Wednesday, 18 January 2012

இறை நம்பிக்கை அடிப்படையிலான சகோதரத்துவம்



முஹம்மது அல்லாஹ்வின் தூதராகவே இருக்கின்றார்; அவருடன் இருப்பவர்கள், காஃபிர்களிடம் கண்டிப்பானவர்கள், தங்களுக்கிடையே இரக்கமிக்கவர்கள். ருகூஃ செய்பவர்களாகவும்,  ஸுஜுது செய்பவர்களாகவும்; அல்லாஹ்விடமிருந்து (அவன்) அருளையும் (அவனுடைய) திருப்பொருத்தத்தையும் விரும்பி வேண்டுபவர்களாகவும் அவர்களை நீர் காண்பீர்;
(உலக பொது வேதம் அல்-குர்ஆன் 48:29)

'இறைநம்பிக்கையாளர்கள் ஒருவருக்கொருவர் (ஒத்துழைக்கும் விஷயத்தில்) ஒரு கட்டடத்தைப் போன்றவர்கள் ஆவர். கட்டடத்தின் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு வலு சேர்க்கிறது' என்று நபீ(ஸல்) அவர்கள் கூறி தம் கை விரல்களை ஒன்றோடொன்று கோர்த்துக் காண்பித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) 
நூல்கள்: புகாரீ: 6026, முஸ்லிம்:2585)

நபீ(ஸல்) அவர்கள் கூறினார்கள் 'ஒருவருக்கொருவர் கருணைபுரிவதிலும், அன்பு செலுத்துவதிலும், இரக்கம் காட்டுவதிலும் (உண்மையான) இறைநம்பிக்கையாளர்களை ஓர் உடலைப் போன்று நீ காண்பாய். (உடலின்) ஓர் உறுப்பு சுகவீனமடைந்தால் அதனுடன் மற்ற உறுப்புகளும் (சேர்ந்து கொண்டு) உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கின்றன. அத்துடன் (உடல் முழுதும்) காய்ச்சலும் கண்டுவிடுகிறது.'
அறிவிப்பவர்: நுஅமான் இப்னு பஷீர்(ரலி) 
நூல்கள்: புகாரீ:6011, முஸ்லிம் 8516)

நபீ(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான்;. அவனை (பிறரின் அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டு விடவும் மாட்டான். தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கிறரின் தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கிறான். ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகிறவரைவிட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகிறான். ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிறவரின் குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கிறான';.
(அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) 
நூல்கள்: புகாரீ:2442, முஸ்லிம்:2580)

'உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று நபீ(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(அறிவிப்பவர்: அனஸ்(ரலி) நூல்கள்: புகாரீ:13, முஸ்லிம்:45)

நபீ(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள்' ஐந்து. அவை 
01. ஸலாமுக்கு பதிலுரைப்பது,
02. நோயாளியை விசாரிப்பது,
03. ஜனாஸாவப் பின்தொடர்வது,
04. (உதவி தேடி) அழைத்தால் பதிலளிப்பது.
05. தும்முபவருக்கு மறுமொழி கூறுவது ஆகியவையாகும்.
 (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்கள்: புகாரீ:1240, முஸ்லிம்:2162)


No comments:

Post a Comment