Thursday 29 December 2011

கிறிஸ்துவர்களின் புத்தாண்டும்: முஸ்லிம்கள் பெறவேண்டிய எச்சரிக்கை செய்தியும்


 


கிறிஸ்துவ புத்தாண்டு ஆண்டுதோறும் ஜனவரி 1ம் தேதி கொண்டாடப்படுவது நாம் அறிந்த ஒன்றே. (இயேசு) ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிறப்பை அடிப்படையாக கொண்டு தான் வருட கணக்கீடு (காலண்டர்) செய்யப்படுவதாக கிறிஸ்துவர்கள் கூறி கொள்கிறார்கள். அதாவது தற்போதய புத்தாண்டு 2012 என்றால் இயேசு அவர்கள் பிறந்து 2012 ஆண்டுகள் ஆகின்றன என்று பொருள். அப்படியென்றால் அவர்கள் நம்பிக்கை படி பார்த்தால் இயேசு (டிசம்பர் 25ம் தேதி) பிறந்து ஆறு நாட்களுக்குப் பின் அவர்கள் புத்தாண்டு ஏன் கொண்டாட வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். அதற்கு யாரிடமும் பதில் இல்லை, விட்டு தள்ளுங்கள்.

புத்தாண்டு கொண்டாட்டம் முழுக்க முழுக்க கிறிஸ்துவ மூட நம்பிக்கை அடிப்படையிலானது என்பது மறுக்க முடியாத செய்தி. எனவே ஒரே இறைவனுக்கு கட்டுப்பட்டு வாழும் மக்களான முஸ்லிம்களுக்கு அதில் கொண்டாட்டத்துக்கு இடமேதுமில்லை. இறைத்தூதர் (இயேசு) ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை நாம் நேசிக்கிறோம். ஆனால் அவர்களின் (போலி) பிறந்த நாள் பெயரிலான புத்தாண்டு கொண்டாட்டத்தை நாங்கள் முற்றிலும் மறுக்கிறோம்.

புத்தாண்டு கொண்டாடுவோர்; அதை கொண்டாடும் விதத்தை பார்த்தீர்களா?! மது குடித்து கும்மாளம் அடிப்பது, வாழ்த்து என்ற பெயரில் வம்பிழுப்பது, ( சாராயம் குடித்த வாய், பிறருக்கு வாழ்த்து சொல்லும் விசித்திரத்தைப் பாருங்கள்!)  பெண்களும் ஆண்களுமாக சேர்ந்து கொண்டு நடனம், சிற்றின்பம் அதை தொடர்ந்து விபச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுவது. இவ்வளவையும் செய்து கொண்டு இறைவனின் தூதர் (இயேசு) ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நினைவாக இதை செய்வதாக பொய்யுரைக்கிறார்கள்.

இறுதி இறைவேதம் குர்ஆனின் திருவசனம் இந்த பொய்யர்களின் முகமூடியை பின்வரும் வார்த்தைகளில் கிழித்தெறிகிறது.

''அவர்கள் ஒரு மானக்கேடான காரியத்தைச் செய்யும் போது, ''எங்கள் மூதாதையர்களை இச்செயலின் மீதே கண்டோம். இன்னும் இறைவன் எங்களை இவ்வாறே ஏவினான்' என்று சொல்கிறார்கள். ''(அப்படியல்ல!) நிச்சயமாக இறைவன் மானக்கேடான செயல்களைச் செய்யக் கட்டளையிடுவதில்லை. - நீங்கள் அறியாத ஒன்றை இறைவன் மீது பொய்யாக இட்டுக்கட்டி கூறுகிறீர்களா?' என்று (இறுதி தூதரே!) நீர் கேட்பீராக.'
(இறுதிவேதம் குர்ஆன் 7:28)


புத்தாண்டு கொண்டாட்டங்கள் மானக்கேடான, அருவெறுப்பான தீமைகளின் மொத்த வடிவம் என்பதில் சந்தேகமில்லை. இத்தகைய கேடு கெட்ட காரியத்தில் இறைத்தூதர் (இயேசு) ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பெயரை பயன்படுத்துவது கண்டனத்துக்கு உரியதாகும்.

அறியாமை என்ற போர்வையை போர்த்தி கொண்டு சில முஸ்லிம் பெயர்தாங்கிகள் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்கிறார்கள். அவர்களின் மடமைக்கு பரிசுத்த இஸ்லாம் மார்க்கம் பொறுப்பல்ல.

 இஸ்லாம் மார்க்கத்தில் சில விஷயங்களில் இஸ்லாமிய கட்டளைகளை பின்பற்றுவது, சில காரியங்களில் பிற மதத்தாரை பின்பற்றுவது என்ற அவர்களின் இரட்டை நிலைப்பாட்டுக்கு இஸ்லாம் மார்க்கத்தில் எந்த அனுமதியும் இல்லை.

ஏக இறைவனின் இறுதி தூதர் நபீ(ஸல்) அவர்கள் கூறினார்கள்

 ''எவர் (இறைநம்பிக்கை கொண்ட) நம்மை தவிர பிற மக்களின் வழிமுறையை ஒத்து நடக்கிறாரோ, அவர் நம்மை சேர்ந்தவர் அல்லர். நீங்கள் யூதர்கள் மற்றும் கிறிஸ்துவர்களை போன்று நடந்து கொள்ளாதீர்கள்...!'
( ஆதார பதிவு நூல் - திர்மிதீ :2619)

No comments:

Post a Comment