Thursday 31 March 2011

உங்களுக்கு உற்ற நண்பர்கள் (BEST FRIENDS) யார் யார்?

நிச்சயமாக உங்களுக்கு உற்ற நண்பர்கள்: அல்லாஹ்வும், அவனுடைய தூதரும்; எவர் ஈமான் கொண்டு, தொழுகையை கடைபிடித்து, ஜகாத்தும் கொடுத்து, (அல்லாஹ்வின் கட்டளைக்கு எந்நேரமும்) தலைசாய்த்தும் வருகிறார்களோ அவர்கள்தாம்.
(உலகப் பொதுமறை அல்-குர்ஆன்5:55)

முஃமினான ஆண்களும், முஃமினான பெண்களும் ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாக இருக்கின்றனர்; அவர்கள் நல்லதைச் செய்ய தூண்டுகிறார்கள்; தீயதை விட்டும் விலக்குகிறார்கள்; தொழுகையைக் கடைப்பிடிக்கிறார்கள்; (ஏழை வரியாகிய) ஜகாத்தை (முறையாகக்) கொடுத்துவருகிறார்கள்; அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் வழிப் படுகிறார்கள்; அவர்களுக்கு அல்லாஹ் சீக்கிரத்தில் கருணை புரிவான் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.

(உலகப் பொதுமறை அல்-குர்ஆன்9:71)

ஈமான் கொண்டவர்களே! எனக்கு விரோதியாகவும், உங்களுக்கு விரோதியாகவும் இருப்பவர்களைப் பிரியத்தின் காரணத்தால் இரகசியச் செய்திகளை எடுத்துக் காட்டும் உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்; (ஏனெனில்) உங்களிடம் வந்துள்ள சத்திய (வேத)த்தை அவர்கள் நிராகரிக்கிறார்கள்; நீங்கள் உங்கள் இறைவனான அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டதற்காக, இத்தூதரையும், உங்களையும் வெளியேற்றுகிறார்கள்; என் பாதையில் போரிடுவதற்காகவும், என் பொருத்தத்தை நாடியும் நீங்கள் புறப்பட்டிருந்தால் (அவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்; அப்போது) நீங்கள் பிரியத்தால் அவர்களிடத்தில் இரகசியத்தை வெளிப்படுத்தி விடுகிறீர்கள்; ஆனால், நீங்கள் மறைத்துவைப்பதையும், நீங்கள் வெளிப்படுத்துவதையும் நான் நன்கு அறிந்தவன். மேலும், உங்களிலிருந்தும் எவர் இதைச் செய்கிறாரோ அவர் நேர்வழியை திட்டமாக தவற விட்டுவிட்டார்.

(உலகப் பொதுமறை அல்-குர்ஆன்60:1)

இவர்கள் முஃமின்களை விட்டும் காஃபிர்களை (தங்களுக்குரிய) உற்ற நண்பர்களாக எடுத்துக்கொள்கிறார்கள். என்ன! அவர்களிடையே இவர்கள் கண்ணியத்தை தேடுகிறார்களா? நிச்சயமாக கண்ணியமெல்லாம் அல்லாஹ்வுக்கே உரியது.
(உலகப் பொதுமறை அல்-குர்ஆன்4:139)

முஃமின்களே! நீங்கள் முஃமின்களை விடுத்து காஃபிர்களை (உங்களுக்கு உற்ற) நண்பர்களாய் ஆக்கிக் கொள்ளாதீர்கள்; உங்களுக்கே எதிராக நீங்கள் ஒரு தெளிவான ஆதாரத்தை அல்லாஹ்வுக்கு ஆக்கித் தர விரும்புகிறீர்களா?
 (உலகப் பொதுமறை அல்-குர்ஆன்4:144)

(நபியே!) அவர்களில் அநேகர் காஃபிர்களையே உற்ற நண்பர்களாகக் கொண்டிருப்பதை நீர் காண்பீர்; அவர்கள் தமக்காக முற்கூட்டியே அனுப்பிவைத்தது நிச்சயமாக கெட்டதேயாகும்; ஏனெனில் அல்லாஹ்வின் கோபம் அவர்கள் மீதுள்ளது; மேலும் வேதனையில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்.

(உலகப் பொதுமறை அல்-குர்ஆன்5:80)
அவர்கள் அல்லாஹ்வின் மீதும் நபியின் மீதும், அவர் மீது இறக்கப்பட்ட (வேதத்)தின் மீதும் நம்பிக்கை கொண்டிருந்தார்களானால், அவர்கள், காஃபிர்களைத் (தங்களின்) உற்ற நண்பர்களாக ஆக்கிக் கொண்டிருக்க மாட்டார்கள்; ஆனால் அவர்களில் அநேகர் பாவிகளாகவே இருக்கின்றனர்.

(உலகப் பொதுமறை அல்-குர்ஆன்5:81)

முஃமின்கள் (தங்களைப் போன்ற) முஃமின்களையன்றி காஃபிர்களைத் தம் உற்ற துணைவர்களாக எடுத்துக்கொள்ள வேண்டாம்; அவர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அன்றி (உங்களில்) எவரேனும் அப்படிச் செய்தால், (அவருக்கு) அல்லாஹ்விடத்தில் எவ்விஷயத்திலும் சம்பந்தம் இல்லை; இன்னும், அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களை எச்சரிக்கின்றான்; மேலும், அல்லாஹ்விடமே (நீங்கள்) மீள வேண்டியதிருக்கிறது.

(உலகப் பொதுமறை அல்-குர்ஆன்3:28)

அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடம் (சாந்தியும்) சமாதானமுமுள்ள வீடு(சுவர்க்கம்) உண்டு - அவர்கள் செய்த (நன்மைகளின்) காரணமாக அவன் அவர்களுடைய உற்ற நேசனாகவும் இருக்கிறான்.

(உலகப் பொதுமறை அல்-குர்ஆன்6:127)

நிச்சயமாக எவர் ஈமான் கொண்டு, தம் ஊரைவிட்டு வெளியேறி, தம் செல்வங்களையும், உயிர்களையும் அல்லாஹ்வின் பாதையில் தியாகம் செய்தார்களோ, அவர்களும்; எவர் இத்தகையோருக்குப் புகலிடம் கொடுத்து உதவியும் செய்தார்களோ, அவர்களும்; ஒருவருக்கொருவர் உற்ற நண்பர்கள் ஆவார்கள்.

(உலகப் பொதுமறை அல்-குர்ஆன்8:72)

பயபக்தியுடையவர்களைத் தவிர, நண்பர்கள் அந்நாளில் (கியாம நாளில்) சிலருக்குச் சிலர் பகைவர்கள் ஆகிவிடுவார்கள். 
(உலகப் பொதுமறை அல்-குர்ஆன்43:67)


 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நிழலே இல்லாத நாளான மறுமை நாளில் அல்லாஹ் தம் அர்ஷின்  நிழல் ஏழு பேர்களுக்கு அளிக்கிறான்.
அவர்கள்;
01. நீதியை நிலை நாட்டும் தலைவர்,
02. அல்லாஹ்வின் வணக்க வழிபாட்டில் ஊறிய இளைஞர்,
03.  பள்ளி வாசல்களுடன் தம் உள்ளத்தைத் தொடர்பு படுத்திய ஒருவர்,
04. அல்லாஹ்விற்காகவே இணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிகிற இரண்டு நண்பர்கள்,
05.  உயர் அந்தஸ்திலுள்ள அழகான ஒரு பெண் தவறான வழிக்குத் தம்மை அழைக்கிறபோது, 'நான் அல்லாஹ்வை அஞ்சுகிறேன்' என்று சொல்லும் மனிதர்,
06.  தம் வலக்கரம் செய்யும் தர்மத்தை இடக்கரம் அறியாதவாறு இரகசியமாகச் செய்பவர்,
07.  தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்துக் கண்ணீர் சிந்துபவர்'
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி) .
நூல் : புகாரி 660.



Tuesday 22 March 2011

சீரழிக்கும் சினிமா

இன்றைய மனித சமுதாயத்தை, குறிப்பாக இளைஞர்களை சீரழித்துக் கொண்டிருப்பதில் சினிமா எவ்வளவு பெரிய பங்கு வகிக்கின்றது என்பது நாடறிந்த உண்மை.

காசுக்காக வேஷம் போடுகின்ற ஒரு கலைதான் சினிமா.

அதில் எல்லாமே போலியானது.
எதார்தத்திற்கு நேர்மாற்றமானது.

ஒரு படத்தில் ஒரு நபருக்குத் தாயாக நடிக்கும் ஒரு பெண் இன்னொரு படத்தில் மனைவியாகவும், வேறு ஒரு படத்தில் தங்கையாகவும் நடிக்கின்ற காட்சிகளைத்தான் அதிகமாகப் பார்க்க முடிகின்றது.


ஆபாசக் காட்சிகள் இல்லாத படம் எடுபடாது என்று கூறுமளவிற்கு எல்லாப் படங்களிலும் ஆபாசம் தலவிரித்தாடுகிறது.

பெண்களின் தொப்புளுக்குக் கீழே திறந்த வண்ணம் காட்சிகள். மார்பகங்களை அறைகுறையாகக் காட்டினால்தான் ரசிகர்களை கவர முடியும் என்ற நிலை. உடலைக் குலுக்கி குலுக்கிக் காட்டுவதிலும் அதைப் பார்த்து ரசிப்பதிலும் இளைஞர்களுக்கு எத்தனை குஷி. இதில் கிழவர்களும் விதிவிலக்கல்ல. முத்தக் காட்சிகள், கற்பழிப்புக் காட்சிகள் சினிமாவில் தலைவிரித்தாடுகின்றன.


கணவன் மனைவி தனி அறையில் செய்ய வேண்டியவற்றை லட்சக்கணக்கான மக்கள் பார்த்து ரசிக்கக் காட்டுகின்ற கேவலமான நிலை இன்றைய சினிமாக்களில் காட்டப்படுகின்றது.


ஆபாசம் கூடாது என்று சொல்லும் அரசாங்கம் சினிமாவில் ஆபாசத்தைத் திறந்து விட்டிருக்கிறது. இதையெல்லாம் பார்க்கின்ற இளைஞர்கள் ஏன் ஈவ்டீஸிங்கில் ஈடுபடமாட்டார்களா?

சீரழிவதற்குண்டான எல்லா வாசல்களையும் அரசாங்கம் திறந்து விட்டு விட்டு, இளைஞர்களை சீரழியும் போது அவர்களைத் தண்டிப்பது என்பது புத்திக்குப் பொருந்தாத செயல் அல்லவா?

அடிதடி, வெட்டு, குத்து, வன்முறைக் காட்சிகளை கற்பனையாக சித்தரித்து சினிமாவில் காட்டி விட்டு அதன் மூலம் கோடிகளை சுருட்டி விட்டு சுகமாக இருந்து விடுகின்றனர் தாயாரிப்பாளர்களும், ஸ்டார்கள் என்னும் நடிகர்களும்.


அயாராது அன்றாடம் உழைத்த காசைக் கொண்டு இந்த காட்சிகளைப் பார்க்கின்ற அப்பாவிகள் பயங்கரவாதச் செயலுக்கு இதன் மூலம் பயிற்சி எடுக்கின்றனர்.

வெளியே அதைச் செயல்படுத்தியும் காட்டுகின்றனர். துப்பாக்கியால் எப்படிச் சுட வேண்டும்? வெடி வீசி எப்படித் தாக்க வேண்டும்? தீ வைத்து எப்படிக் கொளுத்த வேண்டும்? இது போன்ற எல்லா வன்முறைகளையும் சினிமாவில் அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றனர். +

இந்த வன்முறைக் காட்சிகளுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கி விட்டு வெளியிலே யாராவது அது போன்று செய்து விட்டால் அதைப் பயங்கரவாதமாகச் சித்தரித்து சட்டங்களைக் கெடுபிடியாக்குகின்றது.


பொது இடங்களில் புகைப்பிடித்தல் கூடாது என்பது அரசாங்கத்தின் சட்டம். ஆனால் சினிமாவிலோ சர்வசாதரணமாக புகைப்பிடிப்பது காட்டப்படுகிறது.

சிகரெட்டை பிடிக்கின்ற ஸ்டைலே தனி. இதையெல்லாம் பார்க்கின்ற இளைஞர்கள் அதைப் போன்று செய்து சீரழிந்து கொண்டிருக்கின்றனர்.


சினிமா நடிகர்களின் கட்அவுட்டுகளுக்கு பால் அபிஷேகம் செய்யக் கூடிய அளவிற்கு இன்று இளைஞர்கள் பைத்தியம் பிடித்து அலைகின்றனர்.

அழிவிற்கு அழைத்துச் செல்லும், எதார்த்தத்திற்கு மாற்றமான நடிப்புக் காட்சிகளைக் கொண்ட சினிமாவின் முதல் இரவு காட்சிகளைக் காண்பது ஏதோ சொர்க்கலோகத்திற்கு உள்ளே சென்று விட்டது போன்ற எண்ணத்தை இளைஞர்களின் உள்ளங்களிலும் உருவாக்கி விடுகிறது.


சினிமாவிலே போலி வேஷங்கள் போட்டு வயிற்றுப் பிழைப்பு நடத்திக் கொண்டிருப்பவர்களை ஏதோ பெரிய சாதனை புரிந்து விட்டது போன்றும் கடவுளின் அவதாரம் போன்றும் சித்தரிக்கின்ற அவலநிலை நாடு முழுக்கத் தலைவிரித்தாடுகிறது. அரசாங்கத்தினுடைய முழு அரவணைப்போடு இவையெல்லாம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

காரணம் ஆட்சிக் கட்டிலிலே இருப்பவர்களும் ஒரு காலத்தில் சினிமாவில் ஆட்டம் போட்டவர்கள் தானே. நாட்டு மக்களிடையே ஒழுக்க வீழ்ச்சிக்கும், சமுதாய சீர்கேடுகளுக்கும், பயங்கரவாதம் பரவுவதற்கும் முழுக் காரணம் சீரழிக்கும் சினிமா தான். இந்த சினிமா ஒழிந்தால் தான் நாட்டு மக்கள் சுபீட்சமாக வாழ முடியும்.

குர்ஆன் கூறும் மறுமை வாழ்வு

பூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும் போது, உம்முடைய இறைவனும், வானவரும் அணியணியாக வரும்போது, அந்நாளில் நரகம் முன் கொண்டு வரப்படும் போது - அந்நாளில் மனிதன் உணர்வு பெறுவான். அந்த (நாளில்) உணர்வு (பெறுவதினால்) அவனுக்கு என்ன பலன்.

 ''என் (மறுமை) வாழ்க்கைக்காக நன்மையை நான் முற்படுத்தி (அனுப்பி)யிருக்க வெண்டுமே!'' என்று அப்போது மனிதன் கூறுவான்.

ஆனால் அந்நாளில் (அல்லாஹ் செய்யும்) வேதனையைப் போல், வேறு எவனும் வேதனை செய்யமாட்டார்கள். மேலும், அவன் அன்பு காட்டுவது போல் வேறு எவனும் அன்பு காட்டமாட்டார்கள்.

(ஆனால், அந்நாளில் நல்லடியார்களிடம்) சாந்தியடைந்த ஆத்மாவே! நீ உன்னுடைய இறைவன்பால் திருப்தி அடைந்த நிலையிலும், (அவன்) உன்மீது திருப்தியடைந்த நிலையிலும் மீளுவாயாக. நீ என் நல்லடியார்களில் சேர்ந்து கொள்வாயாக. மேலும், நீ என் சுவர்க்கத்தில் பிரவேசிப்பாயாக (என்று இறைவன் கூறுவான்).
என்று அல்லாஹ் (உலகப் பொது மறை அல்- குரஆன்89:21-30 வது வசனங்களில்) கூறியுள்ளான்.


நாம் நமது வாழ்க்கையின் லட்சியம் என்னவென்று புரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.


பேருந்து நிலையத்தில் பல பேருந்துகள், வாகனங்கள் நிற்கின்றன. ஆனால் ஒரேயொரு பேருந்தில் மட்டுமே நாம் முண்டியடித்துக் கொண்டு ஏறுகிறோம். சில பேருந்துகளில் இருக்கைகள் காலியாக இருந்தும் நாம் ஏறுவதில்லை. ஏன்? நாம் போய்ச் சேர வேண்டிய இடத்திற்குச் செல்லும் பேருந்து அது தான். அதனால் தான் கம்பியைப் பிடித்துக் கொண்டு நின்றாகிலும், தொங்கிக் கொண்டாகிலும் அந்தப் பேருந்தில் ஏறிப் பயணம் செய்கின்றோம். அது போன்றே நமது இவ்வுலக வாழ்வின் இலட்சியம் மறுமையாகும். அதற்காக நாம் முயல வேண்டுமே தவிர வேறு நோக்கங்களுக்காக முயற்சி செய்யக் கூடாது.



இலட்சியம் இல்லாமல் வாழ்வதால் பலர் இரயில்கள் முன்பாய்ந்து தூக்குக் கயிற்றில் தொங்கி உயிரை மாய்த்துக் கொள்வதைப் பார்க்கிறோம்.


திட்டமாக மனிதன் மீது அவன் குறிப்பிடத்தக்கதொரு பொருளாகவே இல்லாதிருந்த ஒரு கால கட்டம் செல்லவில்லையா?


திட்டமாக மனிதன் மீது காலத்தில் ஒரு நேரம் வந்து, அதில் அவன் இன்ன பொருள் என்று குறிப்பிட்டுக் கூறுவற்கில்லாத நிலையில் இருக்கவில்லையா?

பின்னர் ஆண், பெண்) கலப்பான இந்திரியத்துளியிலிருந்து நிச்சயமாக மனிதனை நாமே படைத்தோம் - அவனை நாம் சோதிப்பதற்காக் அவனைக் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம். நிச்சயமாக, நாம் அவனுக்கு வழியைக் காண்பித்தோம்.

(அதைப் பின்பற்றி) நன்றி உள்ளவனாக இருக்கின்றான். அல்லது (அதைப்புறக்கணித்து) நன்றியற்றவனாக இருக்கின்றான்.

(உலகப் பொது மறை அல்- குரஆன்76:1-3)


நாம் 30,40 வருடங்களுக்கு முன் இவ்வுலகில் இல்லை. மனிதனின் வாழ்க்கைப் பயணம் இல்லாமையிலிருந்து ஆரம்பமாகிறது. தாயும் தந்தையும் இணைவதால் புதிய சிருஷ்டி உண்டாகிறது. கண், காது, முகம் ஆகிய அழகிய உடலமைப்புடன் மனிதனாகிய நாம் பிறக்கிறோம்.

இல்லாமையிலிருந்து படைத்து, காது, கண், போன்ற அழகிய உடலமைப்பைத் தந்த வல்ல ரஹ்மானுக்கு மீண்டும் ஒரு முறை மறுமையில் உயிர் கொடுப்பது மிக எளிதானதே.

இறைவனையும் மறுமையையம் நிராகரிப்பவர்கள் பற்றிக் கூறும் போது,

நிராகரிப்பவர்களோ (இவ்வுலக சுகங்களை) அனுபவித்துக் கொண்டும், மிருகங்கள் தீனி திண்பது போல தின்று கொண்டும் இருக்கிறார்கள். (நரக) நெருப்பே இவர்கள் தங்கும் இடமாக இருக்கும். என்று உலகப் பொது மறை அல்- குரஆன்47:12 வது வசனத்தில் அல்லாஹ் கூறியுள்ளான்.


நமது வாழ்வின்இலட்சியம் உண்டு. தின்று சுகம் அனுபவிப்பது மட்டுமல்ல.
நாம் உங்களைப் படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள் நம்மிடத்தில் நிச்சயமாக மீட்டப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டீர்களா? (உலகப் பொது மறை அல்குர்ஆன் : 23:115)
என்று இறைவன் கூறுகின்றான்.


நாம் இறந்து விட்டால் 6 அடி நிலத்தில் புதைத்து விடுகின்றனர். பின்னர் மீண்டும் நாம் மறுமையில் எழுப்பப்படுவோம்.

பரிசுத்த குர்ஆனில் தூக்கத்தைப்  மரணம் என்றே அல்லாஹ் குறிப்பிடுகின்றான். தூக்கத்திலிரந்து விழித்தெழுவதை மரணமடைந்து விழித்தெழுப்பப்படுவது போலக் கூறியுள்ளான்.


அல்லாஹ், உயிர்களை அவை மரணிக்கும் போதும், மரணிக்காதவற்றை அவற்றின் நித்திரையிலும் கைப்பற்றி, பின்பு எதன் மீது மரணத்தை விதித்துவிட்டானோ அதை(த் தன்னிடத்தில்) நிறுத்திக் கொள்கிறான். மீதியுள்ளவற்றை ஒரு குறிப்பிட்ட தவணை வரை (வாழ்வதற்காக) அனுப்பி விடுகிறான் - சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு, நிச்சயமாக அதில் அத்தாட்சிகள் இருக்கினறன.

(உலகப் பொது மறை அல்குர்ஆன் 39:42)

அதனால் தான் தூங்கும் போது,

அல்லாஹும்மா பிஸ்மி(க்)க  அமூ(த்)து வாஹிய அல்லது
பிஸ்மிகல்லாஹும்ம அஹ்யா வ அமூத்து
பொருள் : இறைவனின் பெயர் கொண்டு உயிர் பெற்ற (தூக்கம் என்ற) மரணத்துக்குத் தயாராகின்றேன் என்றும்,

தூக்கத்திலிருந்து விழித்தெழும் போது,

அல்ஹம்துலில்லாஹில்லதீ அஹ்யானா பஃதமா அமாதனா வ இலைஹின்னஷூர்
பொருள் : எங்களை மரணமடையச் செய்த பின் விழித்தெழச் செய்த அந்த அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரியது. அவனிடமே நமது மீளுதல் இருக்கிறது

(ஆதாரம் : புகாரீ, அபூதாவூத் 5049, திர்மிதீ 3413)

என்றும் கூறுகிறோம்.


மறுமை நாளைப் பற்றி அல்லாஹ் தனது பரிசுத்தக் குர்ஆனில் பல இடங்களில் கூறியுள்ளான்.

(தடுத்து நிறுத்த முடியாத) மறுமைப் பேரமளி வந்து விட்டால்
(உலகப் பொது மறை அல்குர்ஆன் 79:34)

என்றும்,

ஆகவே (யுக முடிவின் போது) காதைச் செவிடாக்கும் பெரும் சப்தம் வரும் போது
(உலகப் பொது மறை அல்குர்ஆன் 80:33)

என்றும்,
வானம் பிளந்து விடும்போது- நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்போது- கடல்கள் (பொங்கி ஒன்றால் ஒன்று) அகற்றப்படும் போது, கப்றுகள் திறக்கப்படும் போது, ஒவ்வோர் ஆத்மாவும், அது எதை முற்படுத்தி (அனுப்பி) வைத்தது, எதைப் பின்னே விட்டுச் சென்றது என்பதை அறிந்து கொள்ளும்.
(உலகப் பொது மறை அல்குர்ஆன் 82:1-5)

மனிதர்களே! நீங்கள் உங்களுடைய இறைவனை பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக (கியாமத்து நாளாகிய) அவ்வேளையின் அதிர்ச்சி, மகத்தான பெரும் நிகழ்ச்சியாகும். அந்நாளில், பாலூட்டிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தாயும் தான் பாலூட்டும் குழந்தையை மறந்து விடுவதையும், ஒவ்வொரு கர்ப்பிணியும் தன் சுமையை ஈன்று விடுவதையும் நீங்கள் காண்பீர்கள். மேலும், மனிதர்களை மதி மயங்கியவர்களாக இருக்க காண்பீர். எனினும் (அது மதுவினால் ஏற்பட்ட) மதி மயக்கமல்ல் ஆனால் அல்லாஹ்வின் வேதனை மிகக் கடுமையானதாகும்.
 (உலகப் பொது மறை அல்குர்ஆன் 22:1 &2)
என்றும்,

மறுமை நாளில் சிதறடிக்கப்பட்ட ஈசல்களைப் போன்று மனிதர்கள் ஆகிவிடுவார்கள். மேலும் மலைகள் கொட்டப்பட்ட பஞ்சைப் போன்று ஆகிவிடும்.
(உலகப் பொது மறை அல்குர்ஆன் 101:4 & 5)
என்றும் மறுமையின் அமளிகள் திடுக்கங்கள் பற்றி அல்லாஹ் கூறியுள்ளான்.


மேலும் அந்த நரகத்தைக் கடக்காமல் உங்களில் யாரும் (சுவர்க்கம்) போக முடியாது. இது உம்முடைய இறைவனின் தீர்மானமாகும். அதன் பின்னர் இறைபக்தியுடன் இருந்தார்களே அவர்களை நாம் (அந்நரகத்திலிருந்து) ஈடேற்றுவோம். ஆனால் அநியாயம் செய்தவர்களை அந்த நரகத்தில் முழந்தாளிட்டவர்களாக விட்டு விடுவோம்.
என்று
(உலகப் பொது மறை அல்குர்ஆன் 19:71&72 )
வது வசனங்களில்) அல்லாஹ் கூறுகின்றான்.

இம்மையில் நாம் இறைவனுக்கு இணைவைத்திருந்தால் நமது நல்லறங்கள் யாவும் மறுமையில் பயனற்றுப் போய்விடும். பத்து பள்ளிகள் கட்டுவதற்கு உதவி செய்திருந்தாலும், இரவு கால்கடுக்க நின்று வணங்கியிருந்தாலும் ஏராளமான அறப்பணிகள் செய்திருந்தாலும் இறைவனுக்கு இணை வைத்த நிலையில் இவற்றைச் செய்திருந்தால் இந்த நல்ல பணிகளுக்கு எவ்விதக் கூலியும் கிடைக்காது.

எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை வைத்து விட்டானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கி விட்டான். மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும். அக்கிரமக்காரர்களுக்கு உதவி புரிபவர் எவருமில்லை. என்று அல்லாஹ்
(உலகப் பொது மறை அல்குர்ஆன் 5:72 வது வசனத்தில்)
கூறியுள்ளான்.

பத்ரீன்களே! என்று ஒருவன் கஷ்டகாலத்தில் அழைத்தால் யா முஹ்யித்தீனே! என்று அழைத்திருந்தால், 25 பைசா தர்ஹாக்களுக்க நேர்ச்சை செய்திருந்தாலும் அவன் இறைவனுக்கு இணை வைத்தவனாக ஆகி விடுகின்றான். அவனது நல்லறங்கள் எல்லாம் பாழாகி விடுகின்றன.


நபி (ஸல்) அவாகள் காட்டித் தராத பித்அத் களையும் விட்டொழிக்க வேண்டும். பித்அத்துகள் அனைத்தும் வழிகேடுகள். அனைத்தும் (அதைச் செய்பவனை) நரகில் கொண்டு சேர்த்து விடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(முஸ்லிம் 867, நஸயீ)

ஆக இணைவைத்தலும் பித்அத்துகள் என புதுமைகளும் மனிதனை நிரந்தர நரகில்தள்ளி விடும். எனவே அவற்றை நாம் விட்டு விலகி அல்குர்ஆன், நபிவழிப்படி வாழ வேண்டும். நரகம், மிகக் கொடிய தங்குமிடம் ஆகும். நரகில் வேதனை, அதில் கிடைக்கும் தண்டனை பற்றிக் குறிப்பிடும் போது,

நிச்சயமாக அது மஞ்சள் நிறமுள்ள ஒட்டகைகள் போல இருக்கும்.
என்று நரகத்தின் நெருப்பை (அல்லாஹ் உலகப் பொது மறை அல்குர்ஆன் 77:33 வது வசனத்தில்) வர்ணிக்கின்றான்.

மேலும்,
நரகவாசிகள் தோல்கருகிவிடும் போதெல்லாம் அவையல்லாத வேறு தோல்களை அவர்கள் வேதனையைப் பூரணமாக அனுபவிப்பதற்கென அவர்களுக்கு மாற்றிக் கொண்டே இருப்போம்.
(உலகப் பொது மறை அல்குர்ஆன் 4:56)

என்றும்,

நரகவாசிகளின் ஆடைகள் தார் (கீல் எண்ணையினால்) ஆனவையாக இருக்கும். இன்னும் அவர்களுடைய முகங்களை நெருப்பு மூடி இருக்கும்.
(உலகப் பொது மறை அல்குர்ஆன் 14:50)
என்றும்,

நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது வரம்பு மீறியவர்களுக்குத் தங்குமிடமாக, அதில் அவர்கள் பலயுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில் அவர்கள் அதில் குளிர்ச்சியையோ சுவைக்க மாட்டார்கள். கொதிக்கும் நீரையும், சீழையும் தவிர (அது தான் அவர்களுக்குத்) தக்க கூலியாகும்.
 (உலகப் பொது மறை அல்குர்ஆன் 78:21-26)

என்றும்,
அதை அவன் (சிரமத்தோடு) சிறிது சிறிதாக விழுங்குவான். எனினும் அது அவன் தொண்டையில் எளிதில் இறங்காது. ஒவ்வொரு திசையிலிருந்தும் அவனுக்கு மரணம் வந்து கொண்டிருக்கும். எனினும் அவன் இறந்து விடுபவனும் அல்லன். அன்றியும் அவன் முன்னே (மிகக்) கொடிய வேதனையும் உண்டு.
(உலகப் பொது மறை அல்குர்ஆன் 14:17)

என்றும் நரக வேதனைகள் பற்றி அல்லாஹ் கூறியுள்ளான். எனவே,


எங்கள் இறைவனே! நீ எவரை நரக நெருப்பில் புகுத்துகின்றாயோ அவரை நிச்சயமாக நீ இழிவுபடுத்தி விடடாய். மேலும் அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவருமிலர்.
(உலகப் பொது மறை அல்குர்ஆன் 3:192)
என்று நல்லறிவுடைய நல்லோர் கூறுவர் என்றும் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

இறைவா! மறுமையில் எங்களை நரக நெருப்பிலிருந்து பாதுகாத்து உனது சொர்க்கத்தில் எங்களைப் புகச் செய்வாயாக! ஆமீன்!!

இறைவன் மனித சாயலா?

இறைவனுக்கு உருவம் கற்பிக்க மனிதனுக்கு இயலுமா என்பதை இத்தனை நூற்றாண்டுகள் ஆன பின்பும் மண்ணாய் போகும் மனிதன் சிந்திக்கவில்லை.

இதோ வானம் எனது சிங்காசனம், பூமி என் பாதப்படியாக இருக்கிறது எனக்கு எப்படிப்பட்ட ஆலயம் கட்டுவீர்கள் எனவும் ஏசாயா 66:1-2 ல் கர்த்தர் கூறுவதை காணலாம்.


அந்த கர்த்தருக்கும், ஏசுநாதருக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் கண்ணிருந்தும் குருடராய், காதிருந்தும் செவிடராய் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.


இறைவன் மனிதனை தனது சாயலாகப் படைத்தான் என்பது தான் குறிப்பாக கிறிஸ்த்தவர்களின் நம்பிக்கை.

இந்த நம்பிக்கைக்குக் காரணம் ஆதியாகமம் 1:26-27 ல் தேவன் தமது சாயலாகவும், அவன் உருவத்தின் படியேயும் மனிதனைப் படைத்ததாக எழுதப்பட்டுள்ளது. தேவ சாயலாகவே மனிதனை ஆணும் பெண்ணுமாகப் படைத்த காரணத்தால் இறைவனும் மனித உருவில் பிறந்தான் என்று நம்புகிறார்கள்.


இயேசுநாதர் இறைவனாகவும், இறைமகனாக,  இறை அவதாரமாக வந்தார் என்றும், மனித சாயலிலே வந்தார் என்பதும் அறிவுள்ள மக்களுக்கு இன்றும் புரியாத புதிராகவே இருக்கிறது.

 முதலில் இறைவன் மனிதத் தன்மை உடையவனா என்றால் அல்ல என்றே சொல்லும் கிறிஸ்தவர்கள் இயேசுநாதர் இரண்டு தன்மைகைளையும் உடையவராக இருந்தார் என்று தர்க்கமும் செய்கிறார்கள்.


ஆனால் அதே பைபிளில் ஏசாயா 40:18 ல் என்னை யாருக்கு ஒப்பிடுவீர்கள்? எந்த சாயலை எனக்கு ஒப்பாக்குவீர்கள் என்று கர்த்தரே கேட்கும் போது நாம் எப்படி மனித சாயலுக்கு சமமாக்க முடியும்?


மீண்டும் ஏசாயா 40:25 ல் என்னை யாருக்கு நிகர் ஆக்குவீர்கள்? என்று இரண்டாம் முறையும் கேட்கும் போது, அறிவுள்ள எவரும் இறைவன் மனித சாயல் அல்ல என்பதை நன்கு விளங்கிக் கொள்வார்கள்.


இறைவனுக்கு மகன் இருந்தால் அம்மகன் இறைவனின் சாயல், மற்றும் தன்மைகள் பெற்றிருக்க வேண்டும். இறைவனுக்கு இரண்டு கை, இரண்டு கால், இருந்தால் அவனும் மனித சாயல் என்றே கொள்ள முடியும். இறைவன் உணவு உண்பார் என்றால் மகனும் உண்பார். இறைவன் தூங்கினால் மகனும் தூங்குவார்.

இறைவனுக்கு மனித குணங்கள் தன்மைகள் இல்லாதிருக்கும் போது, இயேசு நாதர் கடவுளானால் அந்தத் தன்மைகள் அவருக்கும் இருந்தாக வேண்டும்.


ஆனால், இயேசுநாதர் உணவு உண்டார், தூங்கினார் எனவே அவரிடம் இறைத்தன்மை இல்லை என்றே கொள்ளலாம்.

 ஒருவருக்கு மகன் இருந்தால் நிச்சயமாக அவருக்கு மனைவி இருப்பாள்.இறைவனுக்கு மகன் இருந்தால் இறைவனுக்க மனைவி இருந்தாக வேண்டும். இறைவனுக்க மனைவி தேவையில்லாதிருக்கும் போது மகன் இருக்க முடியாது. எனவே இயேசு நாதர் மரியமின் மகனேயல்லாமல் இறைவனின் மகன் அல்ல.


இதை உண்மைப்படுத்த திருமறைக் குர்ஆன் 6:01 ல் வசனத்தில்,

பூமியையும் முன்மாதிரியின்றிப் படைத்தவன் அவனுக்கு மனைவி இல்லாதிருக்கும் நிலையில் மகன் எப்படி உண்டாக முடியும்? என்று இறைவன் கேட்கிறான்.

மேலும் திருமறைக் குர்ஆன் 5:75 ம் வசனத்தில்

ஏசுநாதர் மர்யாளின் மகனேயாவார். அவர் இறைத்தூதரேயன்றி வேறில்லை. இதற்கு முன் பல தூதர்கள் வந்து சென்று விட்டனர். இவர் தாயார் மிக்க உண்மையானவர். இவ்விருவரும் மற்ற மனிதர்களைப் போல் உணவு உண்பவர்களாய் இருந்தனர்.


எனவே உணவு உண்பவன் இறைவனாக, இறைமகனாக இருக்க முடியாது.

தந்தைக்கு ஒப்பான மகன் என்ற பழமொழி ஏசுநாதருக்கு பொருந்தாது. மேலும் ஏசுநாதர் இறைவனை ஒருவனும் ஒரு நாளும் கண்டதில்லை என யோவான் 1:18 ல் எழுதும் போது

அதே யோவான் 14:9 ல் என்னை கண்டவன் பிதாவைக் கண்டான் என ஏசுநாதர் கூறியதாக எப்படி இருக்க முடியும்?


ஏசுநாதர் மனித உருவில் இருந்தார். ஆனால் அவரை அனுப்பிய இறைவன் ஏசுநாதரின் உருவம் அல்ல என்றிருக்கும் போது ஏசு நாதரைக் கண்டவன் எப்படி பிதாவைக் காண முடியும்? அல்லது நானும் பிதாவும் ஒன்றே என்ற யேசுநாதர் கூறுவாரா?

அப்படிக் கூறினால் அவருக்கு நரகம் தான் என்று இறைவன் தனது திருக் குர்ஆனில் கூறுகிறான்.

இன்னும் அவர்களில் எவரேனம் அவனன்றி நிச்சயமாகக நானும் இறைவன் தான் என்று கூறுவாரேயானால் அ(த்தகைய)வருக்கு நாம் நரகத்தையே கூலியாகக் கொடுப்போம் இவ்வாறே நாம் அநியாயக்காரர்களுக்குக் கூலி கொடுப்போம்.
(திருமறைக் குர்ஆன் 21:29)


இப்படிப்பட்ட நிலையில் ஏசுநாதர் கடவுளின் மகன் அல்லது மனிதன் கடவுளின் சாயல் என்று கூற முடியாது.

பனீஇஸ்ராயீல் மக்கள் செங்கடலைக் கடந்து சென்ற போது சிலைகளை வணங்கும் ஒரு கூட்டத்தாரை கண்டனர். தாங்களும் அதைப் போல் வணங்க நபி மூஸாவிடம் அனுமதி கேட்டனர். ஆனால் அவர் அவர்களை நோக்கி நிச்சயமாக நீங்கள் ஒரு அறிவில்லாத கூட்டத்தாராய் இருக்கிறீர்கள் என்று கூறினார். இந்த செய்தியை குர்ஆன் 7:138 ல் இறைவன் நபிகள் நாயகத்துக்கு எடுத்துரைக்கிறான்.

மேற்கூறிய இறைவசனத்தின்படி மனிதன் இறைவனை எப்படியாவது கண்டு வணங்க வேண்டும் எனத் துடிக்கிறான். அந்த ஆசை அவனை உருவ வழிபாட்டில் கொண்டு போய் விடுகிறது. இறைவனும் இதை பல தடவை கண்டித்தும் மனிதன் திருந்தவே இல்லை

.
வானங்களையும், பூமியையும் படைத்தவன் அவனே. உங்களுக்காக உங்களில் இருந்தே ஜோடிகளையும், கால்நடைகளிலிருந்து ஜோடிகளையும் படைத்து, அதைக் கொண்டு உங்களைப் பல்கிப் பரவச் செய்கிறான். அவனைப் போன்று எப்பொருளும் இலலை. அவன் யாவற்றையும் செவியேற்பவன் பார்ப்பவன்.
 (அல்குர்ஆன் 42:11)

இந்த வசனத்தில் அவனைப் போன்று எப்பொருளும் இல்லை என இறைவனே கூறும் போது அற்ப மனிதன் தன் அறியாமையால் உருவங்களை அமைக்கிறான். விக்ரக வழிபாடு வேசியோடு உள்ள தொடர்பு போன்றது என்று பைபிளில் பல இடங்களில் வருகிறது. இதை அறிந்து கொண்ட பிறகும் கிறிஸ்தவர்களில் ஒரு சாரார் பிதா, குமாரம், தூய ஆவிக்கு உருவம் வரைகிறார்கள். இதைப் பற்றிக் கேட்டால், சிறுபிள்ளைகளுக்குப் புரிய வைப்பதற்காக, இறை அன்பை வளர்ப்பதற்காக என்று சாக்கும் போக்குச் சொல்லி வருகிறார்கள். அவனுக்கு நிகராக எவரும் இல்லை என்று இறைவன் தன்னைப்பற்றிக் கூறும் போது நாம் ஏன் உருவப்படங்கள் வரைய வேண்டும்.


இதோ தண்ணீர்களை தம் கைப்பிடியால் அளந்து, வான்ஙகளை சாண் அளவாய் பிரமாணித்து, பூமியின் மண்ணை மரக்காலில் அடக்கி பர்வதங்களை துலாக் கோலிலும், மலைகளை தாரசிலும் நிறுத்தவர் யார்? என்று கர்த்தர் ஏசாயா 40:12 ல் கேட்கிறார்.


இப்படிப்பட்ட இறைவனுக்கு உருவம் கற்பிக்க மனிதனுக்கு இயலுமா என்பதை இத்தனை நூற்றாண்டுகள் ஆன பின்பும் மண்ணாய் போகும் மனிதன் சிந்திக்கவில்லை.

இதோ வானம் எனது சிங்காசனம், பூமி என் பாதப்படியாக இருக்கிறது எனக்கு எப்படிப்பட்ட ஆலயம் கட்டுவீர்கள் எனவும் ஏசாயா 66:1-2 ல் கர்த்தர் கூறுவதை காணலாம்.


அந்த கர்த்தருக்கும், ஏசுநாதருக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் கண்ணிருந்தும் குருடராய், காதிருந்தும் செவிடராய் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

 ஏனென்றால் இறைவன் தன்னை கண்ணியப்படுத்த நாடுகிறான். இவர்களோ உலக ஆசையால் கவரப்பட்டு அற்புதங்கள், அடையாளங்கள் தேடி அங்கும் இங்கும் ஓடி முடிவில் நம்பிக்கையற்றவர்களாக மாறுவதைக் காணலாம்.


திருமறைக் குர்ஆன் 39:67 ல் அல்லாஹ்வின் கண்ணியத்துக்குத் தக்கவாறு அவர்கள் அவனைக் கண்ணியப்படுத்தவில்லை. இன்னும் இந்த பூமி முழுவதும் மறுமை நாளில் ஒரு பிடிதான். மேலும் வானங்கள் அவன் வலக்கையால் சுருட்டப்படடதாக இருக்கும். அவர்கள் இணைவைப்பதை விட்டும் அவன் மகா தூயவன் என்று கூறுகிறான்.


எனவே இறைவனை எங்கும் பயந்து நடக்க வேண்டும் என்பதற்காகத் தான் முஸ்லிம்கள் உருவம் வைப்பது இல்லை. உருவம் இருந்தால் அது இருக்கும் இடத்தில் மட்டும் தான அச்சம் உண்டாகும். ஆனால் முஸ்லிம்களுக்கு எஙகும் இறைவன் எங்களைப் பார்க்கிறான் என்கிற பயத்தால் பாவத்தை விட்டு விலக வாய்ப்பு ஏற்படுகிறது. மேலும் இறைவன் மனிதன் ஆவதும் இல்லை. மனிதன் இறைவன் ஆவதும் இல்லை. எனவே இதை உணர்ந்து இறைவனுக்கு உருவம் உண்டாக்காமல் இருப்போமாக.


மேலும் இறைவனை, அவன் தன்மையை -திருக் குர்ஆன்னில்

அல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை; அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன்; என்றென்றும் நிலைத்திருப்பவன்; வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன் அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்? (படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான்; அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது. அவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு) வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை - அவன் மிக உயர்ந்தவன்; மகிமை மிக்கவன்.
(திருமறைக் குர்ஆன்2:255)

என்று இறைவன் கூறும் போது சிந்தித்துச் செயல்பட வேண்டும்.

தனிநபர் வழிபாட்டைத் தரைமட்டமாக்குவோம்.

மனிதர்கள் கடவுளர்களாக ஆக்கப்படுவதற்கும் அவர்களுக்குச் சிலைகள் எழுப்பி ஆராதிக்கப் படுவதற்கும் காரணமாக இருந்தது தனிநபர் வழிபாடுதான்.

தன்னைப் போன்று படைக்கப்பட்ட மனிதனை அளவுக்கு அதிகமாக ஆற்றல் இருப்பதாகக் கருதி, அவனை வானளவு புகழ்ந்து தெய்வத் தன்மையைக் கொடுப்பதற்கும் காரணமாக இருந்தது. இந்த தனிநபர் வழிபாடுதான்.


கடந்த கால வரலாறு இதைத்தான் நமக்குப் போதிக்கின்றது.

இறைத்தூதர் நூஹ் (அலை) அவர்களுடைய காலத்தில் வாழ்ந்த மக்கள் சில மனிதர்களின் மீது வரம்பு மீறி மரியாதை வைத்து அவர்கள் இறந்து விட்ட பின்னர் அவர்களுக்கு சிலைகள் வடிவமைத்து அவற்றை வழிபடத் துவங்கினர்.

இதைப் பற்றி அல்லாஹ் கூறும் போது

'மேலும் அவர்கள் அம்மக்களிடத்தில் 'உங்கள் தெய்வங்களை விட்டு விடாதீர்கள், இன்னும் வத்து, ஸுவாவு, யகூஸு, யவூகு, நஸ்ரு ஆகிய விக்கிரகங்களையும் நீங்கள் விட்டு விடாதீர்கள்' என்றும் சொல்கின்றனர். நிச்சயமாக அவர்கள் அநேகமானவர்கள் வழிகெடுத்து விட்டனர். ஆகவே அநியாயக்காரர்களுக்கு வழிகேட்டைத் தவிர வேறு எதையும் நீ அதிகப்படுத்தாதே. (என்று நூஹ் பிரார்த்தித்தார்)

 (அல்குர்ஆன் 71:23,24)

இது கடந்த கால் வரலாறு. ஆனால் தற்கால்த்தில் பெரும்பாலான மனித சமுதாயம் கடவுளாகக் கருதி வணங்கி வருகின்ற சிலைகளின் வரலாறும் இவ்வாறு தான் இருக்கின்றன. சாதாரண மனிதர்களாக வாழ்ந்து மடிந்து போனவர்களை கடவுளர்களாக ஆக்கி வழிபடுகின்றனர். நேற்று வரை நம் கண்முன்னால் வாழ்ந்த எத்தனையோ பேர்கள் இறந்ததின் பின்னால் அவர்களுக்கு சிலை எழுப்பி மாலை அணிவித்து அபிஷேகங்கள் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு கோவில்களும் கட்டப்பட்டுள்ளன.
இப்படிப்பட்ட கேவலமான நிலை இஸ்லாமியர்களிடையே வந்து விடக்கூடாது என்பதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகவும் குறியாக இருந்தார்கள்

.
தமது வாழ்க்கையின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தனிநபர் வழிபாட்டிற்கான அறிகுறிகள் காணப்பட்ட போதெல்லாம் அதை உடனுக்குடன் தடுத்து நிறுத்தியுள்ளார்கள். தமது கடைசி கட்டத்தில் சமுதாயத்திற்கு மிகவும் எச்சரிக்கை விடுக்கும் முகமாக

'கிறிஸ்தவர்கள் மர்யமுடைய மகன் ஈஸாவை வரம்பு மீறி புகழ்ந்ததைப் போன்று என்னையும் வரம்பு மீறி புகழ்ந்து விடாதீர்கள். என்றாலும் என்னை 'அல்லாஹ்வுடைய அடிமை' என்றும் 'அவனுடைய தூதர்' என்றும் கூறுங்கள்' என்று கூறினார்கள்.
(ஆதாரம் : முஸ்லிம் )

நபிகள் நாயகம் (ஸல்) இவ்வாறு கட்டளையிட்டு தனிநபர் வழிபாட்டிற்கு சாவுமணி அடித்தார்கள், தானும் மற்றவர்களைப் போன்று ஒரு மனிதர் தான் என்பதை பிரகடனப் படுத்துமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டான்.


'நிச்சயமாக நான் உங்களைப் போன்ற ஒரு மனிதனே, நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒரே நாயன் தான் என்று எனக்கு இறைச் செய்தி (வஹி) அறிவிக்கப்பட்டுள்ளது. என்று நபியே நீர் கூறுவீராக'

(அலகுர்ஆன் 18:110)


சமுதாயத்தில் அன்று முதல் இன்று வரை உருவெடுத்த எல்லா விதமான பிரிவினைகளுக்கும், குழப்பங்களுக்கும் மூலகாரணமாக இருந்தது தனி நபர் வழிபாடுதான்.

மத்ஹபுகள் தோன்றுவதற்கு முக்கிய காரணம் தனி நபர்கள் மீது கொண்ட பக்திதான்.

அவர் சொன்னல் சரியாகத்தான் இருக்கும் என்ற அளவுக்கு அதிகமாக  நம்பிக்கையும் இதற்கு காரணம். தன்னுடைய கருத்து தான் சரியானது என்பதை நிரூபிப்பதற்கு தன்பக்கம் ஆதரவாளர்களைத் திரட்டுவது, அதற்கு எதிராக இன்னொருவர் தனக்கு ஏற்புடைய கருத்தைக் கூறுவது, அதில் பிடிவாதம் காட்டுவது. அதற்கு சாதகமாக குரல் கொடுக்க ஒரு கூட்டம் உருவாகுவது இப்படித் தான் பிளவு ஏற்பட்டன, என்பதைக் கடந்தகால வரலாறுகள் கூறுகின்றன.


இது போன்ற தனிநபர் வழிபாட்டை முறியடித்துச் சமத்துவச் சமுதாயத்தை உருவாக்கி, குர்ஆன் சுன்னாவின் அடிப்டையில் மக்கள் செயல்படத் தூண்ட வேண்டும்

'வேதத்தையுடையோரே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் வரம்பு மீறிச் செல்லாதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உணமையைத் தவிர வேறெதையும் கூறாதீர்கள்'

(அல்குர்ஆன் 4:171)

Monday 21 March 2011

முஸ்லிம்கள் யார்?

முஸ்லிம்கள் நபி இப்ராஹிமின் மார்க்கத்தைப் பின்பற்றுகிறார்கள்

இது உங்கள் பிதாவாகிய இப்ராஹிமின் மார்க்கம் என்றும், முஸ்லிம்களாக அன்றி மரிக்காதீர்கள் என்றும் வலியுறுத்துவதை முறையே
அல்குர்ஆன் 22:78 லும், அல்குர்ஆன் 3:102 லும் காணலாம்.


அல்லாஹ்வையும், எங்கள்பால் இறக்கப்பட்ட (திருக்குர்ஆன் வேதத்)தையும் இப்ராஹிம், இஸ்மாயில், இஸ்ஹாக், யாகூபு இவர்களுடைய சந்ததிகள் ஆகியயோரின் பால் இறக்கப்படடதையும், மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டிருந்ததையும், மற்றைய நபிமார்களுக்கு அவர்கள் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டிருந்ததையும் நாங்கள் நம்பிக்கை கொள்கிறோம், அவர்களிலிருந்து எவருக்குமிடையில் நாம் வேறுபாடுகாட்டமாட்டோம், இன்னும், அவனுக்கே நாங்கள் முற்றிலும் கீழ்ப்படிகிறவர்கள்' என் (நம்பிக்கை கொண்டோரே) நீங்களும் கூறுங்கள்.
(அல்குர்ஆன் 2:136)


இன்று உலகில் வாழும் பெரும்பான்மையான மக்கள் குறிப்பாக கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், நபி இஸ்மாயிலின் பரம்பரையைச் சார்ந்தவர்கள் என்று மிக மட்டமாக கருதுகிறார்கள். அதாவது இஸ்மாயில் நபி ஆபிரஹாமின் இரண்டாம் மனைவிக்கு பிறந்தவர்கள். ஆனால் முன்காலத்தில் இரண்டாம் மனைவியை முதல் மனைவியின் அடிமை என வர்ணித்து எழுதியமையால் இஸ்மாயில் நபியின் தாயார் யூத, கிறிஸ்தவர்கள் மத்தியில் கண்ணியப்படுத்தப்படுவது இல்லை.


ஆகார் என்ற எகிப்து தேச அடிமை என்று மிகவும் துச்சமாக நபி இப்ராஹிம் அவர்களின் மனைவியை நினைக்கிறார்கள். இதற்குக் காரணம் இஸ்ராயில் மக்களை இறைவன் திருமறையிலும், இதற்கு முன்னால் வழங்கிய வேதங்களிலும் சிறப்பித்துக் கூறுவதேதான்.

எனினும் யூதர்களின் புத்தகமாகிய பழைய ஏற்பாடு யாக்கோபு நபிக்கு 12 புதல்வர்கள் பிறந்தார்கள், இதில் 8 பேர்தான் அவர் மனைவிகளுக்கு பிறந்தவர்கள், 4 பேர் அதாவது காத், தாண், ஆசேர், நவ்தலி ஆகியோர் யாக்கோபு நபியின் வேலைக்காரிகளுக்குப் பிறந்தவர்கள் என்றும் ஆதியாகமம் 30ம் அதிகாரம் கூறுகிறர்.

மேலும் சொத்துகள் கூட வேலைக்காரிகளுக்குப் பிறந்த 4பேருக்கும் மிகவும் வறட்சியான பகுதிகள் கொடுக்ப்பட்டன. தீர், சீதோன், சமாரியா, எருக்கோ என்று அந்தப் பகுதிகள் அழைக்கப்படுகின்றன. சமாரியா நாட்டார் யூதரோடு உறவுகளை ஏற்படுத்தி வாழ்வது இல்லை.

இந்த சமாரியா நாட்டுப் பெண் ஒருத்தியிடம் தான் யேசுநாதர் தண்ணீர் கேட்டார் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

அவள் தீண்டத்தகாதவள் என்று யேசுநாதர் நினைக்காமல் தண்ணீர் கேட்டது அவளை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.


யாக்கோபு நபிக்குப் பிறந்த மக்கள் ரூபன், யூதா, சிமியோன், லேபி, செபுலோன், இசக்கார் ஆகியோர் முதல் மனைவியாகிய லேயாளுக்குப் பிறந்தவர்கள்.

இரண்டாம் மனைவியாகிய ராகேளுக்கு யோசேப்பும், புன்யாமினும் பிறந்தார்கள்.

யாக்கோபு நபியின் மனைவிமார்களின் அடிமைகளாகிய சில்பாள், பில்காள் என்பவர்களுக்குத்தான் முறையே காத், ஆசேர், தாண், நப்தலி பிறந்தார்கள்.

இவர்களைத் தான் பனீஇஸ்லாயீல் கோத்திரத்தார் என்று அபாபிளும், குர்ஆனும் அழைக்கின்றன.

இதில் விசேஷம் என்னவென்றால் நபி இப்ராஹிம் முதலில் பெற்றெடுத்த இஸ்மாயில் அடிமைக்குப் பிறந்ததாகக் காரணம் காட்டி வெறுப்பது எந்த அளவு நியாயம் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

அதாவது 4 அடிமைகள் பனீ இஸ்ராயிலில் ஒட்டி இருக்கும் போது சாரா தன் கணவர் இப்ராஹிம் நபிக்கு மறுமனையாட்டியாய் கொடுத்த பின் அவருடைய மகனை ஓரம்கட்டி ஒதுக்கிப் பேசுவது நியாயம் இல்லை. என்றாலும் ஆதியாகமம் 16:12ல் இஸ்மாயில் நபி (அலை) துஷ்ட மனிதனாய் இருப்பான் என்று எழுதிவைத்துள்ளது மிகவும் வேதனையான காரியம்.


மேலும், நபி இஸ்மாயில் பரம்பரையில் நபிகள் நாயகம் பிறந்த காரணத்தால் துஷ்ட பரம்பரை என்று ஒதுக்கிவிட்டார்கள். அந்த பரம்பரையில் தான் முஸ்லிம்கள் தோன்றினார்கள் என்றுதான் அவர்களின் பாடத்திட்டத்தில் உள்ளது.

இதை சிந்திக்காத மேலை நாட்டு மக்கள் இன்று வரை இந்த விஷயத்தைக் கக்கி கொண்டே இருப்பதையும் காணலாம். ஒரு குவளை பாலில் ஒரு துளிவிஷம் போதுமானது.

அதே போல் இந்த ஒரு செய்தி மனித சமுதாயத்தில் இன்னும் வெறுப்பை தூண்டக் கூடியதாக உள்ளது. அதே நேரம் இஸ்மாயில் நபியை குறித்து 'அவன் துஷ்ட மனிதனாக இருப்பான் அவனுடைய கை எல்லோருக்கும் விரோதமாகவும், எல்லோருடைய கையும் அவனுக்கு விரோதமாகவும் இருக்கும். தன் சதோதரர் எல்லோருக்கும் எதிராகக் குடியிருப்பான்' என்று ஆதியாகமம் 16:12 ல் எழுதி உள்ளது.

 உண்மையில் மனுக்குலம் மீது வெறுப்பை பரஸ்பரம் ஏற்படுத்துவதே எழுதியவன் நோக்கம் ஆகும்.

இது சாத்தானின் தூண்டுதலால் எழுத்தப்பட்டது என்பதில் சந்தேகமே இல்லை.

நபி இஸ்மாயில் குறித்து இறைவன் திருக்குர்ஆனில் மிகவும் கண்ணியப்படுத்திக் கூறுவதைப் பல இடங்களில் காணலாம்.

அவர் பாலகனாய் இருந்தபோது தன்னை பலி இடத்துணிந்த தந்தையிடம் 'என் அருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்ட படியே செய்யுங்கள் ''அல்லாஹ் நாடினால் என்னை நீங்கள் பொறுமையாளர்களில் உள்ளவனாகக் காண்பீர்கள்'' என்று கூறியதாக இறைவனே திருக்குர்ஆன் 37:102ல் குறிப்பிடுகிறான். மேலும் அவர் 'வாக்குறிதியில் உண்மையாளராக இருந்தார்' என்றும் அவர் தூதராகவும் நபியாகவும் இருந்தார் என்றும் இறைவன் 19:54 ல் குறிப்பிடும் போது கண்களில் கண்ணீர் வருகிறது.

இவ்வளவு பெரிய அந்தஸ்தைப் பெற்ற நபி இஸ்மாயிலை துஷ்டமனிதன் என்ற பட்டம் கொடுத்தமைக்கு இறைவனிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.


இந்த இஸ்மாயில் நபிக்கு சொத்துரிமை வழங்குவதில் முறை கேடு நடந்து விடக் கூடாது என்பதற்காக உபாகமம் 21:15-17 வரையிலான வசனங்களில் 'ஒருவன் இரண்டு மனைவி உடையவனாக இருந்து ஒருத்திமேல் அன்பாகவும், மற்றவள் மேல் வெறுப்பாகவும் இருந்து, இருவரும் அவனுக்கு பிள்ளைகள் பெற்றால், முதலில் பிறந்தவன் வெறுக்கப் பட்டவளிடத்தில் பிறந்த மகன் ஆனாலும் சொத்துரிமை இரண்டு பங்கு அவனுக்கு சேரும். மட்டுமல்ல, அவன்தான் சேஷ்டபுத்திர அவகாசத்துக்கும் உரிமையாளனாவான்' என்று காணப்படுகிறது.


இந்த அளவு சிறப்பாக அவர்களுடைய சட்டம் இருந்தும் கிறிஸ்தவர்கள் நபி இஸ்மாயீலை இன்றளவும் வெறுத்து, ஈசாக் வம்சத்தாரை முதல் நிலைக்கு தள்ளியது புரியாத புதிராக இருக்கிறது.

சேஷ்டபுத்திர அவகாசம் நபி இஸ்மாயிலைத்தான் சாரும் என்று பைபிள் கூறியிருக்க அவரை கிறிஸ்தவர் நினைக்காமல் போனதற்கு கைபிளை ஆராயாமல் விட்டதே காரணம்.

நபிகள் நாயகம் (ஸல்) காலம் வரையில் தொடர்ந்து விருத்தசேதனம் (கத்னா) செய்து வாழ்ந்து வந்தவர்கள் இஸ்மாயில் பரம்பரையான அரேபியர்கள்.

ஆனால் ஈசாக் பரம்பரை என்று சொல்லும் இஸ்மாயீல் மக்கள் யூதர்களாவும், கிறிஸ்தவர்களாகவும் பிரிந்து பவுலின் போதனைப்படி விருத்தசேதனம் (கத்னா) இல்லாதவர்கள் ஆனார்கள்!


'நீங்கள் விருத்தசேதனம் செய்து கொண்டால் கிறிஸ்துவினால் உங்களுக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை என்று பவுலாகிய நான் சொல்லுகிறேன்' என கலாத்தியர் 5:2ல் பவுல் எழுதியுள்ளதை காணலாம்.

ஆனால் ஆதியாகமம் 17:12-14 வரையிலான் வசனங்களில் விருத்தசேதனம் வலியுறுத்தப் படுவதையும் மீறினால் அறுப்புண்டு போவான் என்பதையும் கர்த்தர் வலியுத்துவதை காணலாம்.


இறைக் கொள்கைக்கு மாற்றமான கூட்டம் உருவாகி மனிதக் கற்பனைக்கு இடம் கொடுத்ததால் இறைவன் இஸ்மாயில் கோத்திரத்தில் இறுதி தூதரை தேர்ந்தெடுத்து வேதம் அருளினான்.

 அந்த வேதத்தில் ஆபிரகாம், இஸ்மாயில், ஈசாக், யாக்கோபு போன்ற நபிமார்களும் முஸ்லிம்களாக இருந்தார்கள் என்பதை திருக் குர்ஆன் 2:130-136 வரையிலான வசனங்களில் காணலாம்.


முஸ்லிம்கள் நபி இப்ராஹிமின் மார்க்கத்தைப் பின்பற்றுகிறார்கள்.

இது உங்கள் பிதாவாகிய இப்ராஹிமின் மார்க்கம் என்றும், முஸ்லிம்களாக அன்றி மரிக்காதீர்கள் என்றும் வலியுறுத்துவதை முறையே 22:78 லும், 3:102 லும் காணலாம்.


'நபி ஆபிரஹாமிடம் சரணடையும் என்றவுடன் அவர் அகிலங்களின் இறைவனுக்கு முற்றிலும் வழிப் பட்டவனாக 'சரண் அடைந்தேன்' என்று கூறினார்.


இதையே இப்ராஹிம் தம் குமாரர்களுக்கு உபதேசம் செய்தார். யாக்கோபும் எகிப்து தேசத்தில் வைத்து வாக்குறுதி வாங்கினார். 'என் குமாரர்களே அல்லாஹ் உங்களுக்கு சன்மார்க்கமாகிய இஸ்லாமை தேர்ந்தெடுத்துள்ளான். நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணிக்காதீர்கள்' என்று கூறியதை திருக்குர்ஆன் வசனம் 2:132ல் காணலாம்.


மேலும், இதே போன்ற நிகழ்ச்சிகளைப் பின்வரும் திருக்குர்ஆன் வசனங்களும் நமக்குத் தெரிவிக்கின்றன.

அல்லது யாகூபுக்கு மரணம் வந்த சமயத்தில் நீங்கள் பிரச்னையில் இருந்தீர்களா? அவர்தம் மைந்தர்களிடம், எனக்குப் பின்னர் எதனை நீங்கள் வணங்குவீர்கள்?' எனக் கேட்டதற்கு, 'உம்முடைய வணக்கத்திற்கு உரியவனும், உம்முடைய மூதாதையர்களான இப்லாஹிம், இஸ்மாயில், இஸ்ஹாக் ஆகியவர்களின் வணக்கத்திற்குரியவனுமாகிய ஒரே ஒரு (இறை)வனயே நாங்கள் வணங்குவோம். அவனுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்தவர்களாகவும் இருப்போம்' என்று கூறினார்கள். (அல்குர்ஆன் 2:133)


அல்லாஹ்வையும், எங்கள்பால் இறக்கப்பட்ட (திருக்குர்ஆன் வேதத்)தையும் இப்ராஹிம், இஸ்மாயில், இஸ்ஹாக், யாகூபு இவர்களுடைய சந்ததிகள் ஆகியயோரின் பால் இறக்கப்படடதையும், மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டிருந்ததையும், மற்றைய நபிமார்களுக்கு அவர்கள் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டிருந்ததையும் நாங்கள் நம்பிக்கை கொள்கிறோம், அவர்களிலிருந்து எவருக்குமிடையில் நாம் வேறுபாடுகாட்டமாட்டோம், இன்னும், அவனுக்கே நாங்கள் முற்றிலும் கீழ்ப்படிகிறவர்கள்' என் (நம்பிக்கை கொண்டோரே) நீங்களும் கூறுங்கள். (அல்குர்ஆன் 2:136)


இது இவ்வாறிருக்க முஸ்லிம்கள் யேசுநாதருக்குப்பின் தோன்றினார்கள். நபிகள் நாயகம்தான் முஸ்லிம்களின் தலைவர் என்று கிறிஸ்தவர் தங்களை வேறுபடுத்தி பேசுவது இவர்களின் அறியாமை என்று தான் நாம் விளங்க வேண்டும். என்றாலும் உண்மையை அவர்களுக்கு முன் எடுத்து வைத்து இறை அன்பை பெறுவோமாக.

Monday 14 March 2011

என்ன வித்தியாசம் பாரீர் ?

    நீங்கள் யூத கிறிஸ்தவர்களின் வழிமுறைகளை ஜானுக்கு ஜான் அடிக்கு அடி பின்பற்றுவீர்கள். எந்த அளவுக்கு என்றால் அவர்கள் ஒரு உடும்பு பொந்துக்குள் சென்றால் நீங்களும் செல்வீர்கள். (புகாரி : 7319-3456)


என் இனிய தர்காஹ்வாதிகளே மேற்கண்ட நபிமொழிக்கு ஏற்றாற்போன்று நடந்துக்கொள்கிறீர்களே, கீழ்கண்ட செயல்கள் நபிகள் நாயகம் (ஸல்)காட்டித்தந்தவையா அல்லது அல்லாஹ் திருமறையில் கூறியவையா?

சிந்திக்க மாட்டீர்களா?


சந்தனக்கூடு
கொடிமரம்
சமாதி வழிபாடு
அவ்லியாக்களுக்கு நேர்ச்சை
கப்ரை உயர்த்திக் கட்டுதல்
தஸ்பீஹ் மணி உருட்டுதல்
மவ்லூது பாடல்கள்
கவ்வாலி இசைக்கச்சேரிகள்
உரூஸ் உண்டியல்
யானை குதிரை ஊர்வலங்கள்
பிறந்த நாள் விழா எடுப்பது
இறந்தவர்களுக்குச் செய்யும் சடங்குகள்
வட்டி வாங்குதல்
வரதட்சணை பிடுங்குதல்
ஜோதிட நம்பிக்கை
கருமணி தாலி கட்டுதல்
வாழைமரம் நடுதல்
ஆண்கள் தங்கம் அணிவது
மஞ்சள் நீராட்டுவிழா
சுன்னத் கத்னா திருவிழா




ஒருமுறை மறுபடியும் கீழ்கண்ட நபிமொழியை படியுங்கள்

நீங்கள் யூத கிறிஸ்தவர்களின் வழிமுறைகளை ஜானுக்கு ஜான் அடிக்கு அடி பின்பற்றுவீர்கள். எந்த அளவுக்கு என்றால் அவர்கள் ஒரு உடும்பு பொந்துக்குள் சென்றால் நீங்களும் செல்வீர்கள். (புகாரி : 7319 -3456)



 


























இணைவைத்தால் மன்னிப்பு கிடையாது

'நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவேமாட்டான்; இது அல்லாத (பாவத்)தைத் தான் நாடியவருக்கு மன்னிப்பான்; எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்'

உலகப் பொது மறை அல்-குர்ஆன் 4:116



தாயத்தை கட்டாதீர்கள்

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்.
தாயத்தை கட்டித் தொங்க விட்டுக் கொண்டிருப்பவன் நிச்சயமாக -அல்லாஹ்வுக்கு- இணைவைத்து விட்டான்.

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி) நூல்: அஹமத் 16781



அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபடுங்கள்

அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காது அவனுக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக இருங்கள்; இன்னும் எவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறானோ, அவன் வானத்திலிருந்து விழுந்து பறவைகள் அவனை வாரி எடுத்துச் சென்றது போலும் அல்லது பெருங் காற்றடித்து, அவனை வெகு தொலைவிலுள்ள ஓரிடத்திற்கு அடித்துக் கொண்டு சென்றது போலும் ஆகிவிடுவான்.

உலகப் பொது மறை அல்-குர்ஆன் 22:31



இணைகற்பித்தால் உங்கள் சுவனம் ஹராமாக்கப்படும்


அல்லாஹ் கூறுகிறான்: -
'...எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை.'

உலகப் பொது மறை அல்-குர்ஆன் 5:72




இணைகற்பித்தால் சொர்க்கம் செல்லவே முடியாது



'இஸ்ராயீலின் மக்களே! என் இறைவனும் உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்! அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப் பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை' என்றே மஸீஹ் (ஈஸா அலைஹிஸ்ஸலாம்) கூறினார்.

 உலகப் பொது மறை அல்-குர்ஆன் 5:72


இணைகற்பிப்பவர்களுக்கு நரகமே நிரந்தரம்



(ஏக இறைவனை) மறுப்போராகிய வேதமுடையோரும், இணை கற்பிப்போரும், நரக நெருப்பில் இருப்பார்கள். அவர்களே படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள்.

உலகப் பொது மறை அல்-குர்ஆன் 98:6


இணைகற்பித்தால் நல்ல அமல்கள் அழிந்துவிடும்

அவர்கள் இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த(நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும்.

உலகப் பொது மறை அல்-குர்ஆன் 6:88


இணைகற்பித்தால் மறுமையில் நஷ்டவாளியாகிவிடுவீர்கள்



நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்துவிடும். நீர் நஷ்டமடைந்தவராவீர். மாறாக அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக! என்று (முஹம்மதே) உமக்கும் உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப் பட்டது.

உலகப் பொது மறை அல்-குர்ஆன் 39:65,66


இறைத்தூதர்களும் இணைகற்பிக்கக்கூடாது என எச்சரிக்கை!


'நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும், நீர் நஷ்டமடைந்தோராவீர். மேலும் அல்லாஹ்வை வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!' என்று (முஹம்மதே) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது.

உலகப் பொது மறை அல்-குர்ஆன் 39:65,66


அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!


ஸுப்ஹான(க்)கல்லாஹும்ம வபி(இ) ஹம்தி(க்)க அஷ்ஹது அல்லாயிலாஹா இல்லா அன்(த்)த அஸ்தக்பி(ய)ரு(க்)க வஅதூபு(இ)
இலை(க்)க.
திர்மீதி 3355

Tuesday 8 March 2011

அல்குர்ஆன் கூறும் சூராவளி எச்சரிக்கைகள்!

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்.


அல்குர்ஆன் கூறும் சூராவளிக் காற்று பற்றிய எச்சரிக்கை

உங்களில் யாராவது ஒருவர் இதை விரும்புவாரா? – அதாவது அவரிடம் பேரீச்ச மரங்களும், திராட்சைக் கொடிகளும் கொண்ட ஒரு தோட்டம் இருக்கிறது. அதன் கீழே நீரோடைகள் (ஒலித்து) ஓடுகின்றன. அதில் அவருக்கு எல்லா வகையான கனி வர்க்கங்களும் உள்ளன. (அப்பொழுது) அவருக்கு வயோதிகம் வந்துவிடுகிறது. அவருக்கு (வலுவில்லாத,) பலஹீனமான சிறு குழந்தைகள் தாம் இருக்கின்றன – இந்நிலையில் நெருப்புடன் கூடிய ஒரு சூறாவளிக் காற்று, அ(ந்தத் தோட்டத்)தை எரித்து(ச் சாம்பலாக்கி) விடுகின்றது. (இதையவர் விரும்புவாரா?) நீங்கள் சிந்தனை செய்யும் பொருட்டு அல்லாஹ் (தன்) அத்தாட்சிகளை உங்களுக்குத் தெளிவாக விளக்குகின்றான்
உலகப் பொது மறை அல்-குர்ஆன் 2:266
 
இங்கு நாம் சிந்திக்க கூடிய அறிவியல் உண்மை என்ன? என்பதையும் சூராவளிகளின் வகைகளையும் அவற்றின் வேகத்தையும் பற்றி ஆராய்ந்து பார்ப்போம் வாருங்கள்!


சூராவளி என்பது என்ன?




சூராவளி என்பது ஒருவகை சுழலும் காற்றாகும். இந்த காற்றின் கட்டுக்கடங்காத வேகத்தில் சுழன்றபடியே மேகங்களை தொட்டுக் கொண்டு நிலப்பரப்பை சூரையாடி பயிர்களையும், வீடுகளையும் நாசம் செய்துவிடும் ஆற்றல் கொண்டவைகளாகும். சூராவளி என்பது ஒரு புனல் (Funnel) வடிவத்தில் காணப்படும் பயங்கரமான சூராவளியின் மேற்பகுதி மேகத்தை தொட்டு கிணறு போன்ற அகன்று காணப்படும் மேலும் இதன் வால் பகுதி கூர்மையான வாள் போன்று வலைந்து காணப்படும். இவற்றிற்கு ஆங்கில்தில் டொர்னடோ (Tornado) என்று பெயர்.

சூராவளியின் வேகம்


பல்வேறு சூராவளிகள் குறைந்த பட்ச வேகமாக மணிக்கு 40 மைல்கள் என்ற வேகத்தில் சுழன்றடிக்கும் (அதாவது 64 கி.மீ வேகம்) மற்றும் அதிக பட்சமாக மணிக்கு 110 மைல்கள் என்ற வேகத்தில் சூழன்றடிக்கும் (அதாவது மணிக்கு 177 கி.மீ வேகம்) இந்த வேகம் சுமார் 250 அடி (75 மீட்டர்) நிலப்பரப்பை ஒரு வினாடியில் தாக்கும் வல்லமை படைத்தது.
சூராவளிகள் சுழல ஆரம்பிக்கும் போது எதிர்பாராத விதமாக காற்றின் வேகம் 300 மைல்களாக இருந்தால் இந்த சூராவளிகள் குறைந்தபட்சடம் 1 மைல் (அதாவது 1.6 கி.மீ) பரப்பளவு கொண்ட நிலப்பரப்பை ஒரு வினாடியில் துவம்சம் செய்து அப்படியே மெல்ல நகர்ந்து பல மைல்கள் நகர ஆரம்பிக்கும். இவைகள்தான் சூராவளிகள் அதாவது வானத்தின் சுனாமி என்று கூட கூறலாம்.

சூராவளி – டொர்னடோ எவ்வாறு உருவாகிறது






ஒரு குறிப்பிடட திசையிலிருந்து வீசக்கூடிய குளிர்ந்த காற்று மற்றும் வரண்ட காற்றும் அதன் எதிர்திசையிலிருந்து வீசக்கூடிய சூடான காற்று மற்றும் ஈரப்பதமான காற்றுடன் மோதுகிறது. இப்படிப்பட்ட பல்வேறு வகையான காற்றுகள் ஒன்றுடன் ஒன்று மோதும்போது அதிலிருந்து ஒரு வெளிப்படும் விசையே சூராவளி எனப்படுகிறது. இந்த மோதல்கள் அதிகமான அளவு நடைபெறும் போது அந்த சூராவளிக்கு பலம் கூடுகிறது. இதற்கு பெயர்தான் டொர்னடோ எனப்படுகிறது.

இந்த சூராவளி காற்றின் அறிகுறிகள் என்ன?

டொர்னடோ என்ற பயங்கரமான சூராவளி வீசுவதற்கு முன்னர் ஆலங்கட்டி மழைகள் ஏற்படுமாம் அந்த ஆலங்கட்டியின் தாக்கம் வீடுகளின் கூரைகளை துவம்சம் செய்துவிடுமாம்.


இந்த சூராவளி காற்றின் வேகம் என்ன?

வானத்தில் ஒரு பயங்கரமான சூராவளி உருவாகிவிட்டால் அந்த சூராவளி நிலத்தை தொடுவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் வெறும் 12-13 நிமிடங்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். 13ம் வினாடியிலிருந்து இந்த சூராவளி நிலத்தை பதம் பார்த்து அக்குவேறு ஆணிவேராக பிடிங்கி அதை தனக்குள் வசப்படுத்திக்கொண்டு அதே வேகத்தில் நகர ஆரம்பிக்குமாம்.

இந்த சூராவளி காற்றின் சக்தி எத்தகையது?

மனிதர்கள், கால்நடைகள் கூட இந்த சூராவளியில் சிக்கி வீசப்படுகிறது. சாலையில் நிருத்தப்பட்டிருக்கும் வாகனங்கள் தூக்கி வீசப்பட்டு வீட்டின் கூரைகளின் மேல் நிற்குமாம் அவ்வளவு பயங்கரமானது இந்த அதிபயங்கர சூராவளிகள்.

சூராவளியின் வகைகள் பார்ப்போம்

SUPERCELL TORNADOES (சூராவளி மேகங்களுடன்)



இந்த வகை சூராவளிகள் SUPERCELL TORNADOES என்று அழைக்கப்படுகின்றன. இந்த வகை சூராவளி மேகங்களை கருவாக கொண்டு சூழன்றடிக்கும்.  ஒரு பக்கம் மேகங்கள் மழைச்சாரல்களை வீசிக்கொண்டும் மற்றொரு பக்கம் சூரைக் காற்றை சூழன்றபடியும் வீசி பல கிலோமீட்டர்களை நாசம் செய்யக்கூடிய ஆற்றல் பெற்றிருக்கும். இந்த வகை சூராவளிகள் ஒரு நிலத்தை தொட்டுவிட்டால் அதன் வேகம் 200 கி.மீ.க்கும் குறைவாக இருக்காது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்

LANDSPOUT (லேன்ட் ஸ்பவ்ட்)




நிலத்தில் உள்ள மணல் மேடுகளை பதம்பார்த்து மணலை வீசியவண்ணம் சூழன்றடிக்கும் இந்த கொடிய சூராவளிக்கு லேன்ட் ஸ்பவ்ட் என்று பெயர். இது முதலில் கண்ட SUPERCELL TORNADOES-களுக்கு அடுத்தபடியாக வீசக்கூடிய சூராவளியாகும். இவைகள் கனத்த மேகங்களை இழுத்துக்கொண்டு சுழலாமல் பலவீனமான மேகங்களைக் கொண்டு காற்றை சுழன்றடிக்கும் ஆற்றலை பெற்றிருக்கிறது.


GUSTNADO (கஸ்டனாடோ சூராவளி)

 



இந்த GUSTNADO என்றழைக்கப்படும் சூராவளி பலவீனமானதாகும். இவைகள் சற்று வேகம் குறைந்ததாகவும் விரைவில் நின்றுவிடக் கூடியதாகவும் காணப்படும். இந்த சூரைக்காற்றினால் தூசுப்படலம் சற்று அதிகமாக காணப்படும். இந்த வகை சூராவளிகளுக்கு  மேகங்களுடன் நெருங்கய தொடர்பிருக்காது மாறாக காற்றின் வேகம்தான் இவைகளையும் உருவாக்குகிறது.

WATERSPOUT (நீரில் ஏற்படும் சூராவளி)

 




வாட்டர் ஸ்பவ்ட் எனப்படும் இந்த சூராவளிகள் நீர்நிலைகளில் ஏற்படக்கூடிய சூராவளிகளாகும். இவைகள் நிலத்தில் வீசக்கூடிய SUPERCELL எனப்படும் அதிபயங்கர சூராவளிகளின் வடிவ மேயாகும் ஆனால் இவைகள் நீரில் சூழன்றடிப்பதால் இதனால் ஏற்படும் பாதிப்பகள் மனிதனுக்கு மிக குறைவுதான்.  இந்த சூராவளிகள் நிலத்தை தொடுவதற்குள் அதன் சக்தியை இழந்து விடுகின்றன.

DUST DEVILS



இந்த வகை சூராவளிகளுக்க டஸ்ட் டெவில் என்று பெயர் அதாவது தூசுகளின் சாத்தான். இந்த சூராவளி அதிகமாக பாலைவனங்களில் வீசுவதுதான் வழக்கம். இவைகள் உச்சி வெயில் மற்றும் மதிய நேரங்களில் அதிகமாக வீசுகின்றன. இவைகள் மணிக்கு 70 மைல்கள் வேகத்தில் சுழன்றடிக்கும் ஆற்றல் பெற்றிருக்கின்றன. இவைகள் மிகவும் பலவீனமான சூராவளிகளாகும் இவைகளுக்கு மேகங்களுடன் எந்த தொடர்பும் காணப்படாது மாறாக காற்றின் அழுத்தம் இவ்வகை சூரைக் காற்றை வீசிக்கொண்டு சில நிமிடங்களில் தன் சக்தியை இழந்துவிகின்றன. தூசுப்படலத்தை தட்டிச் செல்வதால் கண்களுக்கு மிகவும் பாதிப்புகள் ஏற்படுத்துகின்றன. சற்று அதிகமாக வீசினால் ஒரு வாகத்தை தலை குப்புற கவிழ்த்துவிடும் ஆற்றல் பெற்றிருக்கும்.


FIREWHIRLS


நெருப்புச் சுறாவளிகள் அதாவது சூராவளி சூழலும் போது அதன் உராய்வினால் காய்ந்த இழை தழைகள் கருகி நெருப்பு உண்டாகிறது இந்த நெருப்புச் ஜுவாலைகளை சூராவளி தன்னுள் இழுத்தபடியே பிற இடங்களுக்கு பரவி நாசத்தை ஏற்படுத்தும் ஆற்றல் பெற்றுள்ளன. இவைகள் பெரும்பாலும் விவசாய நிலங்கள் மற்றும் காடுகள் உள்ள பகுதிகளில் பேரிழப்பை ஏற்படுத்திவிடுகின்றன.




இந்த நெருப்புச் சூராவளிகள் 1923ம் ஆண்டு ஜப்பான் நாட்டில் உள்ள டோக்கியோவின் Hifukusho-Ato என்ற கிராமத்தில் சுமார் 38,000 த்திற்கும் மேற்பட்ட மனிதர்களை வெரும் 15 நிமிட இடைவெளியில் நெருப்பினால் பொசுக்கி அழித்துள்ளது. இவைகள் பெரும்பாலும் 10 முதல் 50 மீட்டர் அகல உயரமும் 10 அடி அகலம் கொண்டதாகவும் காணப்படும். இச்சுறாவளிகள் சூழன்றடிக்கும் போது காற்றின் வேகம் மணிக்கு 160 கீ.மீ என்ற வேகத்தில் காணப்படும். 49 அடி உயரமுள்ள மரத்தை கூட சில வினாடிகளில் அழித்துவிடும்.

அல்லாஹ் அருள்மறையில் விவரிக்கும் சூராவளியின் தாக்கம் பற்றி மீண்டும் ஒருமுறை படித்து நல்லுணர்வு பெற முயலலாமே

உங்களில் யாராவது ஒருவர் இதை விரும்புவாரா? – அதாவது அவரிடம் பேரீச்ச மரங்களும், திராட்சைக் கொடிகளும் கொண்ட ஒரு தோட்டம் இருக்கிறது. அதன் கீழே நீரோடைகள் (ஒலித்து) ஓடுகின்றன. அதில் அவருக்கு எல்லா வகையான கனி வர்க்கங்களும் உள்ளன. (அப்பொழுது) அவருக்கு வயோதிகம் வந்துவிடுகிறது. அவருக்கு (வலுவில்லாத,) பலஹீனமான சிறு குழந்தைகள் தாம் இருக்கின்றன – இந்நிலையில் நெருப்புடன் கூடிய ஒரு சூறாவளிக் காற்று, அ(ந்தத் தோட்டத்)தை எரித்து(ச் சாம்பலாக்கி) விடுகின்றது. (இதையவர் விரும்புவாரா?) நீங்கள் சிந்தனை செய்யும் பொருட்டு அல்லாஹ் (தன்) அத்தாட்சிகளை உங்களுக்குத் தெளிவாக விளக்குகின்றான்

உலகப் பொது மறை அல்-குர்ஆன் 2:266

 இஸ்லாம் உண்மையான மார்க்கம் என்பதற்கு இந்த சூராவளிகளும் ஆதாரமாக திகழ்கிறது! எனவே இந்த உண்மைகளை அறிந்த நீங்கள் எப்போது இஸ்லாத்திற்குள் வருவீர்கள்!
அல்ஹம்துலில்லாஹ்

குறிப்பு
சூராவளி பற்றிய அறிய தகவல்களை திரட்ட பேருதவியாக இருந்த இணையதளங்களுக்கு நன்றிகள் பல!

Friday 4 March 2011

ஷைத்தானுடன் ஒரு உரையாடல்

ஒரு நாள் இரவு நான் ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் பொழுது பஜ்ர் தொழுகைக்கான  பாங்கொலி கேட்டது.  பள்ளிக்குச் சென்று ஜமாத்தோடு தொழ வேண்டும் என்ற எண்ணத்தில் எழ முற்பட்டேன்.

அப்பொழுது ஷைத்தான் அங்கு வந்தவனாக 'விடிவதற்கு இன்னும் நேரம்
இருக்கிறது. ஒரு குட்டித்தூக்கம் போடு' என்றான்.

'தூங்கினால் ஜமாத்தோடு தொழமுடியாமல் போய்விடுமே' என்றேன்.

அதற்கு ஷைத்தான் 'நான் அதை மறுக்கவில்லை. பகல் முழுவதும் நீ வெயிலில் கஷ்டப்பட்டு உழைத்து களைத்துப் போய் இருக்கிறாய். இந்த இமாமிற்கு என்ன வேலை? நிழலில், பள்ளியின் உள்ளே அமர்ந்து கொண்டு எந்த வேலையும் செய்யாமல் இருக்கிறார்.

தொழ மறந்தால் வீட்டில் தனியாக தொழ அனுமதி இருக்கிறதே! உன்னை வருத்திக் கொள்ளாதே! இஸ்லாமிய மார்க்கம் இலேசானது. அதை கடினமாக்கி விடாதே!' என்றான்.

அவன் பேச்சில் மயங்கி உறங்கி விட்டேன்.

சூரியன் உதயமாகி நன்கு வெளிச்சம் பரவிய பின்பே விழித்தேன்.

அப்பொழுது ஷைத்தான் எதிரில் வந்து 'வருத்தப்படாதே! நன்மை சம்பாதிக்க பல வழிகள் இருக்கிறது' என்றான்.

நான் தௌபா செய்ய நாடினேன்.

உடனே ஷைத்தான் 'உன் இளமைப் பருவம் முடியுமுன் அதை  முழுமையாக அனுபவி' என்றான்.

நான் 'மரணம் வந்து விடுமே என அஞ்சுகிறேன்' என்றேன்.

அதற்கவன் 'பைத்தியம் மாதிரி பேசாதே. உன் வாழ்வு இப்பொழுது
முடிவடையாது' என்றான்
.
நான் அல்லாஹ்வின் ஞாபகத்தில் (திக்ர்) ஆழ்ந்தேன். உடனே அவன் என் உள்ளத்தில் உலகத்தின் பல்வேறு இன்பங்களைப் பற்றிய எண்ணங்களை விதைத்தான்.

நான்  'அல்லாஹ்விடம் துஆ செய்வதை நீ தடுக்கிறாய்' என்றேன்.

'இல்லை, இல்லை. நீ இரவு படுக்கும்முன் துஆ செய்யலாமே' என்றான்.

நான் 'உம்ரா செல்ல நாடியுள்ளேன்' என்றேன்.'நல்லது. ஆனால், சுன்னத்தை விட பர்ளு தானே முக்கியம். நீ உம்ரா செல்லாதே, ஹஜ் செல்ல முயற்சி செய்' என்றான்.

நான் குர்ஆன் ஓத முற்பட்டேன். உடனே அவன் ' நீ ஏன் பாடல், கவிதைகளை பாடி உன்னை சோர்விலிருந்து விடுவிக்க மறுக்கிறாய்?' என்றான்.

நான் 'பாடல் பாடி கூப்பாடு போடுவது ஹராம்' என்றேன்.

உடனே அவன் 'மார்க்க மேதைகளிடையே இசை, பாடல் குறித்து
கருத்து வேற்றுமை உள்ளது' என்றான்.

'இசையை ஹராம் என்று கூறும் ஹதீஸ்களை நான்
படித்துள்ளேன்' என்றேன்.

உடனே அவன் ' அந்த ஹதீஸ்களின் அறிவிப்பாளர்கள் வரிசை
பலஹீனமானது' என்றான்.

அந்த சமயத்தில் ஒரு அழகிய இளமங்கை என்னை கடந்து சென்றாள். நான் என் பார்வையை வேறுபுறம் திருப்பிக் கொண்டேன்

.உடனே அவன் 'என்ன வெட்கப்படுகிறாய்? முதல்
பார்வை தான் அனுமதிக்கப்பட்டுள்ளதே!' என்றான்.

'அந்நியப் பெண்ணை பார்ப்பது நரகில் தள்ளிவிடும் என அஞ்சுகிறேன்' என்றேன்.

அவன் சிரித்து விட்டு 'இயற்கை அழகை கலைக்கண்ணோடு ரசிப்பது அனுமதிக்கட்டது தான் ' என்றான்.

நான் 'தாவா-அழைப்புப்பணி செய்ய நாடியுள்ளேன்' என்றேன்.

 உடனே அவன், 'ஏன் நீ தர்மசங்கடமான சூழ்நிலையில் சிக்க விரும்புகிறாய்?' என்றான்.

'என் நோக்கம் இஸ்லாத்தை பிறருக்கு எடுத்து இயம்புவது' என்றேன்.

உடனே அவன் 'இல்லை உன் நோக்கம் உன்னை எல்லோரும் பெரிய பேச்சாளன் எனப் பாராட்ட வேண்டும். இந்த பெருமை தான் உன்
அனைத்து நன்மைகளையும் அழித்துவிடும். அதனால், தாவாவை விட்டு விட்டு உன் சொந்த வேலையை செய்' என்றான்.

நான் 'எது உன்னை அழிக்கும்?' என்று கேட்டேன்.

அதற்கு அவன், 'குர்ஆனில் உள்ள ஆயத்துல் குர்ஸி (2வது அத்தியாயம் 255வது வசனம்)  யார் ஓதுகிறார்களோ அவர்களை என்னால் ஒன்றும் செய்ய முடியாது. அவர்களுக்கு "அல்லாஹ் பாதுகாப்பு அளிக்கிறான்",' என்று கூறினான்.

நான் 'அடடே! அப்படியா', எனக் கூறிவிட்டு ஆயத்துல் குர்ஸியை ஓத ஆரம்பித்தேன்.

உடனே ஷைத்தான் கூக்குரலிட்டவாறு, அவ்விடத்தை விட்டு வெருண்டோடி மறைந்தான்.

எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே!

பார்த்தீர்களா ஷைத்தானுடைய விஷம, விபரீத விளையாட்டை!
எப்படி மனிதர்களை அவன் வழிகெடுக்கிறான் பாருங்கள்.

அவனுடைய வேலை நம்மை நேரடியாக நன்மை செய்வதை
தடுப்பது அல்ல - அதைத் தாமதப்படுத்தி அதன் மூலம் மறைமுகமாகத் தடுப்பதே.

இந்த உரையாடலை எடுத்துக் கொண்டால்

1. பஜ்ர் தொழ எழுபவரை என்ன கூறி தடுத்தான் -
'இப்பொழுது தான் பாங்கு கூறினார்கள். இகாமத் வரை சிறிது தூங்கு'.

பின்பு,
 இகாமத் கூறும்பொழுது 'விடிவதற்கு இன்னும் நேரம் இருக்கிறது. ஆகவே சிறிது தூங்கு' –

 ' அப்படியே தொழ மறந்தால் வீட்டில் தனியாக தொழ அனுமதி உள்ளதே'

என எப்படி நம்மை தொழுவதிலிருந்து தடுக்கிறான் பார்த்தீர்களா!


2. துஆ ஓத ஆரம்பித்தால், உடனே 'இரவு படுக்கும் முன் ஓதலாமே' எனக் கெடுப்பான்.

தூங்கும் முன் துஆ ஓத ஆரம்பித்தால், 'களைப்பாக இருக்கிறதே' என்ற எண்ணத்தை ஏற்படுத்தி ஓதாமல் தூங்கச் செய்து விடுவான்.

3. உம்ரா செல்ல நாடினால், சுன்னத்தை விட பர்ளு முக்கியம். எனவே, ஹஜ் செய்யலாமே, என்ற எண்ணத்தை ஏற்படுத்திக் கெடுப்பான்.

பின்பு ஹஜ் காலத்தில் தங்கை நிக்காஹ், மகனின் படிப்பு செலவு, வீடு கட்டுவது என பல்வேறு செலவினங்களை முன்னிறுத்தி ஹஜ் செய்வதையும் தடுப்பான்.


4. ஹராமான காரியங்களை - இசை போன்றது - ஹலால் மாதிரி காட்டுவான்.

ஹதீஸ் கலை வல்லுநர்களிடையே கருத்துவேற்றுமை உள்ளது - பலஹீனமான ஹதீஸ் என தவறான எண்ணத்தை ஏற்படுத்துவான்.

5. அந்நியப் பெண்ணை பார்க்கலாம் - 'முதல்பார்வைக்கு அனுமதி உள்ளது' என்பான் -

பின்பு, 'அழகை கலைக்கண் கொண்டு ரசிக்கலாம்' எனப் பாவம் செய்யத் தூண்டுவான்.

6. தாவா வேலை செய்வதைத் தடுக்க அவன் ஏற்படுத்தும் தீய எண்ணம் 'நாம் பெருமைக்கு செய்கிறோம்' எனத் தடுப்பது அல்லது நல்ல நோக்கில் செய்து வரும்போது மனதில் பெருமையை உண்டாக்குவது.

மேலும், மார்க்க அறிஞர்களை, ஆண்களை, பெண்களை, இளைஞர்களை எவ்வாறெல்லாம் வழிகெடுக்கின்றான் எனப் பார்த்தோம்.

அவனுடைய வழிமுறைகளை அறிந்த நாம் அவற்றிலிருந்து முற்றிலும் விலகிக் கொள்வதே சிறந்தது - நம்மை நரக நெருப்பில் வீழ்வதை விட்டும் தடுக்கும்.


அகிலங்களின் இறைவனான அல்லாஹ் தன் திருமறையாம் குர்ஆனில் கூறுகின்றான்,
' நம்பிக்கை கொண்டோர்களே! நீங்கள் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள். ஷைத்தானுடைய அடிச்சுவட்டைக் கூட பின்பற்றாதீர்கள்.  ஏனெனில், அவன் உங்களுக்கு பகிரங்க விரோதி ஆவான்'

உலகப் பொது மறை குர்ஆன் 2 : 208


ஆகவே, "இன்ஷாஅல்லாஹ்" நாம் அனைவரும் ஷைத்தானுடைய பாதையில் செல்வதிலிருந்து இறைவனிடம் பாதுகாவல் தேடுவோம்.
நம்முடைய மற்ற சகோதர, சகோதரிகளையும் அங்ஙனம்
செயல்பட அறிவுறுத்துவோம்.

Wednesday 2 March 2011

பிரார்த்தனைகள் (துஆக்கள்)

குர்ஆனிலிருந்து..

رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ

எங்கள் இறைவனே! எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக! மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக! இன்னும் எங்களை (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!
உலகப் பொது மறை அல்-குர்ஆன் 2:201

--------------------------------------------------------------------------------

رَبَّنَا لاَ تُؤَاخِذْنَا إِنْ نَسِيْنَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلاَ تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِيْنَ مِنْ قَبْلِنَا رَبَّنَا وَلاَ تُحَمِّلْنَا مَا لاَ طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا أَنْتَ مَوْلاَنَا فَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِيْنَ
எங்கள் இறைவனே! நாங்கள் மறந்து விட்டாலோ, அல்லது தவறிழைத்து விட்டாலோ எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவனே! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன், காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!
உலகப் பொது மறை அல்-குர்ஆன் 2:286

--------------------------------------------------------------------------------

رَبَّنَا لاَ تُزِغْ قُلُوْبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ
எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தடம்புறளச் செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) அருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளனாவாய்!
உலகப் பொது மறை அல்-குர்ஆன் 3:8

--------------------------------------------------------------------------------

رَبَّنَا إِنَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ
எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்;, எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள்வாயாக! (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக!
உலகப் பொது மறை அல்-குர்ஆன் 3:16

--------------------------------------------------------------------------------

رَبِّ هَبْ لِيْ مِنْ لَدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيْعُ الدُّعَاءِ
என் இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய்.
உலகப் பொது மறை அல்-குர்ஆன் 3:38

--------------------------------------------------------------------------------

رَبَّنَا اغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَإِسْرَافَنَا فِيْ أَمْرِنَا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِيْنَ
எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களையும் எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறிச் செய்தவற்றையும் மன்னித்தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாய் இருக்கச் செய்வாயாக! காஃபிர்களின் கூட்டத்தாருக்கு எதிராக எங்களுக்கு நீ உதவி புரிவாயாக.
உலகப் பொது மறை அல்-குர்ஆன் 3:147

--------------------------------------------------------------------------------

رَبَّنَا آمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِيْنَ
எங்கள் இறைவனே! நாங்கள் (இவ் வேதத்தின் மீது) நம்பிக்கை கொண்டோம்;. எனவே, (இவ்வேதம் சத்தியமானது என்று,) சாட்சி சொல்வோருடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக!
உலகப் பொது மறை அல்-குர்ஆன் 5:83

--------------------------------------------------------------------------------

رَبَّنَا ظَلَمْنَا أَنْفُسَنَا وَإِنْ لَمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُوْنَنَّ مِنَ الْخَاسِرِيْنَ
எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் – நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்
உலகப் பொது மறை அல்-குர்ஆன் 7:23

--------------------------------------------------------------------------------

عَلَى اللَّهِ تَوَكَّلْنَا رَبَّنَا لاَ تَجْعَلْنَا فِتْنَةً لِلْقَوْمِ الظَّالِمِيْنَ
நாங்கள் அல்லாஹ்வையே பூரணமாக நம்பி (அவனிடமே எங்கள் காரியங்களை ஒப்படைத்து)க் கொண்டோம், எங்கள் இறைவனே! அநியாயம் செய்யும் மக்களின் சோதனைக்கு எங்களை ஆளாக்கிவிடாதே!

உலகப் பொது மறை அல்-குர்ஆன் 10:85

--------------------------------------------------------------------------------

وَنَجِّنَا بِرَحْمَتِكَ مِنَ الْقَوْمِ الْكَافِرِيْنَ
எங்கள் இறைவனே! இந்த காஃபிர்களான மக்களிடமிருந்து உன் அருளினால் எங்களை நீ காப்பாற்றுவாயாக!
உலகப் பொது மறை அல்-குர்ஆன் 10:86

--------------------------------------------------------------------------------

رَبِّ إِنِّيْ أَعُوْذُ بِكَ أَنْ أَسْأَلَكَ مَا لَيْسَ لِيْ بِهِ عِلْمٌ وَإِلاَّ تَغْفِرْ لِيْ وَتَرْحَمْنِيْ أَكُنْ مِنَ الْخَاسِرِيْنَ
என் இறைவனே! எனக்கு எதை பற்றி ஞானம் இல்லையோ அதை உன்னிடத்திலே கேட்பதை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்பு தேடுகிறேன்;, நீ என்னை மன்னித்து எனக்கு அருள் புரியவில்லையானால் நஷ்ட மடைந்தோரில் நான் ஆகிவிடுவேன்.
உலகப் பொது மறை அல்-குர்ஆன் 11:47

--------------------------------------------------------------------------------

رَبِّ اجْعَلْنِيْ مُقِيْمَ الصَّلاَةِ وَمِنْ ذُرِّيَّتِيْ رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ
என் இறைவனே! தொழுகையை நிலைநிறுத்துவோராக என்னையும், என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக! எங்கள் இறைவனே! என்னுடைய பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக!.
உலகப் பொது மறை அல்-குர்ஆன் 14:40

--------------------------------------------------------------------------------

رَبَّنَا اغْفِرْ لِيْ وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِيْنَ يَوْمَ يَقُوْمُ الْحِسَابُ

எங்கள் இறைவனே! என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்களையும் கேள்வி கணக்குக் கேட்கும் (மறுமை) நாளில் மன்னிப்பாயாக!.
உலகப் பொது மறை அல்-குர்ஆன் 14:41

--------------------------------------------------------------------------------

رَبَّنَا آتِنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا

எங்கள் இறைவனே! நீ உன்னிடமிருந்து எமக்கு அருளை வழங்கி, எமது காரியத்தில் நேர்வழியை எமக்கு எளிதாக்கி தந்தருள்வாயாக!
உலகப் பொது மறை அல்-குர்ஆன் 18:10

--------------------------------------------------------------------------------

رَبِّ زِدْنِيْ عِلْمًا
 என் இறைவனே! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக!
உலகப் பொது மறை அல்-குர்ஆன் 20-114

--------------------------------------------------------------------------------

 رَبِّ لاَ تَذَرْنِيْ فَرْدًا وَأَنْتَ خَيْرُ الْوَارِثِيْنَ

என் இறைவனே! நீ என்னை (சந்ததியில்லாமல்) ஒற்றையாக விட்டு விடாதே! நீயே வாரிசுரிமை கொள்வோரில் மிக்க மேலானவன்.
உலகப் பொது மறை அல்-குர்ஆன் 21:89

--------------------------------------------------------------------------------

رَبِّ أَعُوْذُ بِكَ مِنْ هَمَزَاتِ الشَّيَاطِيْنِ

என் இறைவனே! ஷைத்தானின் தூண்டுதல்களிலிருந்து உன்னிடத்தில் நான் பாதுகாவல் தேடுகின்றேன்.
உலகப் பொது மறை அல்-குர்ஆன் 23:97

--------------------------------------------------------------------------------

رَبَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَأَنْتَ خَيْرُ الرَّاحِمِيْنَ

எங்கள் இறைவனே! நாங்கள் உன் மீது ஈமான் கொண்டு விட்டோம், நீ எங்கள் குற்றங்களை மன்னித்து, எங்கள் மீது கிருபை செய்வாயாக! கிருபையாளர்களிலெல்லாம் நீயே மிகச்சிறந்தவன்.
உலகப் பொது மறை அல்-குர்ஆன் 23:109

--------------------------------------------------------------------------------

رَبِّ اغْفِرْ وَارْحَمْ وَأَنْتَ خَيْرُ الرَّاحِمِيْنَ

என் இறைவனே! நீ என்னை மன்னித்துக் கிருபை செய்வாயாக! நீ தான் கிருபையாளர்களிலெல்லாம் மிக்க மேலானவன்.
உலகப் பொது மறை அல்-குர்ஆன் 23:118

--------------------------------------------------------------------------------

رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا

எங்கள் இறைவனே! எங்களைவிட்டும் நரகத்தின் வேதனையைத் திருப்புவாயாக! நிச்சயமாக அதன் வேதனை நிரந்தரமானதாகும்.
உலகப் பொது மறை அல்-குர்ஆன் 25:65

--------------------------------------------------------------------------------

 رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ إِمَامًا

எங்கள் இறைவனே! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக!.
உலகப் பொது மறை அல்-குர்ஆன் 25:74

--------------------------------------------------------------------------------

رَبِّ هَبْ لِيْ حُكْمًا وَأَلْحِقْنِيْ بِالصَّالِحِيْنَ
 என் இறைவனே! நீ எனக்கு ஞானத்தை அளிப்பாயாக. மேலும், ஸாலிஹானவர்களுடன் (நல்லவர்களுடன்) என்னைச் சேர்த்து வைப்பாயாக!
உலகப் பொது மறை அல்-குர்ஆன் 26:83

--------------------------------------------------------------------------------

وَاجْعَلْ لِيْ لِسَانَ صِدْقٍ فِي الْآخِرِيْنَ

இன்னும், பின் வருபவர்களில் எனக்கு நீ நற்பெயரை ஏற்படுத்துவாயாக!
உலகப் பொது மறை அல்-குர்ஆன் 26:84

--------------------------------------------------------------------------------

وَاجْعَلْنِيْ مِنْ وَرَثَةِ جَنَّةِ النَّعِيْمِ

இன்னும், பாக்கியம் நிறைந்த சுவனபதியின் வாரிசுக்காரர்களில் (ஒருவனாக) என்னை ஆக்கி வைப்பாயாக!
உலகப் பொது மறை அல்-குர்ஆன் 26:85

------------------------------------------------------------------------------

وَلاَ تُخْزِنِيْ يَوْمَ يُبْعَثُوْنَ

இன்னும் (மனிதர்கள் உயிர் கொடுத்து) எழுப்பப்படும் நாளில் என்னை நீ இழிவு படுத்தாதிருப்பாயாக!
உலகப் பொது மறை அல்-குர்ஆன் 26:87

--------------------------------------------------------------------------------

رَبِّ أَوْزِعْنِيْ أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِيْ أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَى وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَدْخِلْنِيْ بِرَحْمَتِكَ فِيْ عِبَادِكَ الصَّالِحِيْنَ

என் இறைவனே! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்துள்ள உன் அருட்கொடைகளுக்காக, நான் நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் விதத்தில் நான் நன்மைகள் செய்யவும், எனக்கு அருள் செய்வாயாக! இன்னும் உம் கிருபையைக் கொண்டு என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்தருள்வாயாக!
உலகப் பொது மறை அல்-குர்ஆன் 27:19

--------------------------------------------------------------------------------

رَبِّ إِنِّيْ ظَلَمْتُ نَفْسِيْ فَاغْفِرْ لِيْ

என் இறைவனே! நிச்சயமாக நான் என் ஆத்மாவுக்கே அநியாயம் செய்து விட்டேன்;, ஆகவே, நீ என்னை மன்னிப்பாயாக!
உலகப் பொது மறை அல்-குர்ஆன் 28:16

--------------------------------------------------------------------------------

رَبِّ هَبْ لِيْ مِنَ الصَّالِحِيْنَ

என் இறைவனே! நல்லவர்களிலிருந்து நீ எனக்கு (குழந்தையை) தந்தருள்வாயாக.
உலகப் பொது மறை அல்-குர்ஆன் 37:100

--------------------------------------------------------------------------------

رَبِّ أَوْزِعْنِيْ أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِيْ أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَى وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَصْلِحْ لِيْ فِيْ ذُرِّيَّتِيْ إِنِّي تُبْتُ إِلَيْكَ وَإِنِّيْ مِنَ
الْمُسْلِمِيْنَ

என் இறைவனே! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்த நிஃமத்துக்காக, (அருட் கொடைகளுக்காக) நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக் கூடிய ஸாலிஹான நல் அமல்களைச் செய்யவும் எனக்கு அருள் பாலிப்பாயாக! எனக்கு என்னுடைய சந்ததியையும் ஸாலிஹானவர்களாக (நல்லது செய்பவர்களாக) சீர்படுத்தியருள்வாயாக! நிச்சயமாக நான் தவ்பா செய்து (உன்பக்கம் திரும்பி) விட்டேன். இன்னும் நிச்சயமாக நான் முஸ்லிம்களில் ஒருவனாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவனாக) இருக்கின்றேன்.
உலகப் பொது மறை அல்-குர்ஆன் 46:15

--------------------------------------------------------------------------------

رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِيْنَ سَبَقُوْنَا بِالْإِيْمَانِ وَلاَ تَجْعَلْ فِيْ قُلُوْبِنَا غِلاًّ لِلَّذِيْنَ آمَنُوْا رَبَّنَا إِنَّكَ رَءُوْفٌ رَحِيْمٌ

எங்கள் இறைவனே! எங்களையும், விசுவாசம் கொள்வதில் எங்களை முந்திவிட்ட எங்களுடைய சகோதரர்களையும் மன்னித்தருள்வாயாக! ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் வெறுப்பை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன்; மிக்க கருணையுடையவன்.
உலகப் பொது மறை அல்-குர்ஆன் 59:10

--------------------------------------------------------------------------------

رَبَّنَا لاَ تَجْعَلْنَا فِتْنَةً لِلَّذِيْنَ كَفَرُوْا وَاغْفِرْ لَنَا رَبَّنَا إِنَّكَ أَنْتَ الْعَزِيْزُ الْحَكِيْمُ

எங்கள் இறைவனே! காஃபிர்களுக்கு, எங்களைச் சோதனை(ப் பொருள்) ஆக ஆக்கிவிடாதே! எங்கள் இறைவனே! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ (யாவரையும்) மிகைத்தவன் ஞானம் மிக்கவன்.
உலகப் பொது மறை அல்-குர்ஆன் 60:5

--------------------------------------------------------------------------------

رَبَّنَا أَتْمِمْ لَنَا نُوْرَنَا وَاغْفِرْ لَنَا إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ

எங்கள் இறைவனே! எங்களுக்கு, எங்களுடைய பிரகாசத்தை நீ முழுமையாக்கி வைப்பாயாக! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்.
உலகப் பொது மறை அல்-குர்ஆன் 66:8


--------------------------------------------------------------------------------

رَبِّ اغْفِرْ لِيْ وَلِوَالِدَيَّ وَلِمَنْ دَخَلَ بَيْتِيَ مُؤْمِنًا وَلِلْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنَاتِ وَلاَ تَزِدِ الظَّالِمِيْنَ إِلاَّ تَبَارًا

என் இறைவனே! எனக்கும், என் பெற்றோருக்கும், என் வீட்டில் நம்பிக்கையாளர்களாகப் பிரவேசித்தவர்களுக்கும், முஃமினான ஆண்களுக்கும், முஃமினான பெண்களுக்கும், நீ மன்னிப்பளிப்பாயாக! மேலும், இந்த அநியாயக்காரர்களுக்கு அழிவையேயல்லாது (வேறு எதையும்) நீ அதிகரிக்காதே.
உலகப் பொது மறை அல்-குர்ஆன் 71:28