பாவம் என்றால் என்ன என்பதை முதலில் நாம் தெரிந்து கொள்ளவேண்டும்.

நபீ(ஸல்)அவர்களிடம் நன்மையைப் பற்றியும் தீமையைப் பற்றியும் வினவினேன், அதற்கு அவர்கள் 'நல்லொழுக்கமே நன்மை எனப்படும். பாவம் என்பது அதைச்செய்யும் போது உன் உள்மனம் உன்னை எச்சரிக்கும், அதை பிறர் அறிவதை நீ வெறுப்பாய் ' என விளக்கமளித்தார்கள்.
(அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன், நூல்: முஸ்லிம்)

ஒருமுறை நபீ(ஸல்);அவர்கள் தம் தோழர்களிடம் 'அழிவைத் தரும் ஏழு பாவங்களை' தவிர்த்துக் கொள்ளுமாறு எச்சரித்தார்கள். அவை யாவை? என நபீத்தோழர்கள் கேட்டபோது, பின்வருமாறு விளக்கமளித்தார்கள்: 

1. அல்லாஹ்வுக்கு இணை வைப்பது
2. சூனியம் செய்வது
3. இறைவன் தடுத்த ஓர் உயிரை அநியாயமாக கொலை செய்வது 
4. அநாதைகளின் சொத்துக்களை விழுங்குவது
5. வட்டிப்பொருளை உண்ணுவது 
6. போரில் புற முதுகு காட்டி ஓடுவது
7. விசுவாசியான ஒழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறுவது.
(அறிவிப்பவர். அபூஹுரைரா(ரலி) நூல்கள் புகாரீ, முஸ்லிம்)

மேலே கூறப்பட்ட நபீமொழியில் பெரும் பாவங்கள் அனைத்தும் கூறப்படவில்லை. அழிவிற்கு கொண்டு செல்லக்கூடிய பாவங்களில் சில மட்டுமே கூறப்பட்டுள்ளது. கொலை, களவு, விபச்சாரம், தடுக்கப் பட்டவைகளை உண்ணுதல்,பருகுதல் , பொய், கோள் சொல்லுதல் போன்ற குற்றங்களும் பெரும் பாவங்களைச் சார்ந்தவையாகும். 

பெரும் பாவம் என்பது அல்லாஹ்வினாலும், நபீ(ஸல்) அவர்களாலும் விலக்கப்பட்டவைகளைக் குறிக்கும். இவற்றைச் செய்பவன்; இறை கோபத்திற்கும் தண்டனைக்கும் ஆளாக நேரிடும்.

பெரும் பாவங்களைத் தவிர்த்து வாழ்ந்தால் ஏனைய சிறு பாவங்களை மன்னிப்பதாக அல்லாஹ் கூறுகிறான்:-

உங்களுக்கு விலக்கப்பட்ட பெரும் பாவங்களிலிருந்து நீங்கள் விலகிக் கொண்டால், உங்களுடைய (சிறு)பாவங்களை உங்களை விட்டு நாம் போக்குவோம், உங்களை நாம், மதிப்பு மிக்க இடத்தில் புகுத்துவோம்.
  (உலக பொது வேதம் அல்-குர்ஆன் 4: 31)

(அல்லாஹ்வை நம்பிய) அவர்கள் பெரும் பாவங்களையும், மானக்கேடானவைகளையும் விட்டு விலகி இருப்பதுடன் தங்களுக்கு கோபமூட்டப்பட்ட சந்தர்ப்பத்திலும் (கோபமூட்டியவரை) மன்னித்து விடுவார்கள். 
(உலக பொது வேதம் அல்-குர்ஆன் 42: 37)

(இறை நம்பிக்கை கொண்ட) அவர்கள் சிறு தவறுகளைத் தவிர ஏனைய பெரும்பாவங்களிலிருந்தும் மானக்கேடனவற்றிலிருந்தும் விலகி இருப்பார்கள். நிச்சயமாக உமது இரட்சகன் மன்னிப்பதில் மிக்க தாராளமானவன்.
(உலக பொது வேதம் அல்-குர்ஆன் 53: 32)

' ஐந்து நேரத் தொழுகைகளும் , ஒவ்வொரு ஜும்ஆவும் , ஒவ்வொரு ரமளானும் , ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு இடைப்பட்ட காலங்களில் செய்யப் பட கூடிய பாவங்களுக்கு பரிகாரமாகும். (ஆனால்) இடைப்பட்ட காலங்களில் அவர் பெரும்பாவங்களில் ஈடுபடாத வரை என நபீ(ஸல்) கூறினார்கள்.            
 (ஆதாரம்: முஸ்லிம் , திர்மிதீ, அஹ்மத்)

Sunday 20 November 2011

கோபத்தை கட்டுப்படுத்துபவனே சிறந்த வீரன்!


'(பயபக்தியுடையவர்கள்) கோபத்தை அடக்கிக்கொள்வார்கள். மனிதர்கள் செய்யும் தவறுகளை மன்னிப்பார்கள். '
(உலகப் பொதுமறை அல்-குர்ஆன் 3:134)

நபீ(ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து 'எனக்கு உபதேசம் செய்யுங்கள்' என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'கோபம் கொள்ளாதே!' எனக் கூறினார்கள். மீண்டும் அந்த மனிதர் 'உபதேசம் செய்யுங்கள்' எனக்கூறவே, மீண்டும் 'கோபம் கொள்ளாதே' என நபீ (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
         (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) - நூல் : புகாரீ)

'கோபத்தின் போது தன்னை கட்டுப்படுத்திக் கொள்பவனே சிறந்த வீரன் ஆவான்' என நபீ ( ஸல் ) அவர்கள் அருளினார்கள். 
(அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) - நூல்கள் : புகாரீ,முஸ்லிம்)

பொதுவாகவே ஷைத்தான், மனிதனை ஆக்கிரமிப்பதற்கு முதல்படியே அவனது கோபத்தைத் தூண்டி விடுவதுதான். தேவையில்லாத, சாதாரண  விஷயத்திற்கெல்லாம் ஒருவர் கோபப்பட்டால் அவரிடம் ஷைத்தான் குடி கொண்டிருக்கிறான் என்பதை தெளிவாக தெரிந்து கொள்ளலாம். எதிரில் யார் இருக்கிறார் என்று கூடத் தெரியாத அளவுக்கு பேசித் தீர்த்து விடுவார். சிலவேளை பேச்சுக்களையும் மீறி சட்டை கையை முழங்கைக்கு மேல் உயர்த்திக் கொண்டு பாய்வதற்கும் தயாராகி விடுவார். பின்விளைவுகளைப் பற்றிக்கூட யோசிப்பதில்லை. கோபம் கொண்ட அந்த வினாடியில் அவரது சிந்தனைத்திறன் செயலிழந்து விடுகிறது.

மேலும் ஒருவன் தன்னை வீரன் என்று காட்டுவதற்காகவும் கோபத்தைக் காட்டுவான். 'அவர் பெரிய கோபக்காரர். அவருக்கு கோபம் வந்தால் அவரை யாராலும் கட்டுப்படுத்தவே முடியாது' என்றெல்லாம் கோபம் கொள்பவர்களை சிலாகித்து ஒரு சிலர் கூறி அவரை வாழ்நாள் முழுவதும் கோபக்காரராக்கி விடுவார்கள். அதற்கு தகுந்தாற்போல் அவரும் தன்னை ஆக்கிக்கொள்வார். தேவையில்லாததற்கெல்லாம் கோபப்படுவார். இவருக்கு சமுதாயம் 'வீரன்', 'தைரியசாலி' என்றெல்லாம் பட்டம் சூட்டி விடும்!

கோபம் மனிதனுக்கு தேவை தான்! அதை சூழ்நிலைக்கேற்ப பயன்படுத்த வேண்டும். தீமைக்கு எதிராக சினம் கொள்வது இறை நம்பிக்கையாளரின்  அடையாளமாகும். அதே நேரத்தில் கட்டுப்படுத்த வேண்டிய நேரத்தில் கட்டுப்படுத்தவும் பழகிக் கொள்ள வேண்டும். நமது கோபம் நம்மையே மிகைத்துவிட அனுமதிக்கக் கூடாது!

நபீ (ஸல்) அவர்கள் அருகில் இரண்டு பேர் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டார்கள். அப்போது நாங்கள் நபி (ஸல்) அவர்கள் அருகில் அமர்ந்து கொண்டிருந்தோம். அவர்களில் ஒருவரின் முகம் சிவந்து விட்டிருக்க, கோபத்துடன் தம் தோழரைத் திட்டிக் கொண்டிருந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ''எனக்கு ஒரு (பிரார்த்தனை) வார்த்தை தெரியும். அதை இவர் சொல்வராயின் இவருக்கு ஏற்பட்டுள்ள கோபம்போய்விடும். 
'அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்' (சபிக்கப்பட்ட ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்) என்பதே அச்சொல்லாகும்' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: சுலைமான் பின் ஸுரத் (ரலி). நூல்: புகாரீ:6115

Friday 18 November 2011

உறவுகளைப் பேணுவோம்





இஸ்லாம் வலியுறுத்தும் சமூக உறவுடன் சம்பந்தப்பட்ட அமல்களில் குடும்ப உறவைப் பேணுவது மிக முக்கியமானதாகும். சமூக உருவாக்கம் எனும் இஸ்லாமிய இலட்சியத்தை அடைய குடும்ப உறவு சீர்படுதல் இன்றியமையாததாகும். இவ் வகையில் நல்ல சமூக மாற்றத்தை ஏற்படுத்த நல்ல குடும்ப உறவுகளை ஏற்படுத்த வேண்டும்.

 ஆனால் மார்க்க ஈடுபாடு உள்ள பலரிடம் கூட இரத்த உறவை விட நட்பையும், இடையில் ஒட்டிக்கொண்ட உறவையும் முக்கியத்துப் படுத்தும் நிலை இன்று தோன்றியுள்ளது. நட்புக்காகவும், இன்னும் பல தொடர்புகளுக்காகவும் நேரத்தையும், பணத்தையும் செலவிடத் தயாராகவுள்ள பலர; குடும்ப உறவுக்காக சில நிமிடங்களைக் கூட செலவிடத் தயாராக இல்லை.

நட்பு நாமாகத் தேர்வு செய்பவையாகும். இரத்த உறவு அல்லாஹ் தேர்வு செய்தவையாகும். இவர்கள் உன் அப்பா, அம்மா இவர்கள் உன் சித்தப்பா, பெரியப்பா, மாமா, அண்ணன், தம்பி என்பது அல்லாஹ் தேர்வு செய்தவையாகும். இந்த உறவுக்கு முக்கியத்துவம் கொடுப்பது தான் மார்க்கக் கடமையாகும்.

நபீ(ஸல்) அவர்கள் கூறினார்கள், ' உறவு (ரஹம்) என்பது, அளவிலா அருளாளன் (ரஹ்மான்) இடமிருந்து வந்த (அருட்கொடை) கிளையாகும். அல்லாஹ் இரத்த உறவைப் பார்த்து உன்னோடு ஒட்டி வாழ்பவனுடன் நானும் உறவு பாராட்டுவேன். உன்னை முறித்துக் கொள்பவனை நானும் முறித்துக்கொள்வேன்' என்று கூறுகிறான்.   
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) ஆதாரம் : புஹாரீ : 5988

இந்த ஹதீஸின் மூலம் குடும்ப உறவைப் பேணுவது எனபது அல்லாஹ்வுடனான உறவைப் பேணுவதற்குச் சமமானது என்பதை நாம் அறியலாம்.

ஒரு மனிதர், நபீ(ஸல்)அவர்களிடம் வந்து, '' அல்லாஹ்வின் தூதரே! என்னைச் சுவனத்தில் நுழைவித்து நரகத்தை விட்டும் தூரமாக்கக் கூடிய ஒர் அமலை எனக்குச் சொல்லித் தாருங்கள்'' என்றார். அதற்கு நபீ(ஸல்)அவர்கள், "நீ அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும். அவனுக்கு எதையும் இணைவைத்து விடாதே! தொழுகையை நிலை நிறுத்து, ஸகாத்தும் கொடுத்து வா, குடும்ப உறவைப் பேணிக்கொள்" என்றார்கள். 
(அறிவிப்பவர் : ஹாலித் இப்னு ஸைத் அல் அன்ஸாரி(ரலி) ஆதாரம் : புஹாரீ, முஸ்லிம

நபீ(ஸல்) அவர்கள் கூறினார்கள் 'உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழையமாட்டான்'. 
அறிவிப்பவர்: ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி) ஆதாரம் : புஹாரீ: 5984

நபீ(ஸல்) அவர்கள் கூறினார்கள் 'தம் வாழ்வாதாரம் (ரிஸ்க்) விசாலமாக்கப்படுவதும; வாழ்நாள் நீட்டிக்கப்படுவதும், யாருக்கு மகிழ்ச்சி அளிக்குமோ அவர் தமதுஉறவைப் பேணி வாழட்டும். 
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி). ஆதாரம் : புஹாரீ :5985

'யார் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் ஈமான் கொள்கின்றாரோ அவர் குடும்ப உறவைச் பேணி நடக்கட்டும் ' என நபீ(ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) ஆதாரம் : புஹாரீ, முஸ்லிம்

அல்லாஹ்வின் மீதும் மறுமையின் மீதும் ஒரு முஸ்லிம் கொண்டுள்ள ஈமானின் வெளிப்பாடுகளில் ஒன்றாகக் குடும்ப உறவைப் பேணி நடத்தலும் உள்ளது. 

குடும்ப உறவைத் துண்டித்தவன் சுவனம் நுழைய மாட்டான் என்ற அண்ணலாரின் எச்சரிக்கைக்கு பயந்து குடும்ப உறவைப் பேணி நடந்து அல்லாஹ்வின் அருளையும், அன்பையும் பெறுவோமாக! 

Thursday 13 October 2011

ஷைத்தானை வீட்டை விட்டு விரட்டுங்கள்!



''உங்கள் வீடுகளைக் கப்ருகளாக ஆக்கி விடாதீர்கள்! சூரத்துல் பகரா ஓதப்படும் வீட்டை விட்டும் ஷைத்தான் வெருண்டோடுகிறான்!" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்லிம் 212, 1860, திர்மிதீ 2877, அஹ்மத் 7821)

இந்த ஹதீஸ் இறைவேதமாகிய குர்ஆன் ஓதப்படாத வீடுகளைக் கப்ருகள் என கூறுகிறது.  சூரத்துல் பகராவைக் குறிப்பாக வீட்டில் ஓத வேண்டும். அதன் மூலம் ஷைத்தான் விரட்டப்படுகிறான் எனவும் இந்த ஹதீஸ் கூறுகிறது. 

உங்கள் வீடுகளில் சூரத்துல் பகரா ஓதுங்கள்! ஏனெனில் எந்த வீட்டில் சூரத்துல் பகரா ஓதப்படுகின்றதோ அந்த வீட்டில் ஷைத்தான் நுழைய மாட்டான்!' என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்தத்ரக் 2062, 2063, 3029, தப்ரானீ 8564)

நம்முடைய இல்லங்கள் ஷைத்தான்களின் இருப்பிடங்களாக மாறிவிட்டன. இசை, சினிமா, பாட்டு, கூத்து என ஷைத்தானின் கீதங்கள் இசைக்கப்படுகிறது. ஆனால் ஷைத்தானை விரட்டுவதற்கான எந்த முயற்சியையும் நாம் செய்யாமல் இருக்கின்றோம்.ஷைத்தான் நுழையாமல் இருக்கவும், நுழைந்த ஷைத்தானை விரட்டவும் வீடுகளில் சூரத்துல் பகரா ஓதப்பட வேண்டுமென ஹதீஸ்கள் கூற, நாமோ ஷைத்தான்களை அழைத்து நமது இல்லங்களில் குடியமர்த்தி விருந்தும் படைத்து வருகின்றோம். எனவே முதலில் ஷைத்தானை விரட்ட வீட்டில் குர்ஆன் ஓதப்பட வேண்டும். இதை நாம் கவனத்திற்கொள்ள வேண்டும். மேலும் ஷைத்தானை விட்டு  அல்லாஹ்விடம் அடிக்கடி பாதுகாவல் கோர வேண்டும்

ஷைத்தான் ஏதாவதொரு (தவறான) எண்ணத்தை உம் மனத்தில் ஊசலாடச் செய்து (தவறு செய்ய உம்மைத்) தூண்டினால், அப்போது அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக! மெய்யாகவே (அல்லாஹ்வாகிய) அவன் செவியுறுபவனாகவும், (யாவற்றையும் நன்கு) அறிபவனாகவும் இருக்கின்றான்.
(உலகப் பொதுமறை அல்-குர்ஆன் 7: 200)

Friday 30 September 2011

உங்களுக்கு உற்ற நண்பர்கள் (BEST FRIENDS) யார் யார்?


நிச்சயமாக உங்களுக்கு உற்ற நண்பர்கள்: அல்லாஹ்வும், அவனுடைய தூதரும்; எவர் ஈமான் கொண்டு, தொழுகையை கடைபிடித்து, ஜகாத்தும் கொடுத்து, (அல்லாஹ்வின் கட்டளைக்கு எந்நேரமும்) தலைசாய்த்தும் வருகிறார்களோ அவர்கள்தாம்.        
(உலகப் பொதுமறை அல்-குர்ஆன் 5: 55)

முஃமினான ஆண்களும், முஃமினான பெண்களும் ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாக இருக்கின்றனர்; அவர்கள் நல்லதைச் செய்ய தூண்டுகிறார்கள்; தீயதை விட்டும் விலக்குகிறார்கள்; தொழுகையைக் கடைப்பிடிக்கிறார்கள்; (ஏழை வரியாகிய) ஜகாத்தை (முறையாகக்) கொடுத்துவருகிறார்கள்; அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் கட்டுப்படுகிறார்கள்; அவர்களுக்கு அல்லாஹ் சீக்கிரத்தில் கருணை புரிவான் -நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். 
(உலகப் பொதுமறை அல்-குர்ஆன் 9: 71)

ஈமான் கொண்டவர்களே! எனக்கு விரோதியாகவும், உங்களுக்கு விரோதியாகவும் இருப்பவர்களைப் பிரியத்தின் காரணத்தால் (இரகசியச் செய்திகளை எடுத்துக் காட்டும்) உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்; (ஏனெனில்) உங்களிடம் வந்துள்ள சத்திய (வேத)த்தை அவர்கள் நிராகரிக்கிறார்கள்; நீங்கள் உங்கள் இறைவனான அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டதற்காக, இத்தூதரையும், உங்களையும் வெளியேற்றுகிறார்கள்; என் பாதையில் போரிடுவதற்காகவும், என் பொருத்தத்தை நாடியும் நீங்கள் புறப்பட்டிருந்தால் (அவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்; அப்போது) நீங்கள் பிரியத்தால் அவர்களிடத்தில் இரகசியத்தை வெளிப்படுத்தி விடுகிறீர்கள்; ஆனால், நீங்கள் மறைத்துவைப்பதையும், நீங்கள் வெளிப்படுத்துவதையும் நான் நன்கு அறிந்தவன். மேலும், உங்களிலிருந்தும் எவர் இதைச் செய்கிறாரோ அவர் நேர்வழியை திட்டமாக தவற விட்டுவிட்டார்.  
(உலகப் பொதுமறை அல்-குர்ஆன் 60: 1)

இவர்கள் முஃமின்களை விட்டும் காஃபிர்களை (தங்களுக்குரிய) உற்ற நண்பர்களாக எடுத்துக்கொள்கிறார்கள். அவர்களிடையே இவர்கள் கண்ணியத்தை தேடுகிறார்களா? நிச்சயமாக கண்ணியமெல்லாம் அல்லாஹ்வுக்கே உரியது.              
 (உலகப் பொதுமறை அல்-குர்ஆன் 4: 139)

அவர்கள் அல்லாஹ்வின் மீதும் நபியின் மீதும், அவர் மீது இறக்கப்பட்ட (வேதத்)தின் மீதும் நம்பிக்கை கொண்டிருந்தார்களானால், அவர்கள், காஃபிர்களைத் (தங்களின்) உற்ற நண்பர்களாக ஆக்கிக் கொண்டிருக்க மாட்டார்கள்;. ஆனால் அவர்களில் அநேகர் பாவிகளாகவே இருக்கின்றனர்.
(உலகப் பொதுமறை அல்-குர்ஆன் 5: 81)

 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நிழலே இல்லாத நாளான மறுமை நாளில் அல்லாஹ் தம் அர்ஷின் நிழல் ஏழு பேர்களுக்கு அளிக்கிறான்.

 அவர்கள்;

- நீதியை நிலை நாட்டும் தலைவர்,

- அல்லாஹ்வின் வணக்க வழிபாட்டில் ஊறிய இளைஞர்,

- பள்ளி வாசல்களுடன் தம் உள்ளத்தைத் தொடர்பு படுத்திய ஒருவர்,

- அல்லாஹ்விற்காகவே இணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிகிற இரண்டு நண்பர்கள்,

- உயர் அந்தஸ்திலுள்ள அழகான ஒரு பெண் தவறான வழிக்குத் தம்மை அழைக்கிறபோது, 'நான் அல்லாஹ்வை அஞ்சுகிறேன்' என்று சொல்லும் மனிதர்,

- தம் வலக்கரம் செய்யும் தர்மத்தை இடக்கரம் அறியாதவாறு இரகசியமாகச் செய்பவர்,

- தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்துக் கண்ணீர் சிந்துபவர்'
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல் : புகாரி 660.

அல்லாஹ்வையும், அவனது தூதரையும், முஃமின்களையும் யார் நேசர்களாக ஆக்குகிறார்களோ, அவர்கள்தாம்  ஹிஸ்புல்லாஹ் (அல்லாஹ்வின் கூட்டத்தினர்) ஆவார்கள்;. நிச்சயமாக இவர்களே மிகைத்து வெற்றியுடையோராவார்கள்.                    
         (உலகப் பொதுமறை அல்-குர்ஆன் 5: 56)

Wednesday 14 September 2011

எது தர்மம்?



'தர்மம் செய்வது எல்லா முஸ்லிம்களின் மீதும் கடமையாகும்;; '
என்று இறுதி இறைத்தூதர் பெருமானார் முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் கூறியபோது

மக்கள் : 'ஒருவருக்கு தர்மம் செய்ய எதுவும் கிடைக்கவில்லை என்றால்  என்ன செய்வது?' என்று கேட்டார்கள்.

நபி(ஸல்); : 'அவர் தம் இரு கைகளால் (அவர்) உழைத்துத் தாமும்  பயனடைவார். தர்மம் செய்(து பிறரையும் பயனடைய செய்)வார்!' என்று  கூறினார்கள்.

மக்கள் : 'அவருக்கு (உழைக்க உடலில்) தெம்பு இல்லையென்றால் அல்லது அவர் அதைச் செய்ய இயலா விட்டால் (என்ன செய்வது)? ' என்று கேட்டனர்.

நபி(ஸல்); : 'பாதிக்கப்பட்ட தேவையுடையோருக்கு அவர் உதவட்டும்!' என்றார்கள்.

மக்கள் : '(இதையும்) அவர் செய்ய (இயல)வில்லையென்றால்?' என்று கேட்டார்கள்.

நபி(ஸல்); : 'அப்போது அவர் நற்காரியங்கள் செய்யும்படி பிறரை ஏவட்டும்!' என்றார்கள்.

மக்கள்    : 'இதையும் அவர் செய்யாவிட்டால்?' என்று மீண்டும் கேட்டதற்கு 

நபி(ஸல்); : 'அவர் (பிறருக்கு எதுவும்) தீங்கு செய்யாமல் இருக்கட்டும். அதுவே அவருக்கு தர்மம் ஆகும்' என்றார்கள்.

அறிவிப்பவர் : அபூமூஸா அல் அஷ் அரீ (ரலி)- நூல்: புகாரி- ஹதீஸ் எண் 6022.

தர்மம் என்பது, 'பணத்தையும், பொருளையும் கொடுத்து உதவுவது'  என்று விளங்கி வாழ்ந்து வரும் இன்றைய கால கட்டத்திற்கு ஏற்ப, ஏறத்தாழ 1420 ஆண்டுகளுக்கும் முன்னர் மனித சமூகத்திற்கு வழி காட்ட அனுப்பப்பட்ட இறுதி இறைத்தூதர் நபி(ஸல்) அவர்கள மூலம் அல்லாஹ் மிகவும் அழகான முறையில் தர்மத்தின் விளக்கத்தை வழங்கியுள்ளான்.

சில்லறைகளை எடுத்து வறியவருக்கு இறைத்து விடுவது மட்டுமே தர்மம் என்று பலர் கருதுவது குறுகிய கண்ணோட்டம் என்பதை இந்த நபிமொழி  உணர்த்துகிறது.

தன்னிடம் எது இருக்கின்றதோ அதனை தேவையுடையவர்களுக்குக் கொடுப்பதும், தன்னிடம் எதுவுமே இல்லை எனில் மற்றவர்களை நன்மைகளை செய்வதற்கு ஏவுவதும் அதற்கும் இயலாதெனில் யாருக்கும் எவ்வித தீங்கும் இழைக்காமல் இருப்பதும் தர்மமே என்று இஸ்லாம் தர்மத்திற்கு விரிவான விளக்கம் அளிக்கின்றது. 

பெரும்பொருள் படைத்த செல்வந்தர்கள் மட்டுமின்றி தன்னிடம் அடுத்த வேளை உணவுக்குக் கூட வழியில்லாத ஒரு பரம ஏழையும் இவ்வழிகாட்டல் மூலம் தர்மம் செய்து நன்மைகளை இலகுவாகப் பெற முடியும்.

உடல் ஊனங்களோ, பலவீனங்களோ, முதுமையோ, வறுமையோ ஒருவர் தர்மம் செய்து நன்மைகள் பெற தடையாக நிற்காது என்றும், நல்லதைச் செய்ய தன்னால் இயலவில்லையென்றாலும், பிறரை அதற்காக ஏவுதலும், உபதேசித்தலும் கூட தர்மத்தின் நன்மையைப் பெற்றுத் தரவல்லவை எனும் உன்னதமான நல்வழியை இஸ்லாம் சமூகத்திற்குக் கற்றுத் தருகிறது.

நாவைப் பேணுக!




நாவைப் பேணுதல் பற்றி குர்ஆனின் போதனைகள்!


உண்மை பேசுக!

'உண்மை பேசுபவர்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கும் நாளாகும். கீழே சதா நீரருவிகள் ஒலித்தோடிக் கொண்டிருக்கும் சுவனபதிகள் அவர்களுக்குண்டு;> அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள்.   
(உலகப் பொதுமறை அல்-குர்ஆன் 5:119)


நேர்மையாக பேசுக!

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (எந்நிலையிலும்) நேர்மையான சொல்லையே சொல்லுங்கள். 

அழகானதைப் பேசுக!


பெற்றோருக்கும்;> உறவினர்களுக்கும்;> அநாதைகளுக்கும்;> மிஸ்கீன்(களான ஏழை)களுக்கும் நன்மை செய்யுங்கள்; மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்.                                                  
(உலகப் பொதுமறை அல்-குர்ஆன் 2:83)


கனிவாகப் பேசுக!


உறவினர்களோ அநாதைகளோ;> ஏழைகளோ வந்து விடுவார்களானால் அவர்களுக்கும் அ(ச்சொத்)திலிருந்து வழங்குங்கள்;. மேலும் அவர்களிடம் கனிவான வார்த்தைகளைக் கொண்டே பேசுங்கள்.                         
(உலகப் பொதுமறை அல்-குர்ஆன் 4:8)


நியாயமாகப் பேசுக!

நீங்கள் பேசும்பொழுது அதனால் பாதிக்கப்படுபவர் நெருங்கிய உறவினராக இருந்த போதிலும் - நியாயமே பேசுங்கள்.
(உலகப் பொதுமறை அல்-குர்ஆன் 6:152)


அன்பாகப் பேசுக!


அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும் அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும் (பிரயாணம் தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும் வழிப்போக்கர்களுக்கும் உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை.
(உலகப் பொதுமறை அல்-குர்ஆன் 4:36 )


வீண் பேச்சை தவிர்த்துடுக!


நம் வேத வசனங்களைப் பற்றி வீண் விவாதம் செய்து கொண்டிருப்போரை நீர் கண்டால்;> அவர்கள் அதைவிட்டு வேறு விஷயங்களில் கவனம் செலுத்தும் வரையில் நீர் அவர்களைப் புறக்கணித்து விடும்.
(உலகப் பொதுமறை அல்-குர்ஆன் 6:68)


பொய் பேசாதீர்!

 பொய்யான சொல்லையும் நீங்கள் விலக்கிக் கொள்ளுங்கள்.          
    (உலகப் பொதுமறை அல்-குர்ஆன் 22:30)


புறம் பேசாதீர்!


உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம். 
(உலகப் பொதுமறை அல்-குர்ஆன் 49:12)


ஆதாரமின்றி பேசாதீர்!


யாதோர் ஆதாரமுமின்றி அல்லாஹ்வின் வசனங்களைப் பற்றித் தர்க்கம் செய்வது அல்லாஹ்விடத்திலும் ஈமான் கொண்டவர்களிடத்திலும் மிகவும் வெறுக்கப்பட்டதாகும்.                             
(உலகப் பொதுமறை அல்-குர்ஆன் 40:35)


அவதூறு பேசாதீர்!


எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்;;
(உலகப் பொதுமறை அல்-குர்ஆன் 24:23)

Saturday 3 September 2011

அல்-குர்ஆன் ஓதுவதற்கான நன்மைகள




கூடையும் சிறுவனும்!


வயதான விவசாயி ஒருவர் தன் சிறு வயது பேரனுடன் ஆறு ஓடும் ஓர் அழகிய மலைப்பிரதேசத்தின் அருகில் வாழ்ந்து வந்தார். ஒவ்வொரு நாளும் அதிகாலையில் தன் படுக்கை அறையில் அமர்ந்து குர்ஆனை ஓதுவது இவரின் அன்றாட வழக்கமாக இருந்து வந்தது. மற்றவர்கள் மீது மிகுந்த அன்பு செலுத்தும் தனது தாத்தாவைப் போன்றே தானும் ஆக வேண்டும் என்ற ஆசை கொண்ட அவரின் பேரன் அவரது ஒவ்வொரு செய்கையையும் கவனித்து அவற்றை தானும் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தான்.

ஒருநாள் பேரன் தாத்தாவைப் பார்த்து> 'தாத்தா! உங்களைப் போன்றே நானும் குர்ஆனைப் படிக்க முயற்சி செய்தேன். ஆனால் ஒன்றுமே விளங்கவில்லை. அதுமட்டுமன்றி குர்ஆனை மூடிவைத்ததும் படித்த கொஞ்சமும் மறந்தும் போய் விடுகிறது. எதுவுமே விளங்காமல் குர்ஆனைப் படிப்பதனால் அப்படி என்ன நன்மை நமக்கு வந்துவிடப்போகிறது?' என்று கேட்டான்.

சமைத்துக்கொண்டிருந்த தாத்தா> கூடையில் எஞ்சியிருந்த அடுப்புக்கரியை அடுப்பினுள் தள்ளி விட்டுக் கொண்டு பேரனிடம் திரும்பி காலியான கூடையை அவன் கையில் கொடுத்து> 'இந்த கரிக்கூடையில் ஆற்றுத்தண்ணீரை நிறைத்துக் கொண்டு வா!' என்றார். பேரனும் அவ்வாறே ஆற்றிற்குச் சென்று தண்ணீரை கூடையில் நிறைத்து வீடு திரும்பினான். ஆனால் ஆற்றங்கரையிலிருந்து வீட்டிற்குத் திரும்பி வந்து சேர்வதற்குள் கூடையில் கொண்டுவந்திருந்த தண்ணீர் முழுவதும் சிறிது சிறிதாக ஒழுகி கூடை காலியாகி விட்டிருந்தது. வருத்தமுடன் வீட்டினுள் நுழைந்து காலிக்கூடையைக் தாத்தாவிடம் காண்பித்தான். அவன் மனதின் வருத்தத்தைப் புரிந்து கொண்ட தாத்தா சிரித்துக் கொண்டே> 'சரி பரவாயில்லை! இம்முறை விரைவாக வீட்டிற்கு வந்து விடு!' என்று கூறி மறுபடியும் தண்ணீர் கொண்டு வர ஆற்றுக்கு அனுப்பினார்.

இம்முறை தண்ணீரை கூடையில் நிரப்பி விரைவாக பேரன் வீட்டிற்கு வந்து சேர்ந்தான். எனினும் கூடை முன்பு போலவே காலியாகிவிட> 'இக்கூடையில் தண்ணீர் கொண்டு வருவது சாத்தியமே இல்லை தாத்தா!' என்று மூச்சிரைக்க கூறிக் கொண்டே தண்ணீர் கொண்டுவர கூடைக்குப் பதிலாக வீட்டிலுள்ள மற்றொரு பெரிய பாத்திரத்தை எடுக்க முயன்றான். அப்போது அவனை தடுத்த தாத்தா> 'எனக்குப் பெரிய பாத்திரத்தில் நீர் தேவையில்லை. இந்தச் சிறு கூடையில் தான் வேண்டும். நீ கடுமையாக முயற்சிக்கவில்லை என்று எண்ணுகிறேன்!' என்று அவனைப் பார்த்து கூறினார்.

சிறு துளைகள் உடைய அக்கூடையில் ஆற்றிலிருந்து வீடுவரை தண்ணீரை ஒழுகாமல் தன்னால் கொண்டு வரமுடியாது என்று நன்றாகத் தெரிந்தும்> தாத்தாவிற்கு தன் கடுமையான முயற்சிகளைக் காண்பிக்க வேண்டும் என்ற ரோஷம் கொப்பளிக்க மறுபடி ஆற்றுக்கு ஓடினான் சிறுவன். ஆனால் பாவம் மறுபடியும் தோல்வியுடனே வீடு திரும்பினான்.

'தாத்தா! நான் மிகக் கடுமையாக முயற்சி செய்தும் பயன் ஏதுமில்லை என்பதை பார்த்தீர்களா?' என்று அவரிடம் கூடையைக் காட்டினான்.

'உனது இம்முயற்சி பலன் தரவில்லை என்றா நினைக்கிறாய்? கூடையை நன்றாகப் பார்!' என்றார் தாத்தா.

தண்ணீர் கொண்டுவர வேண்டும் என்ற கவனத்திலேயே இருந்த பேரன் முதல் முறையாக கூடையினுள் பார்வையை செலுத்தினான். அப்பொழுது தான் தாத்தாவிடமிருந்து வாங்கிய கூடைக்கும் தற்போது கையில் இருக்கும் கூடைக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்தான்.

ஆம்! அடுப்புக்கரியினால் அழுக்கேறியிருந்த அக்கூடை இப்போது உள்ளும் புறமும் தூய்மையாகி பளிச்சென்றிருந்தது.

அன்புடன் தன் பேரனை வாரி அணைத்துக் கொண்ட தாத்தா சொன்னார்> 'ஒருவர் தொடர்ந்து குர்ஆனை ஓதும் பொழுதும் இதுவே நிகழ்கிறது. குர்ஆன் ஓதும் போது அதன் பொருளறிந்து ஓதி அதன்படி செயல் படுவது சிறந்தது என்பதில் மாற்று கருத்து கிடையாது. ஆனால் பொருளறியாமல் அதை ஓதினாலும் அதன் ஒவ்வொரு எழுத்துக்கும் பத்து நன்மைகள் கிடைக்கும் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி(ஸல்)அவர்கள் கூறியுள்ளார்கள். நம்மை படைத்த இறைவனின் வார்த்தை இது என்ற எண்ணத்தில் ஒருவர் ஓதும் பொழுது ஓதுபவருக்கு அது புரியாமல் போனாலும்> ஓதுவது அனைத்துமே அவரின் நினைவில் நிற்காமல் போய் இந்தக் கூடைநீர் போல் வழிந்தோடி விட்டாலும் ஓதுபவரின் உள்ளம் இறையச்சத்தால் பரிசுத்தம் அடைகிறது. அவரின் வாழ்வில் தெளிவு பிறக்கிறது. இதுவே மனிதனைப் படைத்த இறைவன் புரியும் அற்புதமாகும்!' என்று கூறினார்.

இதனைக் கேட்ட சிறுவன் மகிழ்ச்சியுடன்> 'மிக்க நன்றி தாத்தா. இனி நானும் உங்களை போல் தினமும் அதிகாலையில் முதல் வேலையாக திருக்குர்ஆனை ஓதுவதை வழக்கமாக கொள்வேன்' என்று கூறினான்.

இறைத்தூதர் நபி(ஸல்) அவர்களின் இறுதிப் பேருரை!


இதற்கு முன் என்றுமே இருந்திராத அளவிற்கு மாபெரும் கூட்டத்தால் அன்று சங்கைமிகு மக்காவின் புனித பள்ளிவாசல் நிரம்பி வழிந்தது. அங்கு கூடியிருந்தோரின் உள்ளச்சமும் வணக்க வழிபாடுகளும் அவர்களின் ஆன்மிக உணர்வுகள் முழுமை அடைந்திருந்ததை வெளிப்படுத்திக் கொண்டிருந்தன.

அதுதான் ஹிஜ்ரி 10-ஆம் ஆண்டு ஹஜ் கடமையை நிறைவேற்ற கூடியிருந்த மாபெரும் கூட்டத்தின் எதார்த்த நிலையாகும். அரபுலகம் முழுவதிலுமிருந்து சுமார் ஒரு இலட்சத்து இருபதாயிரத்திற்கும் அதிகமானவர்கள் அங்கே குழுமியிருந்தார்கள். அதுவும் ஒரு மகத்தான வணக்கத்தை> மகத்தான இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுடன் சேர்ந்து நிறைவேற்றுகிற மன மகிழ்ச்சியில் திளைத்திருந்தார்கள்.

இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் அங்கு வந்திருந்த அனைவரையும் துல்ஹஜ் பிறை எட்டின் நடுப்பகலுக்குப் பிறகு மக்காவிலிருந்து 'மினா'விற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு ளுஹர்> அஸ்ர்> மக்ரிப்>இஷா> ஸுப்ஹ{ ஆகிய தொழுகைகளை முடித்துவிட்டு சூரிய உதயத்திற்குப் பின்> தோழர்களுடன் அரஃபா நோக்கிப் புறப்பட்டார்கள். அங்கு நமிரா பள்ளத்தாக்கில் நபியவர்களுக்காக கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது. அதில் சூரியன் உச்சி பொழுதைக் கடக்கும் வரை தங்கி இருந்தார்கள். அதன் பிறகு தமது 'கஸ்வா' ஒட்டகத்தைத் தயார் படுத்தக் கூறி> அதில் பயணித்து> 'பத்னுல்வாதி' எனும் பகுதிக்கு வந்தார்கள்.

அமைதி காத்த நிலையில் அந்த மக்கள் நபி (ஸல்) அவர்களைப் பார்த்தபடி நிற்க> அதே இடத்தில் தமது ஒட்டகத்தின் மீதமர்ந்தபடி நபியவர்கள் ஒரு சொற்பொழிவு ஆற்றினார்கள்.

நபி(ஸல்) அவர்கள் அப்போது ஆற்றிய அந்த உரையே 'நபியவர்களின் இறுதிப் பேருரை' என்பதாக இன்று அறியப்படுகிறது.

கூட்டம் பிரமாண்டமாக இருந்ததால்> நபி (ஸல்) அவர்களின் சொற்பொழிவு அனைவரின் செவிகளுக்கும் சென்றடைவது சாத்தியமில்லை என்ற நிலை உருவானது. எனவே> அங்கிருந்தோரிலேயே மிக உரத்த குரல் கொண்டிருந்த ரபீ இப்னு உமய்யா இப்னு கலஃபை அழைத்து> தமது பேச்சை எல்லோரும் செவியுறும் விதமாக ஒவ்வொரு வாக்கியமாய் திரும்பச் சொல்லுமாறு பணித்தார்கள். 
                                                                                  (அல் பிதாயா இப்னு கஸீர் 5ஃ189)

தொடக்க துதி மொழிகள்

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவனையே நாம் புகழ்கிறோம்; அவனிடமே நாம் உதவி தேடுகிறோம். நம்முடைய மன இச்சைகளின் கெடுதிகளை விட்டும்> நம்முடைய செயல்களின் தீமைகளை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறோம். யாருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவானோ> அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. யாரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுவானோ> அவரை நேர்வழியில் செலுத்துபவர் யாரும் இல்லை. இன்னும்> நான் சாட்சி சொல்கிறேன்: 'அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை. அவன் தனித்தவன்; அவனுக்குக் கூட்டாளி யாரும் இல்லை.' மேலும்> நான் சாட்சி சொல்கிறேன்: 'நிச்சயமாக முஹம்மது> அவனுடைய அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்.' 
                                                                                 (ஸுனன் இப்னு மாஜா 1892>1893)

பிரிவின் முன்னறிவிப்பு

ஒ... மக்களே! என் பேச்சை கவனமாகக் கேளுங்கள்! இந்த ஆண்டிற்குப் பிறகு மீண்டும் இந்த இடத்தில் சந்திப்பேனா என்பது எனக்குத் தெரியாது
(தாரீக் இப்னு கல்தூன் 2ஃ58> இப்னு ஹிஷாம் 2ஃ603> அர்ரஹீக் அல்மக்தூம் 461)


பிறப்பால் உயர்வு தாழ்வு காட்டாதீர்!

மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; (உங்களது தந்தையும் ஒருவரே!) அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ> எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ> எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான்.
(அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா2700>அத்தர்கீப் வத்தர்ஹீப்> அல்பைஹகீ> தஹாவி)

தலைமைக்குக் கீழ்ப்படிவீர்!

ஒ... மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் கருப்பு நிற (அபிசீனிய) அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் (அவரது சொல்லைக்) கேட்டு நடங்கள்; (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்!
(ஸுனன் நஸாயி 4192> ஜாமிவுத் திர்மிதி1706)

பிறர் உடமையைப் பேணுவீர்!

ஒ... மக்களே! இந்த (துல்ஹஜ்) மாதமும்> இந்த (துல்ஹஜ் 9ம்) நாளும்> இந்த (மக்கா) நகரமும் எவ்வளவு புனிதமானவையோ> அப்படியே உயிர்களும்> உங்கள் உடமைகளும் உங்கள் மானம் மரியாதைகளும் உங்களுக்குப் புனிதமானவை.

அராஜகம் செய்யாதீர்கள்!

அறிந்து கொள்ளுங்கள்! எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்ளும் வழிகெட்டவர்களாய் இறை நிராகரிப்பாளர்களாய் மாறி விடாதீர்கள்.
(ஸஹீஹ{ல் புகாரி 4403)

உங்களது இறைவனை நீங்கள் சந்திக்கும் வரை (இப்படியே வாழுங்கள்!) நீங்கள் அனைவரும் தவறாமல் அல்லாஹ்வின் முன்னிலையில் ஆஜராகப் போகிறீர்கள்! அப்போது அல்லாஹ் உங்களது செயல்களைப் பற்றி விசாரிப்பான்.

நான் மார்க்கத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். உங்களில் எவராவது மற்றவருடைய பொருளின் மீது பொறுப்பேற்றிருந்தால்> அதை அவர் உரிய முறையில் அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்து விடட்டும்!
              (ஸஹீஹ் முஸ்லிம் 2334> ஸஹீஹ{ல் புகாரி 67> 105> 1741> 1742)

பணியாளர்களைப் பேணுவீர்!

ஒ..மக்களே! முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள். உங்கள் அடிமைகள் விஷயத்தில் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ளுங்கள்! அவர்களை நன்றாகப் பராமரியுங்கள்! நீங்கள் உண்பதையே அவர்களுக்கும் உண்ணக் கொடுங்கள்; நீங்கள் உடுத்துவதையே அவர்களுக்கும் உடுத்தச் செய்யுங்கள்!

(தபகாத் இப்னு ஸஅது> முஹம்மது அந்நபிய்யுல் காதிம் மாஜித் அலீ கான்)

மறுமைக்கு அஞ்சுவீர்!

ஓ... குரைஷிகளே! நாளை மறுமைக்கான தயாரிப்புடன் மக்கள் வரும்போது நீங்கள் உங்கள் பிடரிகளின் மீது உலகச் சுமைகளைச் சுமந்துகொண்டு வந்து விடாதீர்கள். அப்போது அல்லாஹ்வின் புறத்திலிருந்து நான் எந்த ஒரு விஷயத்திலும் உங்களுக்குப் பலன் அளித்திட முடியாது
(மஜ்மவுஸ் ஸவாயிது 272:3)

அநீதம் அழிப்பீர்!

அறியாமைக்கால அனைத்து விவகாரங்களும் என் பாதங்களுக்குக் கீழ் புதைப்பப்பட்டு விட்டன. மேலும்> இன்று வரையிலான எல்லா வட்டிக் கணக்குகளையும் ரத்துச் செய்து விட்டேன். எனினும்> உங்களது மூலதனம் உங்களுக்கே உரியது. வட்டியை அல்லாஹ் தடைசெய்து விட்டான். எனவே> முதலில் (என் குடும்பத்தைச் சேர்ந்த) அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிபின் வட்டியைச் செல்லாததாக ஆக்குகிறேன்.

அறியாமைக்கால இரத்தப் பழிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு விட்டன. இனி> பழைய கொலைக்குப் பழிவாங்கும் உரிமை எவருக்கும் இல்லை. இதில் முதலாவதாக என் குடும்பத்தைச் சேர்ந்த ரபீஆ இப்னு அல்ஹாரிஸ் இப்னு அப்துல் முத்தலிப் கொல்லப்பட்டதற்கான பழிவாங்கலை ரத்துச் செய்கிறேன். அறியாமைக் கால கொலை குற்றத்தில் இதை நான் முதலாவதாக தள்ளுபடி செய்கிறேன்
(ஸஹீஹ் முஸ்லிம் 2334> இப்னு மாஜா 3074)
  

முறைதவறி நடக்காதீர்!

அறிந்து கொள்ளுங்கள்! குழந்தை விரிப்புக்கே சொந்தமானது. (அனுமதிக்கப்பட்ட திருமண உறவுடன் இருக்கும் கணவனுக்கே குழந்தை உரியதாகும்) மணமுடித்துக் கொண்ட பிறகும் விபசாரம் செய்பவர் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும். எவர் தம் தந்தை அல்லாதவரை தம்முடைய தந்தையாக அழைக்கிறாரோ> எவர் தம் உரிமையாளர் அல்லாதவருடன் தம்மை இணைத்துக் கொள்கிறாரோ> அவர்கள் மீது அல்லாஹ்வுடைய> வானவர்களுடைய இன்னும்> மக்கள் அனைவருடைய சாபமும் உண்டாகட்டும்! அவர்களின் கடமையான உபரியான எந்த வணக்கமும் ஏற்றுக் கொள்ளப்படாது.
(இப்னு மாஜா 2712> ஸஹீஹ{ல் ஜாமி 1789)


உரிமைகளை மீறாதீர்!

ஒரு பெண் தமது கணவரின் வீட்டிலிருந்து அவரது அனுமதியின்றி எதையும் செலவு செய்யக்கூடாது. அப்போது> 'உணவையுமா?' என்று கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள்> 'ஆம்! அதுதான் நமது செல்வங்களில் மிகச் சிறந்தது' என்றார்கள்.
(ஸஹீஹ{ல் ஜாமி 1789> ஸுனன் அபூ தாவூத் 3565)

ஒ... மக்களே! ஒவ்வொருவருக்கும் சொத்தில் அவரவரின் உரிமைகளை அல்லாஹ் வழங்கி இருக்கின்றான். இனி> எவரும் தமது எந்த வாரிசுக்கும் உயில் எழுதக் கூடாது.
(நஸாயி 3642> ஸுனன் அபூதாவூத் 2870> 3565> தபகாத் இப்னு ஸஅது)

இரவலாக வாங்கப்பட்ட பொருட்கள் உரியவரிடமே ஒப்படைக்கப் படவேண்டும்; பாலைக் கொண்டு பயன்பெற கொடுப்பட்ட கால்நடைகள் (அவற்றின் பயன்பாடு தீர்ந்தவுடன்) அவற்றின் உரிமையாளரிடமே திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும்; கடன்கள் நிறைவேற்றப்பட வேண்டும்; இழப்பீடுகளை நிறைவேற்ற தலைவனே பொறுப்பாளன்.


(ஸுனன் அபூதாவூத் 3565> ஜாமிவுத் திர்மிதி 2120> 2121> ஸுனன் இப்னு மாஜா தபகாத் இப்னு ஸஅது> தாரீக் இப்னு இஸ்ஹாக்)
  
பெண்களை மதிப்பீர்!

கவனியுங்கள்! பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; அவர்களுக்கு நன்மையே நாடுங்கள்; அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள். அல்லாஹ்வுடைய அமானிதமாக அவர்களை நீங்கள் பெற்றுள்ளீர்கள்! எப்படி உங்கள் மனைவியர் மீது உங்களுக்கு உரிமைகள் இருக்கின்றனவோ> அதே போல் உங்கள் மனைவியருக்கும் உங்கள் மீது உரிமைகள் இருக்கின்றன. அவர்கள் உங்களுக்குச் சிறந்த முறையில் பணிவிடை ஆற்றட்டும்! அவர்களுக்குரிய கடமை என்னவென்றால்> நீங்கள் எவரை விரும்ப மாட்டீர்களோ> அவரை அவர்கள் வீட்டுக்குள் அனுமதிக்காமல் இருக்கட்டும்; இன்னும்> மானக்கேடான செயலைச் செய்யாமல் இருக்கட்டும்! அவர்கள் குற்றம் புரிந்தால்> அவர்களைத் தண்டிக்கிற உரிமையும் உங்களுக்கு உண்டு. அது அவர்களை இலேசாக காயம்படாதபடி அடிப்பதாகும். அவர்களுக்கு ஒழுங்கான முறையில் உணவும் உடையும் வழங்குங்கள்; அவர்களுக்கு நன்மையை நாடுங்கள்; அவர்கள் உங்களின் உதவியாளர்களாகவும் உங்களைச் சார்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள். அல்லாஹ்வின் பெயரை முன்மொழிந்தே நீங்கள் அவர்களுடன் மணவாழ்க்கை மேற்கொண்டுள்ளீர்கள்!     
                     (ஸஹீஹ் முஸ்லிம் 2334> ஸஹீஹ் ஜாமிஇ 7880)


இரண்டைப் பின்பற்றுவீர்!


மக்களே! சிந்தித்துப் புரிந்து கொள்ளுங்கள்; எனது பேச்சை கவனமாக கேட்டுக் கொள்ளுங்கள். நான் எனது பிரசாரத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். உங்களிடையே அல்லாஹ்வின் வேதத்தை(யும் அவனது தூதரின் வழிமுறையும்) விட்டுச் செல்கிறேன். நீங்கள் அவற்றைப் பின்பற்றினால்> ஒருபோதும் வழிகெட மாட்டீர்கள்!
(ஸஹீஹ் முஸ்லிம் 2334> இப்னு மாஜா 3074) 
(முஅத்தா இமாம் மாலிக்ஃமிஷ்காத்182. ஸஹீஹ{த் தர்கீப் 40.)


 எச்சரிக்கையாக இருப்பீர்!

மக்களே! உங்களது இந்த நகரத்தில்> தான் வணங்கப்படுவதைப் பற்றி ஷைத்தான் நம்பிக்கை இழந்து விட்டான். ஆனாலும்> அவன் மகிழ்ச்சியுறும் விதமாய் நீங்கள் அற்பமாக கருதும் சில விஷயங்களில் அவனுக்கு நீங்கள் கீழ்ப்படிவீர்கள். ஆகவே> உங்களது மார்க்க விஷயத்தில் அவனிடம் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்!

(பிக்ஹ{சூரா456. ஸஹீஹ் ஜாமி 7880ஃமுஸ்தத்ரகுல் ஹாகிம். ஸஹீ{ஹத் தர்கீப் 40)

இன்னும்> (மகா பொய்யன்) தஜ்ஜாலைப் பற்றியும் உங்களுக்கு எச்சரிக்கிறேன். அல்லாஹ் அனுப்பிய எந்த இறைத்தூதரும் (அவனைப் பற்றித்) தம் சமுதாயத்தாரை எச்சரிக்காமல் இருந்ததில்லை. (இறைத் தூதர்) நூஹ் அவர்கள் (தம் சமுதாயத்தாருக்கு) அவனைப் பற்றி எச்சரித்தார்கள். அவர்களுக்குப் பின்னால் வருகை தந்த இறைத்தூதர்களும் எச்சரித்தார்கள். மேலும்> (என் சமுதாயத்தினரான) உங்களிடையேதான் (இறுதிக் காலத்தில்) அவன் தோன்றுவான். அவனது (அடையாளத்) தன்மைகளில் எதேனும் சில உங்களுக்குப் புலப்படாமல் போனாலும்> நிச்சயமாக உங்களுடைய இறைவன் உங்களுக்குத் தெரியாதவனல்லன் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்! உங்கள் இறைவன் ஒற்றைக் கண்ணன் அல்லன். அவனோ> (தஜ்ஜாலோ) வலது கண் குருடானவன். அவனது கண் (ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சை போன்று இருக்கும். 
                                                                                              (ஸஹீஹ்{ல் புகாரி 4402)


இறை ஏற்பாட்டை மாற்றாதீர்!

(மாதத்தின் நாட்களை தன் இஷ்டப்படி) முன் பின்னாக்குவதெல்லாம் இறை நிராகரிப்பை அதிகரிக்கும் செயலாகும். ஆதனால் நிராகரிப்பவர்கள்தான் வழிகெடுக்கப்படுகிறார்கள். எனென்றால்> அவர்கள் தங்கள் இஷ்டப்படி மாதங்களை முன் பின்னாக்கி ஒர் அண்டில் அம்மாதங்களில் போர் புரிவதை ஆகுமாக்கிக் கொள்கிறார்கள். மற்றோர் ஆண்டில் அதே மாதங்களில் போர் புரிவது கூடாது என்று தடுத்து விடுகிறார்கள். இவ்வாறு அவர்கள் செய்வதன் நோக்கமெல்லாம் தாங்கள் தடுத்திருக்கும் மாதங்களின் எண்ணிக்கையை அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களின் எண்ணிக்கைக்குச் சரியாக்கி> அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களையும் தாங்கள் ஆகுமாக்கிக் கொள்வதற்குத்தான்.
(அல்குர்;அன்9:37) (தாரீக் இப்னு கல்தூன் 59.2)

அறிந்து கொள்ளுங்கள்: 


நிச்சயமாக காலம்> வானங்களையும் பூமியையும் அல்லாஹ் படைத்த அன்றிருந்த அதன் அமைப்பைப் போன்றே> இப்போதும் சுற்றிவருகின்றது. அல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாகும். இப்படித்தான் வானங்களையும் பூமியையும் அல்லாஹ் படைத்த அன்று> அவனது புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் நான்கு மாதங்கள் சங்கைக்குரியன. மூன்று> தொடர்ந்து வருபவை. அவை துல்கஅதா> துல்ஹஜ்> முஹர்ரம்> நான்காவது ஜுமாதல் உலாவிற்கும் ஷஅபானிற்கும் இடையில் உள்ள ரஜப் ஆகும்.
(ஸஹீஹ{ல் புகாரி 4662> ஸுனன் அபூதாவூத் 1942)


சகோதரம் பேணுவீர்!

ஒவ்வொரு முஸ்லிமும் மற்ற முஸ்லிமுக்குச் சகோதரர் ஆவார். முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்களே! ஒரு முஸ்லிமின் பொருள் பிறருக்கு அறவே ஆகுமானதல்ல் மனமுவந்து கொடுத்தாலே தவிர! உங்களுக்கு நீங்கள் அநீதம் இழைத்துக் கொள்ளாதீர்கள் 

ஸஹீஹ{ல் ஜாமி 7880> தாரீக் இப்னு கல்தூன் 59ஃ2> பிக் ஹஸ் ஸீரா 456)


சொர்க்கம் செல்ல இதுதான் வழி!

ஒ... மக்களே! உங்கள் இறைவனையே வணங்குங்கள்; உங்கள் இறைவனுக்கே பயந்து கொள்ளுங்கள்; கடமையான ஐவேளைத் தொழுகைகளையும் தவறாது பேணுங்கள்; (ரமழானில்) நோன்பு நோற்று வாருங்கள்; விருப்பமுடன் ஸகாத் கொடுத்து விடுங்கள்; அல்லாஹ்வின் இல்லத்தை ஹஜ் செய்யுங்கள்; உங்களில் அதிகாரம் உடையோருக்குக் கட்டுப்பட்டு நடங்கள்; நீங்கள் சொர்க்கம் செல்வீர்கள்!.

(ஜாமிவுத் திர்மிதி616> ஸஹீ{ஹத் திர்மிதி516> மிஷ்காத் 576> முஸ்னத் அஹ்மத்>
தாரீக் இப்னு ஜரீர்> தாரீக் இப்னு அஸப்கிர்> மஆதினுல் அஃமால் 1108>1109)

  
குற்றவாளியே தண்டிக்கபடுவார்!

ஒருவர் குற்றம் செய்தால் அதற்கான தண்டனை அவருக்கே கொடுப்படும்; மகனுடைய குற்றத்திற்காக தந்தையோ> தந்தையின் குற்றத்திற்காக மகனோ தண்டிக்கப்பட மாட்டார்.

(ஸஹீஹ{ல் ஜாமி 7880> ஜாமிவுத் திர்மிதி2159>3078> ஸஹீஹ{த் திர்மிதி373>461>
ஸுனன் இப்னு மாஜா 3055> ஸஹீஹ் இப்னு மாஜா 1015.)


இஸ்லாம் முழுமையாகி விட்டது!

ஒவ்வோரு இறைத்தூதரின் பிரார்தனையும் (இவ்வுலகிலேயே) முடிந்து விட்டன் என் பிரார்த்தனையைத் தவிர! நான் அதை மறுமை நாளுக்காக என் இறைவனிடம் சேமித்து வைத்திருக்கிறேன். அறிந்து கொள்ளுங்கள்; மறுமை நாளில் இறைத்தூதர்கள் தங்களது சமுதாயத்தினர் அதிகமாக இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியுறுவார்கள். அப்போது என்னை நீங்கள் கேவலப்படுத்தி விடாதீர்கள். நான் உங்களுக்காக கவ்ஸர் நீர் தடாகத்திற்கு அருகில் உட்கார்ந்திருப்பேன்.
                                                                                         (மஜ்மவுஸ் ஸவாயிது 271.3)

மக்களே! எனக்குப்பின் எந்த ஒர் இறைத்தூதரும் இல்லை; உங்களுக்குப்பின் எந்த ஒரு சமுதாயமும் இல்லை.
(ளிலாலுஸ் ஜன்னா 1061)

இங்கு வந்திருப்பவர்கள்> வராதவர்களுக்கு இந்த வழிகாட்டல்களை எடுத்துச் சொல்லட்டும்; விஷயம் சென்று சேருபவர்களில் சிலர்> நேரடியாக கேட்பவரைவிட நன்கு ஆராயும் தன்மை உடையவராக இருக்கலாம்.
(ஸஹீஹ{ல் புகாரி 67>105>1741)

பிறகு நபி (ஸல்) அவர்கள் மக்களை நோக்கி> 'மறுமை நாளில் உங்களிடம் என்னைப் பற்றி விசாரிக்கப்படும்போது நீங்கள் என்ன சொல்வீர்கள்?'' என்று கேட்டார்கள். அதற்கு மக்கள்> 'நீங்கள் (மார்க்க போதனைகள் அனைத்தையும் எங்களிடம்) தெரிவித்து விட்டீர்கள்; (உங்களது தூதுத்துவப் பொறுப்பை) நீங்கள் நிறைவேற்றி விட்டீர்கள்; (சமுதாயத்திற்கு) நன்மையை நாடினீர்கள் என நாங்கள் சாட்சியம் அளிப்போம்'' என்றார்கள்.

உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்> தமது ஆட்காட்டி விரலை வானை நோக்கி உயர்த்தி சைகை செய்துவிட்டுப் பிறகு> அதை மக்களை நோக்கித் தாழ்த்தி 'இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி!'' என்று முடித்தார்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம் 2334)

இவ்வாறு அவர்கள் கூறிய அதே இடத்தில் அல்லாஹ்வின் புறத்திலிருந்து கீழ் வருமாறு இறைவசனம் இறங்கியது:

இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்; மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்; (அங்கீகரித்துக் கொண்டேன்.)''
 (உலகப் பொது மறை அல்குர்அன் 5:3)

(ஸஹீஹ{ல் புகாரி 4406> 4407> முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா>தாரீக் இப்னு ஜரீர்> தாரீக் இப்னு கஸீர்> அத்துர்ருல் மன்ஸுர்)