Friday, 16 December 2011

கிறிஸ்துவர்களின் பண்டிகை: முஸ்லிம்களாகிய நாம் செய்ய வேண்டியது என்ன?



கிறிஸ்துவர்கள் வருடந்தோறும் டிசம்பர் மாத இறுதியில் கிறிஸ்மஸ் எனும் பண்டிகையை கொண்டாடுகின்றனர். அந்த காலகட்டத்தில் அந்த பண்டிகையை முன்வைத்து பெரும் ஒரு பிரச்சாரத்தையும் மேற்கொள்கின்றனர்;. கிறிஸ்மஸ் தாத்தா என்ற பெயரில் சில மனிதர்களுக்கு ஒட்டு தலைமுடி, தாடி வைத்து கேக் உள்ளிட்ட இனிப்பு பண்டங்கள் பறிமாறி தம்முடைய பிரச்சாரம், பிறரை எளிதில் எட்டுமாறு செய்கின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகை இறைத்தூதர் (இயேசு) ஈஸா  அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு கொண்டாடப்படுவதாக கிறிஸ்துவர்கள் கூறி கொள்கிறார்கள்.

இஸ்லாம் மார்க்கத்தைப்பற்றி ஓரளவே தெரிந்த முஸ்லிம்களில் சிலர், விஷயத்தின் விபரீதம் புரியாமல் கிறிஸ்மஸ் வாழ்த்து கூறுவது, கிறிஸ்துமஸ் தாத்தா எனும் வேடமிட்டு வலம் வரும் மனிதனை பார்த்து, சிரித்து மகிழ்வது என்று சில காரியங்களை செய்து வருகிறார்கள்.

இப்போது முஸ்லிம்களாகிய நாம் செய்யவேண்டியது தான் என்ன என்பதை பார்ப்போம்.

இறைத்தூதர் (இயேசு) ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் விஷயத்தில் உரிமை கோர கிறிஸ்துவர்களுக்கு எந்த தகுதியும் கிடையாது.

* (இயேசு) ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஒரே இறைவனை மட்டுமே வணங்கினார். கிறிஸ்துவர்கள் மூன்று கடவுள்களை வணங்குகிறார்கள்.

* (இயேசு) ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தன்னை தானே வணங்கி கொள்ளவில்லை. தன்னுடைய தாயாராகிய (மேரி)மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை ஒரு போதும் வணங்கவில்லை. 

* (இயேசு) ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பரலோகத்தில் உள்ள ஒரே இறைவனை மட்டுமே வணங்கினார். அந்த ஒரே இறைவனையே வணங்குமாறு பிறருக்கு உத்தரவிட்டார்.

'மஸீஹ் (இயேசு)கூறினார்: 'இஸ்ராயீலின் சந்ததியினரே! என்னுடைய இறைவனும் , உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்'.      
(உலக பொது வேதம் அல்-குர்ஆன் 5:72) 

கிறிஸ்துவர்கள் தம்முடைய சுய கற்பனை படி (இயேசு) ஈஸா அலைஹிஸ்ஸலாம், (மேரி) மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களையும் வணங்குகிறார்கள்.


தொன்று தொட்ட இறைத்தூதர்கள் (நோவா) நூஹ் அலைஹிஸ்ஸலாம், (ஆப்ரஹாம்) இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம், (மோஸே) மூஸா  அலைஹிஸ்ஸலாம் - அவர்கள் அனைவரும் ஒரே இறைவனையே வணங்கினார்கள். எனவே கிறிஸ்துவர்களின் முக்கடவுள் (திரித்துவ )வழிபாடு மாபெரும் இறைதுரோக செயலாகும். அதிலும் ஒரே இறைவன் என்பதை போதிக்க வந்த (இயேசு) ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களையே பின்னர் வணங்க ஆரம்பித்து விட்டார்கள். அந்த இறைதுரோக வழிபாட்டை பிரபலப்படுத்த் கிறிஸ்துவர்கள் கையாளும் வேத ஆதாரமற்ற உத்தி தான் இந்த கிறிஸ்மஸ் வழிபாடு.

முஸ்லிம்களாகிய நாம், இறுதி தூதர் நபீ (ஸல்), அவர்களை நேசிப்பது போலவே (இயேசு)  ஈஸா அலைஹிஸ்ஸலாம அவர்களையும் நேசிக்கிறோம். ஏனென்றால் (இயேசு) ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள்,  ஒரே இறைவன் என்ற கொள்கையை தான் போதித்தார்கள், கடைப்பிடித்தார்கள். இறுதித்தூதர் நபீ (ஸல்); அவர்களும் அந்த ஒரே இறைவன் என்ற கொள்கையை தான் போதித்தார்கள், கடைப்பிடித்தார்கள். முஸ்லிம்களாகிய நாமும் ஒரே இறைவன் என்ற கொள்கையை தான் கடைப்பிடித்து வாழ்கிறோம். இப்போது சொல்லுங்கள்... (இயேசு) ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வழிமுறையை பின்பற்றுவோர் முஸ்லிம்களா? பிதா, மகன், பரிசுத்த ஆவி என்று மூன்று கடவுளர்கள் கொள்கை கொண்ட வழிகேடர்களான கிறிஸ்துவர்களா?


எனவே, கிறிஸ்மஸ் கொண்டாட்டம் (இயேசு) ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் நேசத்திற்கான வழியல்ல என பிரகடனப்படுத்துவது முஸ்லிம்களாகிய நம்முடைய கடமையாகும்.

No comments:

Post a Comment